பயனாளிகள் அதிகமாக அதிகமாக சில பொதுவான பிரச்சனைகள் வெளியில் வரத்தெரியும். அது போன்ற ஒன்று தான் Google Play ஆப்ஸ் டவுன்லோட் ஹிஸ்டரி, இன்று கிட்டத்தட்ட லட்சம் ஆண்டிராய்ட் ஆப்ஸ்கள் நமக்கு கிடைக்கிறது. அதில் பெரும்பகுதி ப்ரீ ஆப்ஸ். அதாவது நாம் நிறைய ப்ரீ ஆப்ஸ் இன்ஸ்டால் செய்து கொண்டே இருப்போம் சில நாட்களுக்கு பிறகு அதை நீக்கி விடுவோம்.
சில நாட்களுக்கு பிறகு நாம் நீக்கிய ஏதாவது ஒரு அப்ளிகேசன் தேவைப்படும் அது தேடினாலும் கிடைக்காது. சரி டவுன்லோட் ஹிஸ்டரியில் தேடலாம் என்றால் நாம் பயன்படுத்திய நூற்றுகணக்கான ஆப்ஸ்கள் ஒவ்வொன்றாக பார்க்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாக வந்தது தான் Google Playல் டவுன்லோட் ஹிஸ்டரியை அழிக்கும் புது வசதி. இதன் மூலம் நீங்கள் அவ்வப்பொழுது தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்கிவிடலாம்.
உங்களின் ப்ளே ஸ்டோரில் உள்ள My Apps ஆப்சனை தெரிவு செய்யுங்கள்
அதில் Installed, All என்று இரண்டு பகுதிகள் இருக்கும். Installed ல் நீங்கள் தற்பொழுது பயன்படுத்திகொண்டிருக்கும் ஆப்ஸ்களை காண்பிக்கும், Update வசதியினை கொடுக்கும்.
All என்ற பகுதியில் நீங்கள் இன்ஸ்டால் அன் இன்ஸ்டால் செய்த அனைத்து ஆப்ஸ்களையும் காண்பிக்கும்.
மேலே உள்ள படத்தை கவனியுங்கள் Free க்கு மேலே உள்ள வட்டவடிவ சின்னத்தில் பிரஸ் செய்தால் கீழ்கண்டவாறு கேட்கும்
கொஞ்ச நேரம் குறிப்பிட அப்ளிகேசனை அழுத்தி பிடித்தால் உங்கள் போன் சிறிது நேரத்தில் வைப்ரேட் ஆகும் அதன் பின்பு நீங்கள் நிறைய ஆப்ஸ் டவுன்லோட் ஹிஸ்டரியை ஒரே நேரத்தில் அழிக்கலாம்.
சூர்ய பிரகாஷ் .K.P
9 comments
இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்,
Replyமிக்க நன்றி நண்பரே!
நன்றிங்க......
ReplyUseful post brother!
Replyஇதுனால் பெரிய பயன் தோன்றவில்லை.
ReplyThank You for sharing....
Replyநன்றி சூர்யா, பல Applications - களை இன்று நீக்கினேன்.
Replyநல்ல பதிவு :-)
Replyஇதை நமது கணினியில் செய்ய முடியுமா..?!
Replyஇல்லை அண்ணா உங்கள் போனில் இருந்து தான் செய்ய முடியும்.
ReplyPost a Comment