இதுவரை இந்தியாவில் Full HD எனப்படும் 1080p வகை வீடியோக்களை மட்டுமே ரசித்து வந்த நமக்கு முதல் முறையாக 4K UHD (2160p) வகை வீடியோவை முதல் முறையாக YouTubeஇல் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம்.
"பாலிவுட் படங்கள் கூட இதுவரை 4K குவாலிட்டியை முயற்சி செய்யாமல் இருக்க முதல் முறையாக நாங்கள் தான் இந்தியாவில் YouTubeமூலம் இதை கொண்டு வந்துள்ளோம்" என்று சோனி நிறுவன மார்கெட்டிங் டைரக்டர் Sanujeet Bhujabal தெரிவித்துள்ளார். அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்பவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மேலே உள்ளவற்றின் ரெசொல்யூசன்களை கீழே காணுங்கள்.
VCD | 352×288 Pixels |
DVD | 720×576 pixels |
HD (720p) | 1280×720 pixels |
Full HD (1080p) | 1920×1080 pixels |
4K Ultra UD (2160p) | 3840 × 2160 Pixels |
தற்போது நாம் பயன்படுத்தும் வீடியோ ரெசொல்யூசன் 2K எனப்படும் 1080p ஆகும். இது அதிகபட்ச குவாலிட்டி. இந்தியாவில் நிறைய பேர் இன்னும் VCD குவாலிட்டியில் தான் பார்க்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 4K வீடியோ ரெசொல்யூசனுக்கும், நாம் பயன்படுத்தும் Full HD வீடியோ ரெசொல்யூசனுக்கும் என்ன வித்தியாசம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெளிவாக புரியும்.
இந்தியாவில் ரஹ்மானின் "ரானாக்" ஆல்பத்தில் இருந்து "Aabhi Jha" என்ற பாடலின் வீடியோ 4K குவாலிட்டியில் தற்போது YouTube இல் உள்ளது. அதை கீழே காணலாம்.
உங்கள் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருந்தால் குவாலிட்டி குறைவாக ப்ளே ஆகும். 4K வில் பார்க்க கீழே படத்தில் உள்ளபடி செய்யவும்.
யாமி கெளதம் ரசிகர்களை வீடியோவில் உள்ள மற்ற விசயங்களையும் பார்க்குபடி கேட்டுகொள்கிறேன்.
Post a Comment