கடந்த சில கட்டுரைகளில் YouTube மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதை முயற்சி செய்து சில நண்பர்கள் வெற்றி பெற்றுள்ளதை பகிர்ந்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள் :). இந்த கட்டுரையில் பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இன்றைக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களை கிட்டத்த்ட்ட விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு பேஸ்புக் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. பேஸ்புக்கில் ஒரு நாளில் சராசரியாக ஒருவர் 1 மணி நேரம் பேஸ்புக்கில் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரத்தை நான் சொல்லும் படி செலவிட்டால் யாராய் இருந்தாலும் ஓரளவிற்கு சம்பாதிக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.
பேஸ்புக் பேஜ்:
இந்த முறையில் பேஸ்புக் பேஜ்கள் மிக முக்கியமான வேலையை செய்கின்றன. இன்றைக்கு பேஸ்புக்கில் நாம் பல பேஜ்களை லைக் செய்து தொடர்ந்து வருகிறோம். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இணையதளங்கள், நிறுவனங்கள் என்று பல. இது மட்டுமின்றி தனிநபர்கள் தொடங்கும் பேஸ்புக் பேஜ்களும் நம் மத்தியில் பிரபலம். Troll Pages, Meme Pages என பல இதில் அடக்கம். இவற்றில் தனி நபராக இரண்டாவதை நீங்கள் செய்ய முடியும்.
பேஜில் என்ன செய்ய வேண்டும்?
பேஸ்புக் மூலம் சம்பாதிக்க நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒரு பேஸ்புக் பேஜ் உருவாக்க வேண்டும் [எப்படி பேஸ்புக் உருவாக்குவது என்பதை www.karpom.com இல் படிக்கலாம் ]. மேலே சொன்னது போல Troll, Meme போன்றவற்றை அதில் பகிரலாம். YouTube போலவே இதிலும் Copyright என்பது உள்ளது. எனவே வீடியோ, போட்டோக்களை பகிரும் போது கவனம் அவசியம். அடுத்தவர்களுக்கு சொந்தமானதை பகிர்ந்தால் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.
அப்படி பார்த்தால் பெரும்பாலானவை அடுத்தவர்களுக்கு சொந்தமானது தானே என்ற கேள்வி எழலாம். Troll, Meme போன்றவற்றில் நீங்கள் சினிமா அல்லது வேறு நபர்களுக்கு சொந்தமானதை பகிர்ந்தாலும் அதில் உங்கள் க்ரியேட்டிவிட்டி இருக்கும் பட்சத்தில் அதை Fair Use என்று கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இதை அனுமதிக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு சொந்தமானதை அப்படியே உங்கள் பேஜில் பகிரும் போது குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் அனுமதி பெற்றும் பகிரலாம்.
இது எல்லாமே பேஜில் நீங்கள் லைக்ஸை அதிகமாக்க மட்டுமே. இதன் மூலம் நிறைய லைக்ஸ் பெற முடியும். நிறைய லைக்ஸ் என்றால் நிறைய ஆடியன்ஸ்.
எப்படி பணம் சம்பாதிப்பது?
இந்த தொடரின் முதல் கட்டுரையில் எப்படி ஒரு இணையதளம்/ப்ளாக் தொடங்குவது என்று சொல்லி இருந்தேன். அது மாதிரியான தளங்களை கொண்டிருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வர வைக்க பல ப்ரமோஷன்களை செய்கிறார்கள். அதில் சில தளங்கள் பேஸ்புக் பேஜ்கள் மூலம் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வரவழைத்தால் குறிப்பிட்ட பேஜ் அட்மின்களுக்கு பணம் கொடுப்பார்கள். எவ்வளவு வாசகர்கள் வருகிறார்களோ அதற்கேற்றார் போல பணம் கிடைக்கும். நீங்களும் உங்கள் பேஸ்புக் பேஜில் அந்த தளங்களின் பதிவுகளை பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இந்த தளங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் தான் இருக்கும். தமிழில் இதுவரை எதுவும் அப்படி கிடையாது.
Viral9
இது இந்தியாவை சேர்ந்த தளம். இதில் அக்கவுண்ட் உருவாக்க உங்கள் பேஜ் 50000 லைக்குகளை கொண்டிருக்க வேண்டும். தினமும் எந்த போஸ்ட் அதிகமாக பார்க்கப்படுகிறது உட்பட பல ஐடியாக்களை கொடுக்கிறார்கள். எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை உடனடியாக பார்க்கும் வசதி இதன் சிறப்பு. இந்திய தளம் என்பதால் கொஞ்சம் பாலிவுட், இந்தியா பற்றிய பதிவுகளை இதில் பார்க்க முடியும்.
100$ சம்பாதித்த உடன் உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். மாத முறையில், நமக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
தள முகவரி - www.viral9.com
MyLikes
வைரல்9 போலவே தான் இதுவும். ஆனால் இவ்வளவு லைக்ஸ் தேவை என்ற கட்டுப்பாடு இதில் இல்லை. எத்தனை லைக்ஸ் இருந்தாலும் எளிதில் அக்கவுண்ட் உருவாக்கி கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளி அன்று அல்லது மாதாமாதம் பணம் உங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.
இதில் 3 வழிகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம். Paypal மூலம் பெற 20$ உங்கள் கணக்கில் இருந்தால் போதும். இந்த முறையை ஒவ்வொரு வாரமும் பணம் பெற்றுக் கொள்ளலாம். வங்கி கணக்கில் பெற அக்கவுண்டில் 50$ இருக்க வேண்டும். இதில் மாதாமாதம் பணம் கிடைக்கும். Amazon Gift Card என்பது மூன்றாவது வழி. இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் Amazon தளத்தில் பொருட்களை வாங்கலாம்.
Fan2Cash
இந்த தளமும் மேலே உள்ளவற்றை போலவே தான். இதில் குறைந்தபட்சம் 200$ சம்பாதித்து இருந்தால் மட்டுமே வங்கி கணக்கில் பணம் பெற முடியும். இதில் அக்கவுண்டை உருவாக்க குறைந்தபட்ச லைக்ஸ் எதுவும் இருக்க தேவையில்லை.
Post a Comment