இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 3 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 3

கடந்த மாத கட்டுரையில் YouTubeஇல் ஒரு வீடியோயை எப்படி அப்லோட் செய்வது & பப்ளிஷ் என்பதை பார்த்தோம். இதில் அதன் தொடர்ச்சியாக அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது & YouTubeஇல் என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.


நீங்கள் Video Manager-இல் இருக்கும் போது இடது பக்கம் Channel என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது Status and Features பகுதியில் Monetization என்பதை Enable செய்ய வேண்டும். அடுத்து Enable My Account என்பதை க்ளிக் செய்யுங்கள். Monetization Enable ஆன பிறகு வீடியோ மேனேஜர் பகுதிக்கு வந்து விடுவீர்கள். இப்போது மறுபடி Channel என்பதை க்ளிக் செய்யுங்கள்.

இப்போது Monetization என்பதற்கு அருகில் பச்சை நிற ஐகான் இருக்கும். அதற்கு அருகில் View monetization settings என்று இருக்கும். அதை கிளிக் செய்து “How Will I Be Paid” என்பதை கிளிக் செய்து associate an AdSense account என்பதை கிளிக் செய்ய வேண்டும். [இதற்கும் ஆட்சென்ஸ் மூலமே பணம் வரும்]. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்து ஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் அதில் லாகின் செய்து கொள்ளலாம். புதிய கணக்கு எனில் சில மணி நேரங்களில் Approve ஆகிவிடும். ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் உடனே இணைக்கப்பட்டு விடும்.

உங்கள் ஆட்சென்ஸ் கணக்குடன் YouTube Account இணைக்கப்பட்டு விட்டால் Channel >> Monetization என்பதில் "The AdSense account you associated is now approved" என்று வர வேண்டும்.

Review or change AdSense association பகுதியில் உங்கள் Adsense ID, இணைக்கப்பட்ட தேதி, Status போன்ற தகவல்களை பார்க்கலாம்.

ஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கு உருவாக்கிய பின்னர் அல்லது ஏற்கனவே உள்ளதை இணைத்த பின் Video Managerஇல் ஒரு வீடியோவில் Edit கொடுக்கும் போது Basic Info, Translationsக்கு அருகில் Monetization என்றொரு வசதி இருக்கும். அதில் Monetize with ads என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் என்னென்ன Ad Format வர வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். இதில் எல்லாவற்றையும் தெரிவு செய்து கொள்வது நல்லது.

உங்கள் வீடியோ 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் Mid-Roll Ads என்ற ஒரு வசதி அதிகமாக வரும். இதன் மூலம் வீடியோவின் நடுவில் நீங்கள் விரும்பும் இடத்தில் ஒரு விளம்பரம் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு 5 அல்லது 7 நிமிடத்திற்கும் இந்த விளம்பரத்தை வைக்கலாம். 10 நிமிட வீடியோ என்றால் ஒரு Mid-Roll விளம்பரமும், 15 நிமிட வீடியோ என்றால் இரண்டும் வைக்கலாம். அதிகமாகும் போது அதற்கேற்றார் போல வைத்துக் கொள்ளலாம்.

இதை செய்து முடித்தவுடன் Save Changes என்பதை கிளிக் செய்து Save செய்து விட்டால் வேலை முடிந்தது.

ஆட்சென்ஸ் போலவே தான் இதுவும். உங்கள் வீடியோவை நிறைய பேர் பார்த்தால் தான் உங்களுக்கு அதிகம் பணம் வரும். வீடியோவை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம். உங்கள் வீடியோ நன்றாக இருந்து நிறைய பேர் அதை பகிரும் பட்சத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதை Analytics பகுதியில் பார்க்கலாம். ஒரு வீடியோ அப்லோட் செய்த இரண்டு நாட்களுக்கு பிறகு இது அப்டேட் ஆகும். [Analytics பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்]

இப்போது எப்படி Monetization செய்வது என்பதையும் பார்த்து விட்டோம். இனி சில முக்கியமான விஷயங்களை பாயிண்டுகளாக பார்ப்போம்.

1. வெறுமனே வீடியோவை மட்டும் அப்லொட் செய்து பப்ளிஷ் செய்து விட்டால் நிறைய பேர் பார்த்து விட மாட்டார்கள். வீடியோவை பப்ளிஷ் செய்யும் போது ரொம்ப முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் Custom Thumbnail அப்லோட் செய்வது. இது ஒரு வீடியோவிற்கு Title, Description, Tags கொடுக்கும் இடத்தில் இருக்கும். இதன் மூலம் உங்கள் வீடியோவிற்கும் நீங்கள் விரும்பிய படத்தை Thumbnail ஆக வைக்கலாம். Thumbnail என்பது உங்கள் வீடியோ பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எதேனும் தளங்களிலோ பகிரப்படும் போது Title, Description உடன் வரும் ஒரு படம்.

