கேள்விகள் சுவாரஸ்யமானவை அதன் பதில்களை பொறுத்து. தொழில்நுட்ப பதிவர் என்று வந்த பிறகு நிறைய நண்பர்கள் மின்னஞ்சல், அலைபேசி, வலைப்பூ மூலம் நிறைய கேள்விகள் கேட்க அதன் அடிப்படையில் பதில் அளித்து வருவது தொழில்நுட்ப பதிவர்களின் வழக்கம். ஏன் கேள்வி கேட்க ஒரு பொது மேடை அமைக்க கூடாது என்று தோன்றிய கேள்விக்கு தான் பதில்!.காம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு "பிளாக்கர் நண்பன்" அப்துல் பாசித் சகோவிடம் பேசும் போது இது குறித்து கேட்டேன். எப்போதும் எங்களது புதிய முயற்சிகளை இருவரும் விவாதிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் எப்படி உருவாக்கலாம் என்று யோசித்ததில் ஏன் இருவருமே சேர்ந்து இதை உருவாக்க கூடாது என்று நினைத்து, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் டொமைன் வாங்கி, சைட் தயார் செய்து இரண்டே நாளில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இதனை ஆரம்பிக்க மிக முக்கிய காரணம், நண்பர்கள் சந்தேகங்களை கேட்கும் போது சில சமயம் அவற்றை ஒரு பதிவாக எழுத முடியாத அளவிற்கு சிறியதாக இருக்கும், இல்லை என்றால் கேட்கும் ஒருவருக்கும் தெரியும் படி மின்னஞ்சல் மூலம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
இனி நீங்கள் கேட்கும் கேள்வி மற்றவருக்கும் தோன்றினால் அவர் பதில்! மூலம் தீர்வை பெறலாம். அதே சமயம் இதில் நானோ, பாசித் மட்டுமோ பதில் அளிக்க போவதில்லை சேரும் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு தெரிந்த பதிலை கூறுவார்கள். இதனால் ஒரே கேள்விக்கு பல வகையான பதில்கள் கிடைக்கும், ஒன்று வேலை செய்யாவிட்டால் மற்றொன்று என்று கேள்வி கேட்டவருக்கும் இதில் பெரிய பலன்.
இப்போது உங்கள் வேலை, தளத்தில் Register செய்துவிட்டு எங்களிடம் கேள்வி கேட்பது மட்டுமல்ல, உங்களுக்கு தெரியாத கேள்விகளை அங்கே கேளுங்கள், தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து மற்றவர்களுக்கும் உதவுங்கள். அதற்காக எல்லோரும் பதில் சொல்ல வேண்டியது என்பது கட்டாயம் அல்ல.
இந்த தளத்தில் உங்கள் பேஸ்புக் கணக்கு வாயிலாகவும் நுழைய முடியும்.
தற்போதைக்கு தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளை மட்டுமே அனுமதித்துள்ளோம். உங்களை ஒத்துழைப்பு, பங்களிப்பு போன்றவற்றை பொறுத்து மற்ற வகையான கேள்வி - பதில்களும் வரலாம்.
சில நிபந்தனைகள்:

- Piracy குறித்த கேள்விகளை தவிர்க்கவும்.
- முடிந்த வரை கேள்விகளை தமிழில் கேட்கவும்.[தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்கலாம். உங்கள் கேள்வியை தமிழில் மாற்றி விடுவோம். ]
- தளத்திற்கு சம்பந்தமில்லாத Spam வகையான பகிர்வுகளை பகிர வேண்டாம்.
நேற்று பிளாக்கர் நண்பன் தளத்தில் இது குறித்த எழுதப்பட்ட கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
பதில்! தளத்தில் பகிரப்படும் சில கேள்வி-பதிலகள் கற்போம் இதழிலும் பிரசுரம் செய்யப்படும்.
பதில்! பேஸ்புக் பக்கம்:
14 comments
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.!
Reply:D :D :D
என் கேள்விகள் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது... மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
Replyநன்றிகள் பல... தொடர வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
A suggestion to make this success.
Replyplease add a tamil unicode in this website. So users can ask their question in tamil. this will make all user's stuffs more easy. :)
Even I don't know to type in tamil.
my Blog
http://www.comworld91.com/
Bro it supports tamil. Read this post for tamil typing
Replyhttp://www.karpom.com/2012/03/how-to-use-google-tamil-transliteration.html
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyHi Prabu ,its a very good initiative and a much needed site in tamil.we don't have anything like this in tamil,so this will act as a platform to get answers in tamil.i will try to answer the questions which ever is my area of expertise . you can add this widget (assuming its a blogger type) .congrats once again!!!
Replyhttp://ethirneechal-lab.blogspot.in/2010/09/tamil-comment-form-for-blogger.html
நல்ல முயற்சி இறைவனின் உதவியும் வெற்றியும் கிடைக்க நான் பிராத்திக்கிறேன்..
Replyyakoo போல தமிழில் கேள்வி பதில் அவசியமான ஓன்று .மற்ற துறைகள் பற்றிய பதில்கள் சரி ஆனால் தொழில்நுட்ப கேள்விகளுக்கு அந்த துறை பற்றி தெரிந்தவர்கள் பதிலளித்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் !
Replyரொம்ப நல்ல விஷயம்.பயன் தர கூடிய தளத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி.பேஸ் புக்கில் உறுப்பினர் அல்லாதோர் இதில் இன்னைய முடியாதா?
Replyஉங்கள் மின்னஞ்சல் முகவரி கூட பயன்படுத்தி இணையலாம்.
ReplyTHANK YOU VERY MUCH FOR BOTH OF YOU. MAY GOD BLESS ALL YOUR SUCCESS.
Replyநல்ல முயற்சி...
Replyவாழ்த்துகள் ...
நன்றி
tamil online job site visit > www.padugai.com
My best wishz prabu.
Replyஅன்பின் பிரபு மற்றும் அப்துல் பாசித் - நல்லதொரு தளம் துவங்கியமைக்கு நன்றி - பயனுள்ள தளம் - ஐயம் களையும் அற்புதமான செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyPost a Comment