இணையத்தின் இரண்டு மாபெரும் நிறுவனங்களான Google மற்றும் Mozill சமீபத்தில் இரண்டு புதிய விசயங்களை அறிமுகம் செய்துள்ளன. Google அதன் Terms of Serviceஇல் ஒரு மாற்றத்தையும், Mozilla Adobe Flash Player க்கு மாற்றாக புதிய Flash Player ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.
Google Terms of Serviceஇல் மாற்றம்:
Google, Google+ நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், தரப்படுத்தல், logoபடம் (comments, ratings photos) போன்றவற்றை தனக்கு சாதகமாக விளம்பரங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் நவம்பர் 11 இல் இருந்து செயல்பட தொடங்கும். அந்த முறையை விரும்பாதவர்கள் settings இல் சென்று disable செய்து கொள்ளலாம். அப்படி செய்யாவிட்டால்,உங்கள் கருத்துக்கள் உங்கள் பட லோகோ வுடன் படத்தில் உள்ளது போல் வெளியாகும்.
இதை தடுக்க நீங்கள் Shared Endorsements என்ற பக்கத்தில் "Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads." என்பதை Uncheck செய்து விடுங்கள்.
Mozilla வின் Shumway-Flash Player:
Mozilla Firefox பலர் விரும்புவதற்குக் காரணம் பல Extensions & Plug-ins கள் கிடைப்பதும், அவற்றை நாம் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பதாலும் ஆகும். இந்த Mozilla Firefox 2002 September 23 இல் Phonix 0.1 ஆக Dave Hyatt, Blake Ross என்பவர்களால் தொடங்கப்பட்டு BIOS தயாரிப்பாளர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக Mozilla Firefox ஆக மாற்றம் பெற்று November 9, 2004 இல் Mozilla Browser Firefox-1.0 என வெளியிடப்பட்டது.
தொடர்ந்து வெற்றிப் பாதையில் வந்த Mozilla, தற்போது 2013 செப்.17 இல் Firefox 24 ஐயும், Firefox 24 ESR ஐயும், Firefox Nightly builds (version 27) -Beta வையும் வெளியிட்டுள்ளது. இந்த Firefox Nightly builds (version 27) இல் Flash Player ற்குப் பதில் 64 bit ற்கு ஏற்புடையதும், HTML5 and JavaScript அடிப்படையிலும் Shumway என்ற புதிய flash player ஐயும் அறிமுகப்படுத்தி உள்ளது.
1997 இல் Macromedia வால் உருவாக்கப்பட்ட Macromedia’s Flash Player 2005 இல் Adobe நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த adobe flash player ஆனது SWF files (ShockWave Flash-Small Web Format ) களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த adobe flash player ற்கு விடை கொடுக்கிறது Shumway Flash Player. பரீட்சிக்க விரும்புவோர் Firefox Nightly builds (version 27) -Beta இல் Shumway ஐ enable செய்து பார்க்கலாம்.
21 ஜனவரி 2014 இல் Firefox 27 உடன் வரவிருக்கும் Shumway கணினி விளையாட்டுக்கள், வீடியோக்களுக்கு நன்றாக இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்.
- சக்தி
இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.
Post a Comment