மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான Windows 8 ஒரே மாதத்தில் 4 கோடி லைசென்ஸ்களை விற்றுள்ளது. மிகக் குறைந்த விலையில் வெளியானதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். பெரும்பாலானோர் பழைய OS- இல் நேரடியாக Upgrade செய்துள்ளதால், பழைய OS - இன் File - கள் அனைத்தும் அப்படியே இருக்கும் அதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
நீங்கள் Windows 8 க்கு Upgrade செய்த பின் பழைய OS - ன் Program Files and Folders என அனைத்தும் Windows.old என்ற போல்டரில் இருக்கும். இவை 10 GB அளவில் இருக்க கூடும். அவற்றால் பலன் ஏதுமில்லை எனும்போது அவற்றை நீக்குவது தான் நல்லது.
Windows.old போல்டரை நீக்குவது எப்படி ?
1. உங்கள் கணினியில் Windows Key + R அழுத்தி Run ஐ ஓபன் செய்யுங்கள்.
2. இப்போது cleanmgr என்று டைப் செய்து Disk Clean Up ஐ ஓபன் செய்யவும்.
3. OS இன்ஸ்டால் செய்துள்ள Drive பெயரை தெரிவு செய்து (பெரும்பாலும் C Drive) Next கொடுக்கவும். அடுத்த விண்டோவில் Clean Up System Files என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது Files To Delete பகுதியில் Previous Windows installation என்பது தெரிவு செய்யப்படாமல் இருந்தால் தெரிவு செய்து OK கொடுங்கள்.
- பிரபு கிருஷ்ணா
3 comments
பயனுள்ள தகவலுக்கு நன்றி...
Replyநன்றிங்க...
Replyமிக்க நன்றி பிரபு
ReplyPost a Comment