Google வழங்கும் பயனுள்ள வசதிகளில் ஒன்று Books. இது இணையத்தில் பல புத்தகங்களை நமக்கு படிக்கும் வாய்ப்பை தருகிறது. இதில் இலவசமாக மற்றும் விலைக்கு என பல புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் இவற்றை நாம் ஏதேனும் ஒரு ப்ரௌசெரை பயன்படுத்தி மட்டுமே படிக்க முடியும். அவற்றை எப்படி pdf ஆக தரவிறக்கம் செய்வது என்று இன்று பார்ப்போம்.
கவனிக்க இதன் மூலம் கட்டணம் செலுத்தி வாங்கக்கூடிய புத்தகங்களை உங்களால் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியாது. இலவச புத்தகங்களை மற்றும் நீங்கள் வாங்கி உள்ள புத்தகங்களை டவுன்லோட் செய்யவே இது பயன்படும்.
1. முதலில் Google Books Downloader என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் போது இறுதியில் கீழே உள்ளது போல ஒரு பகுதி வரும். அப்போது Decline என்பதை கொடுத்து விடுங்கள், இதற்கு அடுத்தும் இதே போலத்தான். இரண்டு முறை Decline கொடுத்த பின் Installation முடிந்து விடும்.
3. இப்போது Google Books இல் நீங்கள் வாங்கிய புத்தகம் அல்லது இலவச புத்தகத்த்தின் முகவரியை இதில் கொடுக்க வேண்டும். உதாரணம் A Dictionary of Tamil Proverbs
இதில் என்ன Format மற்றும் Resolution போன்றவற்றை தெரிவு செய்து விட்டு, start என்பதை கிளிக் செய்யுங்கள்.
மேலே உள்ளது போல டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும்.
- பிரபு கிருஷ்ணா
6 comments
உங்களுக்கு கோடி நன்றிகள் நண்பா.. எனக்கு மிகவும் அவசியமான ஒன்று
Replyநன்றி சகோ! முயற்சித்து பார்க்கிறேன்.
Replyஒரு டவுட்
இது மூலம் பேஸ்புக்கை டவுன்லோட் பண்ணலாமா? :D
உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க சொல்லி யார் சொல்லித் தராங்க ????
Replyதெரியாத்தனமா ஒரு பேஸ்புக் க்ரூப்ல மாட்டிக்கிட்டேன்.. அவங்க தான் சொல்லி தராங்க.. :)
Replyமிக்க நன்றிங்க...
Replyதகவலுக்கு நன்றி நன்பா
ReplyPost a Comment