WhatsApp Messenger - ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு | கற்போம்

WhatsApp Messenger - ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய சில பயன்பாடுகள் (Applications) இருக்கும். அவற்றில் மிக முக்கியமான ஒன்று WhatsApp Messenger. இதன் பயன்கள் என்ன, எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

பயன்கள்: 

இதன் மிக முக்கியமான பயன், உலகத்தில் எங்கு இருக்கும் நண்பரை வேண்டுமானாலும் இதன் மூலம் எளிதாக தொடர்பு கொள்ள இயலும். இணைய இணைப்பும், Smartphone மட்டுமே அவசியம். 

அத்தோடு இதில் File-கள் அனுப்பும் வசதியும் உள்ளது. ஆடியோ, வீடியோ, படம் என எதை வேண்டும் என்றாலும் இணைத்து அனுப்பலாம். 

முதல் ஒரு வருடத்துக்கு இலவசமாக வருகிறது இந்த வசதி. எண்ணிக்கையற்ற மெசேஜ்களை அனுப்பி மகிழலாம். 

எப்படி பயன்படுத்துவது ? 

முதலில் நீங்கள் என்ன Smartphone பயன்படுத்துகிறீர்களோ அதன் Apps Market க்கு சென்று இதை டவுன்லோட் செய்ய வேண்டும். 

Nokia S40, Symbian Mobile -களிலும் இவை இயங்குகின்றன. அத்தோடு Android, iPhone, Windows Phone, Blackberry போன்றவை. 

உங்கள் மொபைல்க்கு டவுன்லோட் செய்ய - Download WhatsApp

இதை இன்ஸ்டால் செய்யும் போது இணைய இணைப்பில் இருக்கவும். Agree and Continue கொடுத்த உடன் உங்கள் மொபைல் எண் கேட்கப்படும். 

இப்போது சிறிது நேரம் லோட் ஆகும். அடுத்து உங்கள் பெயர் கேட்கப்படும். உங்கள் நண்பர்களுக்கு என்ன பெயரில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை கொடுத்து விடுங்கள். 

இப்போது உங்கள் Phone Contact - களில் யாரெல்லாம் WhatsApp வைத்து இருந்தாலும் அவர்களை உங்கள் நண்பராய் சேர்த்து விடும். ஜிமெயில் கணக்குடன் Sync செய்து இருந்தால் அதில் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்த்து விடும். 
இப்போது யாரை தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர் பெயர் மீது கிளிக் செய்து நீங்கள் தொடர்பு கொள்ளலாம். 


இதில் படங்கள், பாடல்கள், வீடியோ சேர்க்க மேலே Pin போன்று உள்ளதை கிளிக் செய்தால் போதும். 

புதிய நண்பரை சேர்க்க அவரது தொடர்பு எண்ணை உங்கள் மொபைலில் Contact ஆக சேர்க்கவும். அவர் சேர்ந்து விடுவார். 

Group Chat, Status Change போன்ற வசதிகளும் இதில் உள்ளன. 

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

14 comments

பயனுள்ள அப்ளிகேசன்.

கடைசி வரை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே!

:D :D :D

Reply

எப்பிடி பயன்படுத்துவதுன்னு நல்லாத்தான் சொல்லிக்கொடுக்குறீங்க, அப்பிடியே ஒரு போனும் வாங்கி அனுப்பீடீங்கன்னா நல்லா இருக்கும் ஹி ஹி ஹி!

Reply

அதுல ரீசார்ஜ் பண்ணியிருப்பது அவசியம்...

:) :) :)

Reply

Colgate Salt தான் பயன்படுத்துறேன் :-)))

Reply

அப்படியே உங்கள் சம்பளத்தை எனக்கு அனுப்பி விட்டால் உங்களுக்கு ஒரு போன் ரெடி ;-)

Reply

//அதுல ரீசார்ஜ் பண்ணியிருப்பது அவசியம்//

இதையெல்லாம் நாம சொல்லனுமா.., தம்பி சிறப்பா செஞ்சிருவாப்ல :)

Reply

//
அப்படியே உங்கள் சம்பளத்தை எனக்கு அனுப்பி விட்டால் உங்களுக்கு ஒரு போன் ரெடி ;-)
//

ஹலோ ஹலோ.. தம்பி நீங்க சொல்லறது ஒன்னுமே கேக்கலை.... கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.....ஹலோ ஹலோ....

(ஸ்ஸப்பாடா எஸ்கேப்பு :D)

Reply

Webcam மூலமாக CCTV போன்று Data&Time உடன் பதிவு செய்ய நல்ல மென்பொருள் ஒன்று கூறுங்கள்....

Reply

symbianஇல் கொஞ்சம் குழப்பம் இருக்கு...

Reply

Appadiye viber pathium eluthavum ellorukkum payantarum

Reply

என்னிடம் symbian மொபைல் இல்லாத காரணத்தால் இது குறித்து பதிவில் சொல்ல இயலவில்லை. என்ன மாடல் என்று சொல்ல முடியுமா இணையத்தில் தேடித் பார்க்கிறேன்.

Reply

பயனுள்ள தகவல் (என் நண்பனுக்கு)
அவனிடம் பகிர்கிறேன்... நன்றி...

Reply

WhatsApp Messenger பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி நண்பா..

Reply

Thank you very much Prabu for your useful sharing.

Reply

Post a Comment