பயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை | கற்போம்

பயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை


பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக சில நல்ல குரூப்கள் இருக்கின்றன. நமக்கு பயனுள்ள பல விசயங்களை தருகின்றன. அவற்றை பற்றி பார்ப்போம் இன்று. 



இதை பெயரே உங்களுக்கு இதன் அர்த்தங்களை சொல்லி விடும். இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் நுகர்வோரே, எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் நாம் கொடுக்கும் பணத்துக்கு உரிய சேவை நமக்கு கிடைப்பது இல்லை, அவற்றை எதிர்கொள்வது எப்படி என்ற தகவல்களை இந்த குரூப் மூலம் அறியலாம். 

உங்கள் பிரச்சினை என்ன என்பதை சொல்லி, அதை தீர்க்கும் வழியை இதில் கேட்கலாம். இதில் உங்கள் புகாரை தந்து விட்டு அவர்கள் அதை தீர்ப்பார்கள் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது, குழுமத்தில் உள்ள ஒவ்வொருவரும் வேறுபட்ட இடம், வேலைகளில் இருப்பவர்கள். உங்கள் பிரச்சினையை பொறுத்து இவர்கள் அதன் தீர்வுகளை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உதவி செய்வார்கள். 

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை நீங்களே பெற்றிருந்தால் அதையும் அங்கே பகிரலாம். முழுக்க முழுக்க உறுப்பினர்கள் தான் ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வுகளையும் அவர்கள் அனுபவத்தில் இருந்து சொல்கிறார்கள். 

இதன் முக்கிய நபர்கள் சுரேகா, கேபிள் ஷங்கர். கேட்டால் கிடைக்கும் மூலம் தீர்வு கிடைத்த சில பிரச்சினைகள் - இங்கே

அறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்களை படிக்க விரும்பினால் இது உங்களுக்கே உரியது. பெரும்பாலானவை தமிழில் இருப்பதால் எளிதில் புரிந்து கொள்ளலாம். 


எல்லோருக்கும் தேவைப்படும் தகவல்களை எளிய தமிழில் பகிரும் அருமையான குரூப் இது. எல்லாவற்றுக்கும் ஆங்கில மருந்துக்கடைகளை நோக்கி ஓடும் இன்றைய சூழ்நிலையில் அவற்றின் தேவை இன்றி பல நோய்களை கட்டுப்படுத்தும்/தீர்க்கும் வழிகளை சொல்லும் விதம் அருமை. 


சாப்பாடுப் பிரியர்களுக்கான அசத்தலான குரூப் இது. எந்த ஊரில் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும். எந்த ஹோட்டலில் பிரச்சினைகள் என்று விவாதிக்கிறார்கள். அதே சமயம் உணவு வகைகள் குறித்த தகவல்களும் பரிமாறப்படுகின்றன. 


கட்டுரை, கவிதை, மருத்துவம், தத்துவம் என பல தகவல்களை தமிழில் தரும் அருமையான குழுமம் இது. 


தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கான குழுமம் இது. தாங்கள் படித்த காமிக்களை பற்றி பகிர்ந்து அதை விவாதிக்கிறார்கள்.

சிவகாசி துயர் துடைப்பு குழு!

பேஸ்புக்கில் இருப்பதே வெறும் வெட்டி அரட்டை என்பதை பொய்யாக்கிய ஒரு குழு. ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் எத்தனை நல்ல உள்ளங்கள் உதவி செய்தன என்பதை உணர்த்திய ஒரு குரூப். பல விமர்சனங்கள் வந்த போதும் அவற்றை எதிர்கொள்வதில் பல சிரமங்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது தான், ஆனால் தோல்வி அடையவில்லை.

சமூக சேவை செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அத்தனை விசயங்களையும் ஒரு சில வாரங்களில் உணர்த்தியது. இப்போது இயங்காவிட்டாலும், நல்ல முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. [இதில் புதிதாக யாரும் இணைய வேண்டாம் என்பது அட்மின்களின் நிலைப்பாடு]

இவற்றில் இணைய குரூப் பெயருக்கு நேரே உள்ள Join என்பதை கிளிக் செய்யவும். குரூப் செட்டிங்க்ஸ் பொறுத்து உங்கள் இணைப்பு உறுதி செய்யப்படும். 


இதில் உள்ளவை நான் இணைந்துள்ள குரூப்கள், அவற்றின் செயல்பாடுகளை பொறுத்தே இங்கே பகிர்ந்துள்ளேன். இவற்றை போன்ற அல்லது இவற்றை விட நல்ல குரூப்கள் இருப்பின் அவற்றை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரிவிக்கலாம். 

- பிரபு கிருஷ்ணா

11 comments

காமெடி கும்மி என்று பயனுள்ள க்ரூப் உள்ளது. அதை சேர்க்கலையா?

:) :) :)

Reply

வாங்க இலக்கியம் பேசலாம்

https://www.facebook.com/groups/304315709624642/

Reply

here a Tech Group.
http://www.facebook.com/groups/355835161112537/

Reply

நல்ல குரூப்ஸ்...

நன்றி...
tm2

Reply

@ Nalvinai Viswaraju

மன்னிக்கவும்,உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அது போல பின்னூட்டத்தை தவிர்க்கவும்.

Reply

பயனுள்ள பதிவு சகோ இப்படியான குழுக்களை நிச்சயம் அறிமுகப்படுத்தவேண்டும் அதுதான் கடமை சகோ தொடர்ந்து நமக்கு தெரியப்படுத்துங்கள்

Reply

வாழ்த்துக்கள் பிரபு நல்ல சிந்தனையோடு ஆரம்பிச்சு இருக்கீங்க.. கலக்குங்க.. சேர்ந்துடுரன்.. நன்றி..

Reply

அன்பின் பிரபு - நல்லதொரு அறிமுகம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply
This comment has been removed by the author.

பிளாக்கர்களுக்கென்றே தங்களுடைய பதிவை பகிர ஒரு குரூப் இருக்கு. ஒரு பிளாக்கரா இருந்துவிட்டு அதைப் பற்றிப் போடலை? இந்த குரூப்ல எல்லோரையும் கோர்த்துவிடாமல் விருப்பப்பட்டவங்களை (முக்கியமா வலைதளத்தில் எழுதுபவர்கள் மட்டும்)மட்டுமே சேர்ப்பதால் அதிகம் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் அந்த குரூப் வெட்டி பிளாக்கர்

https://www.facebook.com/groups/vettibloggers/

Reply

" கேட்டால் கிடைக்கும் ASK " அருமை நண்பா நானும் எனது நண்பர்களிடம் சொல்லி சேர சொல்கிறேன் ... நல்ல முயற்சி ! வாழ்த்துக்கள் !

Reply

Post a Comment