1. முதலில் உங்கள் Youtube கணக்கில் நுழைந்து, உங்கள் பெயர் அல்லது Channel பெயர் மீது கிளிக் செய்து Settings பகுதிக்கு வரவும்.
2. இப்போது இடது பக்கம் உள்ள "InVideo Programming" என்பதை கிளிக் செய்யவும்.
இதில் நமக்கு இரண்டு வசதிகள் உள்ளன. தனித் தனியாக ஒவ்வொன்றையும் பார்ப்போம்.
Feature your channel
இந்த வசதி மூலம் உங்கள் சேனலை நீங்கள் பிரபலப்படுத்த முடியும். இதை வீடியோவில் சேர்ப்பதால் ஒரு சிறிய படம் உங்கள் அனைத்து வீடியோக்களிலும் வரும். அதன் மீது கிளிக் செய்தால் வீடியோ பார்ப்பவர் உங்கள் சேனல் பக்கத்துக்கு வருவார். Feature Your Channel என்பதை கிளிக் செய்து இதை நீங்கள் செய்ய முடியும்.
இமேஜ் தோன்றும் நேரம், எங்கே தோன்ற வேண்டும், எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் ஆகியவற்றை உங்களுக்கு விருப்பமானபடி மாற்றம் செய்யலாம். Changes செய்து முடித்த பின் Save செய்து விடுங்கள்.
படத்துக்கு உங்கள் சேனல் லோகோ அல்லது Transparent இமேஜ் கூட பயன்படுத்தலாம். 1MB க்குள் இருக்க வேண்டும். படம் சதுர வடிவில் இருப்பது தான் சிறந்தது.
இவற்றை செய்த பின் உங்களின் அனைத்து வீடியோவிலும் அந்த படம் வரும்.
Feature a video
இந்த வசதி மூலம் ஒரு குறிப்பிட்ட வீடியோவை நீங்கள் உங்கள் அனைத்து வீடியோக்கள் மூலம் பிரபலப்படுத்த முடியும். சேனல்க்கு செய்தது போலவே தான் இதிலும்.
Feature a video என்பதை கிளிக் செய்து, அதில் வரும் Pop-up விண்டோவில் எந்த வீடியோவை பிரபலப்படுத்த விரும்புகிறீர்களோ அதன் URL கொடுக்க வேண்டும். பின்னர் Save கொடுங்கள்.
அடுத்து முந்தையதை போலவே இதிலும் வீடியோ தோன்றும் நேரம், எங்கே தோன்ற வேண்டும், எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் ஆகியவற்றை உங்களுக்கு விருப்பமானபடி மாற்றம் செய்யலாம்.
Changes செய்து முடித்த பின் Save செய்து விடுங்கள். இனி உங்கள் வீடியோவில் நீங்கள் கொடுத்த செட்டிங்க்ஸ்க்கு ஏற்ப வீடியோ இமேஜ் வரும்.
இந்த இரண்டு வசதிகளும் மிகவும் பயனுள்ளவை.
இது குறித்த வீடியோ பதிவு.
வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
தகவல் - பிளாக்கர் நண்பன்
Source - Tech Hints
- பிரபு கிருஷ்ணா
6 comments
பலருக்கும் மிகவும் தேவையான தகவல்...
Replyமிக்க நன்றி...
நல்லதொரு பயன் தரும் தகவலுக்கு நன்றி...
Replyபயனுள்ள தகவல் நன்றி! பிளாக்கர் நண்பனுக்கும், பிரபு கிருஷ்ணாவிற்க்கும்.
Reply//வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். //
Replyபிளாக்கர் நண்பனும் கற்போம் தளமும் நண்பர்களா ???
நானும் இதை பத்தி எழுதலாம்னு நினச்சேன் நீங்க எழுதிடீங்க
Thsnk you for the post brother!
Reply:) :) :)
ReplyAll are my friends....
Post a Comment