நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே.
Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும்.
இந்த பதிவில் Firefox Portable Browser - ஐ பயன்படுத்தி உள்ளேன்.
டவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive - இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது.
அடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இதில் நீங்கள் இயங்குவது History - இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive - இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்ன மென்பொருட்களை பயன்படுத்தலாம் ?
இதில் எல்லா மென்பொருட்களையும் பயன்படுத்த முடியாத வசதி இருப்பினும் Chrome, Firefox, 7-Zip, Google Talk, FileZilla, Free Download Manager, GIMP, OpenOffice, LibreOffice, Inkscape, Skype, Sumatra PDF, TeamViewer, VLC, VirtualDub, WinRAR மற்றும் பல பயனுள்ள மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
பெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.
Portable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் - Poratabe Apps
என்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் - List of portable software
4 comments
தகவலுக்கு நன்றிங்க...
Replyமிகவும் பயனுள்ள தகவல் நன்றி♦♦♦♦♦
Replygreat work..,,keep on going..,
ReplyTHANK YOU PRABU.
ReplyPost a Comment