ஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் புதிய வசதி | கற்போம்

ஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் புதிய வசதி


எப்போதும் எண்ணற்ற வசதிகளை தருவதில் ஜிமெயில்க்கு நிகர் ஜிமெயில் தான். அந்த முறையில் வந்துள்ள புதிய வசதிதான் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் புதிய வசதி. எப்படி என்று பார்ப்போம். 

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் பகுதியில் உள்ள Search பகுதியில் உங்களுக்கு எந்த ஈமெயில் வேண்டுமோ அதன்படி சர்ச் செய்ய வேண்டும். 

Size: 

உங்கள் ஈமெயிலில் உள்ள Attachment-களை தேட எளிய வழி அதன் Size படி தேடுவது. உதராணமாக 5 எம்.பி அளவு உள்ள ஈமெயிலை தேட size:5m or larger:5m என்று கொடுக்க வேண்டும். 


குறிப்பிட்ட சைஸ் க்கு கீழே என்றால் smaller என்பதை பயன்படுத்தலாம். உதாரணம்: smaller:5m

Days: 

தேதி வாரியாக தேட எளிமையான வழி ஒன்றும் புதிதாக வந்துள்ளது. இதன் படி குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வந்த மெயில்களை மட்டும் தேடும் வசதி நமக்கு கிடைக்கிறது. 

குறிப்பிட்ட வருடத்துக்கு முந்தைய ஈமெயில்களை தேட older_than:1y என்று கொடுத்து தேட வேண்டும். 


இதுவே குறிப்பிட்ட நாள் என்றால் older_than:200d என்றும் மாதம் என்றால் older_than:2m என்றும் கொடுத்து தேட வேண்டும். 


இதுவே நீங்கள் Size மற்றும் Date என இரண்டையும் கொடுத்து ஒரே நேரத்தில் தேட முடியும். 


- பிரபு கிருஷ்ணா

5 comments

நல்ல வசதி....!

Reply

விளக்கம் அருமை... நன்றி...

Reply

Good news na ithalam varathanu irunthean ppa..welcome google service thanks gmail

Reply

அன்பின் பிரபு கிருஷ்ணா - நல்லதொரு தகவல் - பயன் படுத்தினேன் - தேவைப்படும் போது பயன படுத்தௌகிறேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment