இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 2 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 2

முதல் கட்டுரையில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் பெரும்பாலனவர்கள் செய்யும் முதல் வழியை பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது இன்னொரு முக்கியமான வழி.



YouTube:

பெரும்பாலானோர்க்கு YouTube பற்றி தெரிந்திருக்கும். இணையத்தில் வீடியோ ஒன்றை பார்க்க விரும்பினாலே நம் முதல் சாய்ஸ் அது தான். இதனால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்கு YouTube ஒரு வரபிரசாதம் என்று கூறலாம்.

YouTubeம் ஒரு கூகுள் ப்ராடக்ட் தான். இதில் வீடியோக்களை நாம் பார்ப்பது போலவே, நாம் நினைக்கும் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதியில் உள்ளது. இப்படி அப்லோட் செய்வதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்க முடியும். இணையத்தில் அதிகமாக வீடியோ பார்ப்பவர்கள் என்றால் Tamil Talkies, Smile Web Radio, Madras Meter போன்றவை பற்றி தெரிந்திருக்கும் அவர்கள் அப்லோட் செய்யும் வீடியோவை பார்க்கும் போது அதில் விளம்பரங்கள் வரும். இதன் மூலம் தான் அவர்களுக்கு பணம் கிடைக்கும். இதை நீங்களும் செய்யலாம்.

முதல் விஷயம். இதற்கு கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு அவசியம். கேமரா இருப்பின் அதன் மூலம் வீடியோவை ரெகார்ட் செய்து கொள்ளலாம். அதன் பின் அதை YouTubல் அப்லோட் செய்வதற்கு முன் வீடியோவில் தேவையில்லாதவற்றை எடிட் செய்து நீக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு வீடியோவை எடிட் செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்தவரின் உதவி வேண்டும். கேமரா இல்லையென்றாலும் கவலை இல்லை வீடியோ ரெகார்ட் எதுவுமே செய்யாமல் கூட YouTubeஐ பயன்படுத்தலாம்.

போன் மூலம் ரெகார்ட் செய்யலாமா என்று கேட்டால் வேண்டாம் என்று தான் சொல்வேன். வீடியோவை பார்ப்பவர்களுக்கு போன் மூலம் ரெகார்ட் செய்தது என்றால் வீடியோ & ஆடியோ குவாலிட்டி இதில் சரியாக இருக்காது.

இப்போது YouTubeல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டே நீங்கள் ஒரு YouTube அக்கௌன்ட் உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் YouTube கணக்கில் லாகின் செய்த பிறகு, வலது பக்கம் அப்லோட் என்றொரு வசதியை பார்க்கலாம். முதல் முறையாக அப்லோட் என்பதை கிளிக் செய்தால் உங்கள் சேனலை உருவாக்கிக் கொள்ளும்படி YouTube கூறும். பெயர் கொடுத்தவுடன் சேனல் உருவாகிவிடும். இப்போது வீடியோவை அப்லோட் செய்ய ஆரம்பிக்கலாம்.

இனி செய்ய வேண்டியது தான் முக்கியமான விஷயம். என்ன வகையான வீடியோக்களை அப்லோட் செய்வது என்பது ரொம்பவே முக்கியம். நீங்கள் உங்கள் சொந்த வீடியோக்களை அப்லோட் செய்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். திரைப்பட பாடல்கள், காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அடுத்தவர்களின் வீடியோ உட்பட உங்களுக்கு சொந்தமில்லாத எதையும் அப்லோட் செய்யக் கூடாது. இதனால் நிச்சயம் உங்கள் YouTube அக்கவுண்ட் நீக்கப்பட்டு விடலாம் அல்லது பணமே கிடைக்காது.

நீங்கள் சமையல் செய்வதில் வல்லவராக இருந்தால் அது பற்றிய வீடியோக்களை அப்லோட் செய்யலாம். திரைப்படங்களை விமர்சனம் செய்யலாம் அல்லது குறும்படம், கல்வி, தொழில்நுட்பம் சம்பந்தமான வீடியோ போன்றவற்றை அப்லோட் செய்யலாம். இது தவிர எண்ணற்ற வழிகள் உள்ளன.

கேமரா இல்லாத அல்லது வீடியோவில் வர விரும்பாத நபர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக சினிமா பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்பவர் என்றால் அது பற்றிய செய்திகளை ஆடியோவாக ரெகார்ட் செய்து அதை வீடியோவாக உருவாக்கி கொள்ளலாம். இதே போல அரசியல், பொது அறிவு என பலவற்றையும் ரெகார்ட் செய்து வெறும் புகைப்படங்களை மட்டும் வைத்து ஒரு வீடியோ உருவாக்கி அப்லோட் செய்யலாம். ஆனால் இதில் முக்கியமான விஷயம் நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் Copyrighted ஆக இருக்ககூடாது.

அதே போல கணினியில் பயன்படுத்தும் மென்பொருட்கள், கேம்கள் பற்றி அதிகம் தெரிந்திருப்பின் அதை Screen-Record & Voice-over செய்து அப்லோட் செய்யலாம். இவையும் ரொம்பவே பிரபலமான வழிகள்.

உங்கள் வீடியோவை எடிட் செய்து அப்லோட் செய்த பின் வீடியோ மேனேஜர் பகுதியில்[Creator Studio>>Video Manager] வீடியோவின் கீழ் எடிட் என்பதை கிளிக் செய்தால் Basic Info, Translations போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் Basic Info பகுதியில் வீடியோவின் Title, Description, Tags போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் YouTubeஇல் ஒருவர் தேடும் போது உங்கள் வீடியோ அவருக்கு வர வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இதை ஆங்கிலத்தில் கொடுப்பது நல்லது. வீடியோவை Public, Private & Unlisted என்று என்று மூன்று நிலைகளில் வைத்துக் கொள்ளலாம்.

பப்ளிக் என்று இருந்தால் தான் அனைவரும் உங்கள் வீடியோவை பார்க்க முடியும், இணையத்தில் தேடும் போது வரும் அத்தோடு பணமும் கிடைக்கும். பிரைவேட் என்று இருந்தால் நீங்கள் மட்டும் தான் பார்க்க முடியும். Unlisted என்றால் Video URL இருப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்.

அடுத்து உள்ள Translations பகுதியில் Original Language என்பது ஆங்கிலம் ஆகவும் Translate into என்பதில் வேறு மொழிகளையும் தெரிவு செய்து குறிப்பிட்ட மொழியில் வீடியோ பற்றிய தகவல்களை தரலாம். இங்கே தமிழ் உட்பட பல மொழிகளை பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் செய்து முடித்தவுடன் Save Changes என்பதை கிளிக் செய்து Save செய்து விட்டால் உங்கள் வீடியோவை இனி மற்றவர்கள் பார்க்கலாம்.

இப்போது இந்த வீடியோக்கள் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். அதை அடுத்த கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.

Post a Comment