ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application | கற்போம்

ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application


என்னதான் வீடியோக்களை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி இருந்தாலும் நம்மில் நிறைய பேர் அவற்றை டவுன்லோட் செய்து நம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களில் வைத்துக் கொள்ள விரும்புவோம். ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய கம்ப்யூட்டரில் நிறைய வழிகள் இருந்தாலும் மொபைல்க்கு குறைந்த வழிகள் தான். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம். 

இந்த பதிவு Android பயனர்களுக்கானது. Tube Video Downloader Application ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய நமக்கு உதவுகிறது. ஆனால் இதன் மூலம் நீங்கள் Youtube Video க்களை டவுன்லோட் செய்ய முடியாது. Google தளம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. [Google Play - வில் எந்த Application-ம் கிடையாது, Third Party Site Application -களை பயன்படுத்தினால் அது உங்கள் ரிஸ்க்]

முதலில் இங்கே கிளிக் செய்து இந்த Tube Video Downloader Application - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

இது உங்கள் போனில் இன்ஸ்டால் ஆன பிறகு, ஏதேனும் ஒரு ப்ரௌசெர் மூலம் குறிப்பிட்ட தளம் ஒன்றை ஓபன் செய்யுங்கள். அதில் வீடியோவை Play செய்யும் போது உங்கள் போனில் உள்ள ஏதாவது ஒரு Application மூலம் தான் Play ஆகும் அப்போது நீங்கள் Tube Video Downloader என்பதை தெரிவு செய்தால் வீடியோ டவுன்லோட் ஆகி விடும். கீழே உள்ள படத்தில் எனது போனின் Screenshot உள்ளது. 


அதன் பின் வீடியோவுக்கு பெயர் கொடுத்தால் போதும் டவுன்லோட் ஆகி விடும். 

இதன் சிறப்பம்சங்கள்: 

  • பல வீடியோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யும் வசதி 
  • 2GB வரை உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி
  • டவுன்லோடை Resume or Pause செய்யும் வசதி [குறிப்பிட்ட தளத்தில் அந்த வசதி இருந்தால்]
  • MP4, 3GP, FLV, MOV, WMV, MKV என பல Format - களை Support செய்யும் வசதி 
  • மற்றும் நிறைய 
இதை QR Code மூலம் ஸ்கேன் செய்து டவுன்லோட் செய்ய. 


- பிரபு கிருஷ்ணா

3 comments

மிக்க நன்றிங்க...

Reply

பயனுள்ள அப்ளிகேசன்

Reply

தகவலுகு நன்றி

Reply

Post a Comment