MS Excel மென்பொருள் பல இடங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள். மிக அருமையான வசதிகளை கொண்ட இதன் ஒரு முக்கியமான வசதி தான் Auto Fill. இதை எப்படி பயன்படுத்துவது என்று இன்று பார்ப்போம்.
இந்த Auto Fill வசதி மூலம் எண்கள், நாள், தேதி, மாதம், வருடம் என பலவற்றை தானாக Fill செய்யும் படி செய்ய முடியும்.
எண்களை Auto-fill செய்ய
முதல் உங்களுக்கு தேவையான ஆரம்ப எண்ணை ஒரு செல்லில் கொடுங்கள், அதன் பின் அந்த செல்லை தெரிவு செய்தால் வலது கீழ் மூலையில் ஒரு சிறிய சதுரம் இருப்பதை காணலாம், அதை பிடித்து Drag செய்து கீழ் நோக்கி Cursor - ஐ இழுங்கள். இப்போது கீழே உள்ளது போல வரும்.
இப்போது Cursor - ஐ விட்ட வுடன், எல்லா செல்களிலும் நீங்கள் கொடுத்த எண் இருக்கும். அதன் கீழே படத்தில் அம்புக் குறி காட்டப்பட்டு உள்ளதை போல ஒரு வசதி வரும்.
அதை கிளிக் செய்தால் உங்களுக்கு எப்படி Auto Fill செய்ய வேண்டும் என்ற வசதிகள் வரும்.
இதில் Fill Series என்பதை கிளிக் செய்தால் எண்கள் நிரப்பப்படும்.
Copy Cells என்பது மேலே உள்ளதை அப்படியே Copy செய்யும், Fill Formatting Only என்பது குறிப்பிட்ட செல்லின் Format - ஐ மட்டும் Fill செய்யும், Fill Without Formatting என்பது செல்லில் உள்ள தகவலை மட்டும் copy செய்யும்.
வருடங்களை Copy செய்யவும், இதே முறைதான்.
நாட்களை Auto-fill செய்ய
மாதங்களை Auto-Fill செய்ய
தேதிகளை Auto -Fill செய்ய
இதில் நீங்கள் Excel ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தேதிகளை கொடுக்க வேண்டும். DD/MM/YYYY அல்லது MM/DD/YYYY.
- பிரபு கிருஷ்ணா
6 comments
Dear Brothers,
ReplyVery useful information. Congrats for your efforts.
this is good useful information..
ReplyThank u sir..
Dear brother your android.karpom.com site didnot open . Particular viewer only will see that site what happen ? We are very sad .
ReplyAndroid குறித்த பதிவுகள் இதே கற்போம் தளத்திலேயே வருவதால் ஆன்ட்ராய்ட் கற்போம் தற்காலிகமாக Close செய்யப்பட்டுள்ளது.
ReplyThank u very much for answering my question brother. write more article . We will learn from you
ReplyThank u very much for answering my question brother. write more article . We will learn from you
ReplyPost a Comment