எப்போது நாம் பேஸ்புக்கில் நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Game மற்றும் Application Request களை தந்திருப்பார்கள். அது போன்ற அழைப்புகளை நாம் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது.
அவற்றை தடுக்க முன்பு Privacy Settings பகுதியில் Block செய்யும் முறையை பகிர்ந்திருந்தேன். இம்முறை சொல்லப்போகும் வழி இன்னும் எளிதானது.
உங்களுக்கு வந்திருக்கும் Request -கள் வலது புற Side Bar பகுதியில் இருக்கும்.
இப்போது அதன் மீது Mouse ஐ Hover செய்தால் வலது புறம் ஒரு சிறிய பெருக்கல் குறி (X) தோன்றும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
அதில் இரண்டு வசதிகள் இருக்கும் ஒன்று Remove All Requests மற்றொன்று Block. Block என்பதில் Game பெயரும் இருக்கும்.
Remove All Requests என்பதை கொடுத்தால் தற்போது வந்துள்ள Game மற்றும் Application Request கள் நீக்கப்பட்டு விடும். Block என்பதை கிளிக் செய்து பின்னர் Confirm செய்தால் குறிப்பிட்ட Game அல்லது Application ஐ நீங்கள் Block செய்து விடலாம்.
மறுபடி வேறு நண்பர்கள் குறிப்பிட்ட Game அல்லது Application Request ஐ உங்களுக்கு அனுப்பும் போது அது வராது.
- பிரபு கிருஷ்ணா
14 comments
face book தொல்லைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை காட்டியதற்கு எத்தனை நன்றிகளை வேண்டுமானாலும் சொல்லலாம்,
Replyஎனக்கு இன்னுமொரு சந்தேகம். நம் பிளாக்கில் g+1 என்று வருகிறது. நான் கூகுள் பிளஸ் இல் இருக்கிறேன். சில பதிவுகளுக்கு g+1 ற்கு அருகில் 1,2,3, என்று எங்கள் வருகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? நேரம் கிடைக்கும் போது விளக்குங்களேன்.
Replyமீகவும் பயன்னுள்ள பதிவு
Replyஎத்தனை நபர்கள் உங்கள் போஸ்ட்டை Plus செய்துள்ளார்கள் என்பதன் கணக்கு அது.
Replyஇனி இம்சை இல்லை... நன்றி...
Replyமிக்க நன்றிங்க
Replyகோபித்துக் கொள்ள வேண்டாம் .இன்னும் எனக்குப் புரிய வில்லை. plus செய்துள்ளார்கள் என்றால் என்ன செய்திருக்கிறார்கள்?
Replyபுதிய தகவலுக்கு நன்றி நண்பா.
ReplyGoogle Plus இல் உங்கள் பதிவை Share பண்ணியவர்களின் கணக்கு
Replyநன்றி அஷ்ரப் ஹான் எனக்கு புரிய வைத்ததற்கு.
ReplyTag செய்வதை தடுக்க ஏதாவது வழி இருக்கா?
Replyread this post
Replyhttp://www.karpom.com/2012/06/unwanted-facebook-photo-tag_06.html
nice post, more advertisement must for this website to develope...
Replynice post, more advertisement must for this website to develope...
ReplyPost a Comment