ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நிறைய Youtube, Dailymotion, Vimeo போன்ற வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யும் வசதியை தருகின்றன. மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களை நம்மால் பெரும்பாலும் டவுன்லோட் செய்ய இயலாது. மாறாக மிக அதிகமான தளங்களில் இருந்து எப்படி வீடியோவை டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் Firefox உலவியை பயன்படுத்த வேண்டும். அதில் Download Helper என்ற Add-on ஐ பயன்படுத்தினால் எந்த வீடியோவை வேண்டும் என்றாலும் தரவிறக்கம் செய்யலாம்.
தரவிறக்க இணைப்பு - Video DownloadHelper
Add To Firefox என்பதை கிளிக் செய்தால் உங்கள் உலவியில் இது Add ஆகி விடும். அதன் பின்னர் ஒரு உலவியை close செய்து விட்டு ஓபன் செய்து குறிப்பிட்ட தளத்துக்கு சென்று வீடியோவை ஓடவிடுங்கள்.
உதாரணமாக கடல் படத்தில் "நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சுருக்கேன்" என்ற பாடல் MTV தளத்தில் தான் முழுமையாக உள்ளது. அதன் இணைப்பு - Nenjukulle (Full Song)
இதை உங்கள் Firefox உலவியில் திறந்து வீடியோ ஓடும் போது Address Bar பக்கத்தில் கீழே படத்தில் உள்ளபடி ஒரு Plugin ஒன்று பலூன் போல சுற்றிக்கொண்டிருக்கும். அதன் அருகில் ஒரு அம்புக்குறி இருக்கும்.
அம்புக்குறியை கிளிக் செய்தால் டவுன்லோட் செய்து விடலாம்.
இது Flv Format - இல் டவுன்லோட் ஆகும். வேறு ஏதேனும் Format வேண்டும் எனில் Download & Convert என்பதை தெரிவு செய்யுங்கள்.
மற்றபடி நீங்கள் Youtube, Dailymotion, Vimeo போன்ற தளங்களிலும் இதை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால் அந்த தகவலை நீங்கள் இந்த Plugin Developer களுக்கு தெரிவிக்கலாம். Submitting a site
- பிரபு கிருஷ்ணா
11 comments
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
Replyhttp://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
நல்ல தகவல் பிரபு. முயற்சித்துப் பார்க்கிறேன்.
ReplyNice Information.I am using this Addon for Downloading.UseFul one.
Reply.swf format வீடியோ-க்களை இந்த add-on-ல் டவுன்லோட் செய்ய முடியவில்லை ஏன் ?
Replyஇது பெரும்பாலும் flv format களை டௌன்லோட் செய்கிறது. swf இணையத்தில் standard Format இல்லை என்பதால் Detect ஆகவில்லை என்று நினைக்கிறேன்.
Replyஅன்பிற்கினிய சகோதர... எண்ணுடைய பிளாக்கில் பதிவை பப்ளிஸ் செய்தால் இரண்டு தடவை தெரிகிறது.அதனை நீக்க என்ன செய்வது தயவு செய்து உதவ முடியுமா?
Replyஎன் வலைதள முகவரி பார்வையிடவும்...
http://unnmaygal.blogspot.in/2012/11/01.html
Template - இல் ஏதோ மாற்றம் செய்து உள்ளீர்கள். மீண்டும் வேறு Template மாற்றி முயற்சி செய்யவும்.
Replyமிக்க.,நன்றி சகோதரா..,
Replyமிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பரே.
Replyவணக்கம் திரு பிரபு கிருஷ்ணா அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட தகவல் நன்று, இருப்பினும் எல்லா தளங்களிலும் உள்ள வீடியோ அனைத்தையும் டவுண்லோட் செய்ய Replay media Catcher என்ற சாஃப்ட்வேர் மிகவும் அருமையாக அனைத்து வீடியோவையும் டவுண்லோட் செய்கிறது. பயன்படுத்தி பார்க்கவும்.
ReplyPost a Comment