Youtube இன்று வீடியோக்கள் காண மிக அதிகமானோர் பயன்படுத்தும் தளம். உங்கள் வீடியோக்களை பார்வையாளர் காணும் போது வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் அவர்கள் பார்வைக்கு வித்தியாசமாய் ஏதேனும் தெரியவைக்க Youtube பல வசதிகளை தருகிறது. அவற்றில் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம்.
அந்த புதிய வசதிக்கு பெயர் "Video Questions Editor". இதன் மூலம் வீடியோ Play ஆகும் போது அதில் வீடியோ சம்பந்தமாக கேள்விகள் கேட்கலாம். பார்ப்பவர் அவர் விருப்பத்தின் பேரில் விடையளித்த பின் வீடியோவை அவர் பார்க்கலாம்.
இதை வீடியோவாய் காண: [வீடியோ பார்க்க முடியாதவர்களுக்கு கீழே பதிவு உள்ளது]
இதை வீடியோவாய் காண: [வீடியோ பார்க்க முடியாதவர்களுக்கு கீழே பதிவு உள்ளது]
Youtube தளத்தில் உங்கள் கணக்கில் நுழைந்து Scroll செய்து கீழே வாருங்கள். அதில் "Try something new!" என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது வரும் பக்கத்தில் "Video Questions Editor" என்பதில் "Try it out " என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது அடுத்த பக்கத்தில் "Join the "Video Questions Editor" Beta" என்பதை கிளிக் செய்து உங்கள் "Video Manager" பகுதிக்கு வாருங்கள்.
ஏற்கனவே உள்ள ஒரு Video மீது Edit என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது வரும் பக்கத்தில் மேலே Info and Settings, Enhancements வரிசையில் Questions என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் "Add Questions" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் கேள்வியை நீங்கள் சேர்க்கலாம்.
இப்போது Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். "All changes saved" என்று மிகச் சிறியதாக வரும். இப்போது குறிப்பிட்ட வீடியோவை நீங்கள் பார்த்தால் நீங்கள் கொடுத்த நேரத்தில் அங்கே கேள்வி வந்து விடும்.
கேள்விகள் கேட்கும் போது வாசகர்களுக்கு எளிதான, உங்கள் வீடியோவுக்கு தொடர்புடைய கேள்விகளை கேட்கவும்.
Youtube குறித்த மற்ற பதிவுகள்:
- பிரபு கிருஷ்ணா
2 comments
நல்ல வசதி சகோ.!
Replyநல்ல தகவல் :)
ReplyPost a Comment