Micromax Canvas 4 - அசத்தலான வசதிகளுடன் 17,999 ரூபாய்க்கு அறிமுகமானது | கற்போம்

Micromax Canvas 4 - அசத்தலான வசதிகளுடன் 17,999 ரூபாய்க்கு அறிமுகமானது

கடந்த மாதம் முதலே இந்தியாவில் மொபைல் பயனர்களால் மிக அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட போன் Micromax Canvas 4. சிறு சிறு விளம்பரங்களுடன் கடந்த மாதம் 28 ஆம் தேதி இதை Pre-book செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது Micromax நிறுவனம். 11,500 பேர் ஆன்லைன் மூலம் புக் செய்திருந்த நிலையில் நேற்று டெல்லியில் இந்த போன் அறிமுகமானது.பல அசத்தலான வசதிகளுடன் வந்துள்ள இந்த போனின் விலை 17,999 ரூபாய் மட்டுமே.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகளுடன் Continous (Burst) mode, Smile detection, Photosolid, High Dynamic Range Synthesis, 4 direction Panorama, Effects Library போன்ற புதிய வசதிகளும் உள்ளன. அதே போல முன்னாலும் ஒரு 5 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 5 Inch TRU-IPS HD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, G-Sensor ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz MediaTek 6589 quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

கேமராவின் புதிய வசதிகளில் 4 direction Panorama மூலம் Panorama வகையான Shot கேமராவை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். Burst mode மூலம் 15 நொடிகளில் 99 போட்டோக்களை எடுக்க முடியும், Effects Library மூலம் எடுத்த போட்டோக்களை மெருகேற்றலாம்.

அத்தோடு இந்த போனில் ஒரு வீடியோ பார்க்கும் போது கணினியை போல வீடியோ screen ஐ சிறிதாக்கி வேறு SMS, Email அனுப்புவது போன்ற வேலைகளை பார்க்கலாம். இதை Unlock செய்ய போனின் அருகில் சென்று ஒரு முத்தம் கொடுத்தால் போதும் ;-). குறிப்பிட்ட Call ஒன்றை Cut செய்ய போனை எடுத்து கவிழ்த்து வைத்தால் போதும் Ringtone Silent ஆகி விடும். பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்பீக்கரில் மாற்ற போனை கவிழ்த்தால் போதும்.

இன்னும் பல வசதிகள் உள்ளன. போன் வாங்கிய பின் அதை சொல்கிறேன் :-)

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Micromax Canvas 4 A210 Specifications

Operating SystemAndroid 4.2.1 Jelly Bean
Display5.5 inch (1280 x 720 pixels) TRU-IPS HD capacitive touch screen
Dual SimYes, Dual Sim, GSM+GSM and Dual Standby
Processor1.2 GHz MediaTek 6589 Quad Core processor
RAM1 GB RAM
Internal Memory16 GB Internal Memory 
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 13 MP, 4128 x 3096 pixels, autofocus, LED flash,  Full HD Recording
Front Camera: 5 MP
Battery2000 mAh battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

RAM மற்றும் MediaTek Processor தவிர கொடுக்கும் விலைக்கு அதிகமான வசதிகள் பல உள்ளன இந்த போனில். போன் ஆர்டர் செய்திருப்பதால் மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம். 

தகவல் - Specs Of All
-பிரபு கிருஷ்ணா

Post a Comment