ஏற்கனவே இருக்கும் Default Thumbnailகளை பயன்படுத்தாமல் நீங்களே ஒன்றை வைப்பதன் மூலம், பார்ப்பவர்களுக்கு வீடியோவின் முக்கியதுவத்தை உணர்த்தலாம். இதன் மூலம் YouTube தேடுதலில் உங்கள் வீடியோவை நிறைய பேர் க்ளிக் செய்யும் வாய்ப்புகளும் அதிகம்.

2. Custom Thumbnail போலவே தான் Title, Tag, Description போன்றவையும். ஒரு வீடியோவிற்கு இவை ரொம்பவே முக்கியமானது. இதில் Title & Description போன்றவை வீடியோவை பார்ப்பவர்களுக்கு தெரியும் விஷயங்கள். இவை தெளிவாகவும் மிகச்சரியாகவும் இருக்க வேண்டும்.

உதாரணமாக their trailer review vijay, samantha/ theritrailerreviewvijaysamantha/THERI TRAILER REVIEW VIJAY, SAMANTHA - இது மூன்றுமே சரியல்ல. வீடியோவை பார்க்கும் நபர்களையும் பகிரும் நபர்களையும் இவை எளிதில் ஈர்க்காது. “Their Trailer Review | Vijay, Samantha” என்பது மிகச் சரியானது.

அதே போல Description பகுதியில் வீடியோ குறித்து சில வரிகள் எழுதலாம். இதனால் டைட்டிலில் இல்லாத வார்த்தைகள் கொண்டு வீடியோவை தேடும் போதும் உங்கள் வீடியோ வர வாய்ப்புள்ளது.

Description பகுதியில் வீடியோ குறித்த தகவல்களை கொடுத்த பின்னர் உங்கள் சேனல் பற்றியோ அல்லது உங்களை பற்றியோ சில வரிகள் எழுதலாம். இதில் உங்கள் பேஸ்புக், ட்விட்டர் பக்க முகவரிகளை கொடுத்து வீடியோவை பார்ப்பவர்களை உங்களை லைக் அல்லது பின் தொடர சொல்லலாம். உங்கெளுக்கென்று வெப்சைட் இருக்கும் பட்சத்தில் அதை பற்றியும் குறிப்பிடலாம்.

Tags என்பது வீடியோவை தேடும் போது பார்ப்பவர்கள் என்னென்ன வார்த்தைகளை கொண்டு தேடுவார்கள் என்பதை கணித்து கொடுப்பது. உதாரணமாக மேலே சொன்ன Theri Trailer Review என்பதையே எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முக்கியமான Keywords - Theri, Trailer, Review, Vijay, Samantha, Amy Jackson, Atlee, G.V.Prakash Kumar, Nainika, Rating, Vimarsanam. இவை தவிர வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும் வார்த்தைகளாக கொடுக்கலாம். ஒரே வார்த்தையை மறுபடி மறுபடி பயன்படுத்தாமல் புதிய வார்த்தைகளை பயன்படுத்துவது சிறந்தது.

Title, Tag, Description, Thumbnail இந்த நான்கிலுமே மிக முக்கியமாக செய்ய கூடாத விஷயமும் இருக்கிறது. தேவையற்ற தவறான தகவல்களை தருவது. இதனால் வீடியோ பார்ப்பவரை நீங்கள் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். இதனால் வீடியோ ஆரம்பித்த சில நொடிகளில் வீடியோவை பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனால் உங்கள் சேனலுக்கு தான் பிரச்சினை.

உதாரணமாக Theri Trailer Review வீடியோவில் நீங்கள் //2016 New Movie, Free New Movies, Download Theri Movie, Watch Theri Movie// போன்றவற்றை எங்கேயுமே கொடுக்க கூடாது.

4. ஆரம்பத்தில் நீங்கள் வீடியோவை அப்லோட் செய்யும் போது 15 நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்களை மட்டுமே அப்லோட் செய்ய முடியும். அதற்கும் அதிகமான நேரமுள்ள வீடியோவை அப்லோட் செய்ய வேண்டுமெனில் Channel >> Longer Videos பகுதியில் உங்கள் போன் மூலம் Verify செய்ய வேண்டும்.

அடுத்த கட்டுரையில் எளிதான முறையில் ஒரு வீடியோவை எப்படி எடிட் செய்வது என்று பார்ப்போம்.

Post a Comment