Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம்.
1. RMC: Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card - இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.
தரவிறக்க - RMC: Advance Call Recorder
2. Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card - இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.
தரவிறக்க - Call Recorder
3. Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.
தரவிறக்க - Automatic Call Recorder
பின்குறிப்பு: உங்கள் போனில் உள்ள Microphone மூலமே ரெகார்ட் ஆவதால் Loudspeaker - இல் பேசினால் தெளிவாக ரெகார்ட் ஆகும்.
Post a Comment