Android பயனர்கள் பலருக்கும் கூகுள் Product ஒன்றை வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்து வருகிறது. Update, வசதி மற்றும் விலை போன்றவை தான் அதற்கு காரணம். நீங்கள் இந்தியாவில் இருந்தால் அந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது.
ஆம் கூகுள் நிறுவனம் Nexus 7 Tablet ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூபாய் 15,999*. ஏப்ரல் 5 முதல் Ship செய்யப்படும். இப்போதே ஆர்டர் செய்யலாம்.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில்(!!!) இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 1.2 MP கேமராவை முன்னால் கொண்டுள்ளது.இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும்.
இது 7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB. Micro-SD கார்டு உள்ளிடும் வசதி இல்லை. அத்தோடு இது Li-Ion 4325 பேட்டரியுடன் வருகிறது.
இவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதில் Sim Card உள்ளிடும் வசதி இல்லை. ஆதலால் இது GSM Device கிடையாது. இதன் எடை 340 கிராம்கள் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Google Nexus 7 Specifications:
Operating System | Android 4.1 (Jelly Bean) OS. |
Display | 7inch IPS LCD Capacitive Touch Screen Diplay with resolution of 1280 x 800 pixels. |
Processor | 1.2 GHz Quad-core processor |
RAM | 1GB RAM |
Internal Memory | 16 GB |
External Memory | No |
Camera | Front Camera: 1.2 MP |
Battery | Li-Ion 4325 |
Features | WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
வெளிநாட்டு Product ஒன்றை வாங்க வேண்டும், கூகுள் நிறுவன வெளியீட்டை வாங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இதை வாங்கலாம். கொடுக்கும் விலைக்குரிய வசதிகள் உள்ளன.
* - விலை Update செய்த தேதி 26-03-2013.
-பிரபு கிருஷ்ணா
3 comments
What...........cant use sim?
Replyivlo vela kuduthu vangumbothu ithu ilana epadi? apa phone a use pana mudiyaathu...
It's WIFI version. 3G version also available with only 32 GB. Here in Singapore $500.
Replyநான் ஆப்பிளுக்கு மாற போறேன்! :)
ReplyPost a Comment