Google Play Movies தற்போது இந்தியாவிலும் | கற்போம்

Google Play Movies தற்போது இந்தியாவிலும்

டெக் உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா என்பதை கொஞ்சம் தாமதமாகத் தான் கூகுள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. Google Play Books, Nexus 7 போன்றவற்றை போலவே Google Play Movies தற்போது கொஞ்சம் தாமதமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. 



எல்லாமே ஆங்கில திரைப்படங்களாக தான் உள்ளது. ஹாலிவுட்  பட ரசிகர்களுக்கு இது பலனளிக்கும். இவற்றை டவுன்லோட் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் கணினி அல்லது ஆன்ட்ராய்ட் போனில் இணைய இணைப்பின் மூலம் பார்த்துக் கொள்ளலாம். 

படங்களை நீங்கள் வாடகைக்கு வாங்கலாம் அல்லது முழு விலை கொடுத்தும் வாங்கலாம். வாடகை விலை ரூபாய் 80 - இல் இருந்து தொடங்குகிறது. 

படங்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SD மற்றும் HD என இரண்டு Version - களில் படம் கிடைக்கும். SD யின் விலை HD ஐ விட குறைவு. ஆனால் HD வீடியோ தான் அதிக தரமானது என்பது உங்களுக்கே தெரியும். TED என்ற சமீபத்திய ஆங்கில திரைப்படத்தின் விலை கீழே உள்ளது.



தேவையானவை: 

Google Play Movies - இல் படங்களை வாங்கி பார்க்க தேவையானவை 

  • Adobe Flash Player 10.0.22+ 
  • Google Chrome, Firefox 1.1+, Internet Explorer 7.0+, Safari 1.0+ or Opera - இதில் ஏதேனும் ஒரு உலவி
  • 500+ Kbps வேகம் உள்ள இணைய இணைப்பு
  • Ubuntu/Linux பயனர்கள் HAL module இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
தகவல் - Specs Of All
 - பிரபு கிருஷ்ணா

4 comments

விலை அதிகமா இருக்கு... பத்து ரூபாய்க்கு கொடுத்தா பார்க்கலாம்... :D

Reply

தகுந்த தகவல் சகோ... நன்றி!!

Reply

For certain services, its worth paying little extra.. Its way cheaper than going to a Mall.

If the response is high/low, then google might slash the prices.

Reply

\\விலை அதிகமா இருக்கு... பத்து ரூபாய்க்கு கொடுத்தா பார்க்கலாம்... :D\\
MEE TOO....

Reply

Post a Comment