2012-இல் உங்கள் ட்விட்டர் வரலாற்றை அறிய | கற்போம்

2012-இல் உங்கள் ட்விட்டர் வரலாற்றை அறிய

பேஸ்புக் தளம் 2012 Review என்ற ஒன்றை வெளியிட்ட பின் ட்விட்டர் அதே பாணியில் 2012 இல் உங்கள் ட்விட்டர் வரலாற்றை காட்டுகிறது. இதில் உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும். மிக அதிகம் RT செய்யப்பட்ட ட்வீட், அதிகமாக Mention செய்த நபர் போன்றவற்றையும் குறிப்பிடும். 

இதை அறிய. 

1. முதலில் இந்த இணைப்புக்கு செல்லுங்கள் Golden Tweets. 

2. அதில் "Your Year on Twitter" என்பதை கிளிக் செய்யுங்கள்.  அடுத்து Take Me There என்பதை கிளிக் செய்யுங்கள். 

3.  அடுத்து வரும் பக்கத்தில் "Get Yours Now" என்பதை கிளிக் செய்யுங்கள். 

4. இதை ட்விட்டர் தளம் Vizify என்ற இன்னொரு தளத்தின் உதவியுடன் செய்கிறது. எனவே அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ட்விட்டர் கணக்கை வைத்து Log-in செய்யுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டி வரும். 

5. அடுத்த பக்கத்தில் நீங்கள் இந்த log-in ஐ Authorize செய்ய வேண்டும். 

6. அவ்வளவு தான் இப்போது ட்விட்டர் தளத்தில் உங்கள் 2012 ஆம் ஆண்டின் செயல்களை குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். 

7. நான்கு பக்கங்களாக இது இருக்கும். முதல் பக்கத்தில் உங்கள் Profile தகவல் (Overview), இரண்டாம் பக்கத்தில் ஒரு ட்வீட் (Quote), மூன்றாம் பக்கத்தில் நீங்கள் ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் (Words) , நான்காம் பக்கத்தில் Golden Tweet , Golden Follower (Year on twitter) போன்றவை இருக்கும். 

இதில் நீங்கள் Edit செய்ய விரும்பும் தகவல்களை பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ள  எடிட் வசதி மூலம் மாற்றலாம். புதிதாக ஏதேனும் பக்கத்தை சேர்க்க விரும்பினால் அதையும் செய்யலாம். 



ஆனால் இதில் 2012 இல் நீங்கள் Follow செய்த நபர்கள், உங்களை Follow செய்த நபர்களை குறிப்பிடாதது ஒரு குறை எனலாம். 

- பிரபு கிருஷ்ணா

4 comments

பகிர்வுக்கு நன்றிங்க...

Reply

பதிவுக்கு நன்றி !

கூகிள் பிளஸின் மூலம் நண்பர்களுக்கு நாம் எழுதிய பதிவுகளை ஷேர் செய்யும் முன் மின்னஞ்சலில் அவற்றை அனுபவதற்காக Also send email to your circles என்பதை கிளிக் செய்தால் 'You can't send email to that many people.' என்பதாகச் சொல்கிறது !? காரணம் என்ன ? மாற்று வழிமுறைகள் ஏதேனும் உண்டா ?

அறிந்தவர்கள் - அறியத்தரலாம்

Reply

what surprise news for new twitter account holder ? thank you for this news .

Reply

Post a Comment