Hangouts வசதி தற்போது இந்திய ஜிமெயில் பயனர்களுக்கும் | கற்போம்

Hangouts வசதி தற்போது இந்திய ஜிமெயில் பயனர்களுக்கும்


கூகுள் நிறுவனத்தின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று Hangouts. இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் 9 பேருடன் Video Chat செய்ய முடியும். ஆரம்பத்தில் கூகுள் பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதி இப்போது சமீபத்தில் ஜிமெயில் பயனர்களுக்கும் அறிமுகமானது. இந்திய ஜிமெயில் பயனர்களுக்கு இது கடந்த 05/02/2013 இல் அறிமுகமானது. 

ஜிமெயில் பயனர்களுக்கு என்று சொன்னாலும் Contact தேடும் போது கூகுள் பிளஸ் Circle - இல் தான் தேடுகிறது. நீங்கள் மற்றும் Hangout செய்யப் போகும் உங்கள் நண்பர்கள் கூகுள் பிளஸ் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த Hangouts வசதியை பயன்படுத்த முடியும். கூகுள் பிளஸ் கணக்கு இல்லை என்றால் ஒருவருடன் மட்டுமே நீங்கள் Video Chat செய்ய முடியும். 

மற்ற Video Chat வசதிகளை விட இதில் உள்ள சிறப்பம்சம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இதில் Youtube Video பார்க்கலாம், Google Docs - களை பகிர்ந்து கொள்ளலாம், கேம்ஸ் விளையாடலாம், வீடியோவில் சில Effect கொடுக்கலாம் என பல உள்ளது. 

வீடியோ: 



Hangout - ஐ Schedule செய்ய வேண்டும் என்றால் Google Calender-ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- பிரபு கிருஷ்ணா

4 comments

தெரிந்துக்கொண்டேன். பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.

Reply

இன்று தான் இந்த வசதியை கவனித்தேன்

நன்றிங்க

Reply

பயணுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி

Reply

Great google ! Now only I come to know abt it.

Reply

Post a Comment