WhatsApp பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் பிடிக்காத ஒரு விஷயம் என்றால் அது 'Last Seen' என்ற ஒன்று தான். இது நாம் எப்போது கடைசியாக WhatsApp-ஐ பயன்படுத்தினோம் என்று நம் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு வசதி. நீங்கள் Android போன் பயன்படுத்தினால் இதை மறைக்க ஒரு வழி உள்ளது எப்படி என்று இன்றைய "கற்போம்" பதிவில் காண்போம்.
WhatsApp என்றால் என்ன என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கவும் - WhatsApp Messenger - ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு
ஏற்கனவே WhatsApp பயன்படுத்துபவர்கள் அதை தற்போதைய புதிய வெர்ஷனான WhatsApp 2.11.186 க்கு Update செய்து கொள்ள வேண்டும். [எந்த வெர்ஷன் என்று பார்க்க WhatsApp >> Settings >> Help >> About செல்லவும். பழையது என்றால் Google Play யில் My Apps க்கு சென்று Update செய்து கொள்ளவும். ]
இப்போது WhatsApp Settings பகுதியில் கீழே படத்தில் உள்ளபடி Account என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே படத்தில் உள்ளபடி Privacy என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
Privacy பகுதியில் முதல் வசதியாக படத்தில் உள்ளபடி Last Seen என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
இதில் மூன்று வசதிகள் இருக்கும். Everyone, My Contacts, Nobody என்று. படத்தில் உள்ளபடி Nobody என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இனி யாராலும் நீங்கள் கடைசியாக எப்போது WhatsApp-ஐ பயன்படுத்துனீர்கள் என்பதை பார்க்க முடியாது. அதே போல உங்களாலும் உங்கள் நண்பர்கள் கடைசியாக எப்போது WhatsApp-ஐ பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்க இயலாது :-) .
Post a Comment