Nokia வின் புதிய Asha 310 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்

Nokia வின் புதிய Asha 310 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


நோக்கியா இந்தியாவின் ஆஸ்தான போனாக இருந்த காலம் மாறி இப்போது மற்ற நிறுவன மொபைல் போன்கள் அதை இடத்தை ஆக்கிரமித்து இருந்தாலும் இன்னும் நோக்கியா மார்க்கெட் இழக்கவில்லை. இதை உறுதிப்படுத்த அவ்வப்போது புதிய போன்களை விட்டு பயனர்களை கவர்கிறது நோக்கியா. அந்த வகையில் வரப்போகிற புதிய மொபைல் தான் Asha 310. அடுத்த மாதம் சந்தைக்கு வரவிருக்கும் இதன் விலை ஏறக்குறைய 5500* ரூபாய்க்குள் இருக்கும். 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை.Asha S40 OS - இல் இயங்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை, கோல்டன் லைட் வண்ணங்களில் இது கிடைக்கும். 

இதன் 2MP கேமரா மூலம் 1600x1200 pixels அளவுக்கு போட்டோக்களும், 176x144 அளவுக்கு வீடியோக்களும் எடுக்க முடியும். ஆனால் கேமராவில் LED Flash, Auto Foucs  வசதிகள் கிடையாது.

இது 3 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. அத்தோடு Accelerometer சென்சாரை கொண்டுள்ளது.

இது 128 MB ROM, 64 MB RAM மற்றும் 1GHz Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 20 MB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது. 2GB Card போன் வாங்கும் போது இலவசமாக தரப்படும்.

இதன் 1110 mAh பேட்டரி 17 மணி நேர Talk Time, 600 மணி நேர Stand By Time உடையது.

இவற்றோடு Bluetooth, Wi-Fi, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே.

Nokia Asha 310 Specifications

Operating System Asha S40 OS
Display 3 inch QVGA Capacitive Touch Display with Scratch Proof Screen (240×320 Resolution)
Processor 1Ghz Processor
Dual Sim Yes
RAM 128 MB ROM, 64 MB RAM
Internal Memory 20MB
External Memory Upto 32 GB (microSD), 2GB comes with sales pack
Camera 2MP Rear Camera
Battery Li-Ion 1110 mAh - 17hours of talktime, 25 hours of Standby time
Features WiFi,Bluetooth,Micro USB 2.0 connector, Preloaded with 40 EA Games and Nokia Maps

* - விலை Update செய்த தேதி 12-02-2013. 

நன்றி - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

Post a Comment