Privacy Shortcuts - பேஸ்புக் தரும் புதிய வசதி | கற்போம்

Privacy Shortcuts - பேஸ்புக் தரும் புதிய வசதி

இன்று பேஸ்புக் தளத்தில் லாக்-இன் செய்தவர்களுக்கு ஒரு புதிய வசதி வந்திருக்கும். "Privacy Shortcuts" எனப்படும் அவற்றின் மூலம் உங்கள் Privacy Settings - ஐ எளிதாக நீங்கள் ஒரே இடத்தில் இருந்து மாற்ற முடியும். எப்படி என்று பார்ப்போம். 

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்த பின் Home க்கு அருகே ஒரு புதிய Lock symbol வந்துள்ளதை கவனிக்கவும். 


அதை Press செய்தவுடன் கீழே உள்ளது போன்ற வசதிகள் உங்களுக்கு வரும்.


1. இதில் முதலாவதாக உள்ள "Who Can See My Stuff?" என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பது இருக்கும், அடுத்து உங்கள் Activity Log,அடுத்து  உங்கள் நண்பர் அல்லது ஒருவர் உங்கள் Timeline - ஐ பார்க்கும் போது எப்படி தெரியும் என்பவை இருக்கும்.

Who Can See My Stuff? என்பதில் Public, Friends, Custom, Only Me போன்ற வசதிகள் இருக்கும் இதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். Activity Log பகுதியில் நீங்கள் லைக் செய்தது, கமெண்ட் செய்தது, உங்களை Tag செய்துள்ள போட்டோக்கள் போன்றவற்றை நீக்க முடியும். மூன்றாவதாக உள்ள View As மூலம் மற்றவர் பார்க்க கூடாது என்று நினைக்கும் தகவல்களை நீங்கள் மறைக்க/நீக்க முடியும்.

2. இரண்டாம் வசதி, "Who Can Contact Me ?". இதில் முதல் வசதி  உங்களுக்கு யார் எல்லாம் Message அனுப்ப முடியும் என்பதை தீர்மானிக்கலாம். Basic Filtering என்பது நண்பர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் போன்றவர்களை உங்ககுக்கு Message செய்ய அனுமதிக்கும். Strict Filtering உங்கள் நண்பர்களை மட்டும் உங்களுக்கு Message செய்ய அனுமதிக்கும். இரண்டாவது Who can send me friend requests? இதில் உள்ள இரண்டு வசதிகள் Everyone & Friends Of Friends. எது தேவையோ அதை வைத்துக் கொள்ளலாம்.

3. மூன்றாவது வசதி "How do I stop someone from bothering me?" என்பதன் மூலம் உங்களுக்கு தொல்லை தரும் நபர்களை பேஸ்புக் பக்கத்தில் Block செய்யலாம். View All Blocked Users என்பதில் நீங்கள் யாரை எல்லாம் Block செய்துள்ளீர்கள் என்பதை பார்க்கலாம்.

முன்பு இவற்றை வேறு வேறு பக்கங்களில் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது கிளிக் மூலம் செய்யும் படி வந்துள்ளது.

- பிரபு கிருஷ்ணா

8 comments

நல்ல அருமையான தகவல்..நன்றி பிரபு

Reply

பேஸ் புக் பேய் பிடித்தவர்களின் சார்பாக நான் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

மிக்க நன்றிங்க...

Reply

எங்களுக்கெல்லாம் வரலையே :-(

Reply

அமாம் நண்பரே நானும் கூட இன்றுதான் பாத்தேன்.பகிர்தமைக்கு நன்றி

Reply

அநேகமாக இன்னும் கொஞ்ச நாட்களில் வந்து விடும். நாளை உலகம் அழியாமல் இருந்தால் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கும் ;-)

Reply

மிக நல்ல பயன்படக் கூடிய தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Reply

பயனுள்ள வசதி!

Reply

these information is very useful and every user of fb should know this

Reply

Post a Comment