MS Office Template - களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி? | கற்போம்

MS Office Template - களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

MS Office பயன்படுத்தாத விண்டோஸ் பயனர்கள் இருக்கவே முடியாது. மிக அதிகமான பேர் பயன்படுத்தும், இதில் உள்ள அற்புதமான வசதி தான் Template. அடிக்கடி செய்யும் ஒரு நிலையான  செயலுக்கு , Default ஆக ஒரு பக்கத்தை தரும் இந்த வசதி பலருக்கு பயன்படும் 

பல நிறுவனங்கள் இந்த வசதியை பயன்படுத்துகின்றன. Time Sheet, Certificates, Invoice, Calender, Letters, Resume என பட்டியலிடலாம் அவற்றை. இதை எப்படி ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம். 

வழி 1:

மிக எளிதான ஒரு வழி, முதலில் ஒரு Word Document - ஐ ஓபன் செய்யுங்கள். File >> New என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல ஒரு விண்டோ வரும். 


இதில் இடது பக்கம் Templates பகுதிக்கு கீழ் உள்ள Microsoft Office Online என்பதில் பல வசதிகள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு என்ன வகையான Template என்பதை Category ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து டவுன்லோட் செய்யலாம். 

இந்த வசதி Power Point, Excel ஆகியவற்றிலும் உள்ளது. 

வழி 2: 

இது புதிய மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்தே டவுன்லோட் செய்யும் வழி. Office templates என்ற தளத்துக்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 



டவுன்லோட் செய்த ஒன்றை நேரடியாக ஓபன் செய்து நீங்கள் பயன்படுத்த முடியும். 

வழி 3: 

மைக்ரோசாப்ட் மட்டுமின்றி இன்னும் பல தளங்கள் இலவசமாக இதை கொடுக்கின்றன. கூகுளில் download ms office templates free என்று தேடினால் பல தளங்கள் கிடைக்கும். 

- பிரபு கிருஷ்ணா

5 comments

நன்றிங்க....

Reply

நன்றி. ஆனால் இந்த Template களை எந்த செயல்களுக்காக, எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழார்வன்.

Reply

THANK YOU VERY MUCH PRAPU, THESE ARE REALLY TIME SAVING FOR US.

Reply

Post a Comment