கடந்த முறை Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவை எழுதிய போது நிறைய நண்பர்களுக்கு அதில் இருக்கும் ஆர்வம பற்றி தெரிய வந்தது. அதிலும் நிறைய பேரின் கேள்வி "Paypal கணக்கில் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை Transfer செய்வது எப்படி?". எப்படி என்று இன்று பார்ப்போம்.
Paypal பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ள Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவை படியுங்கள்.
பணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும்.
1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும்.
2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Withdraw funds to your bank account" என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும்.
இதில்,
From this balance - உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.
Amount - நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.
To - எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள் கொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள் நாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.
Purpose code - என்ன காரணத்திற்கு பணம் Transfer செய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து விடலாம். அல்லது உங்கள் விருப்பம்)
இவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் இதை செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
- பிரபு கிருஷ்ணா
26 comments
பயனுள்ள தகவல் சகோ.! பேபால் பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Replyaccount ஆரம்பிக்க credit card தகவல்கள் கேட்கிறதே தரலாமா நம்பிகையானதா ?
ReplyCredit Card தர வேண்டிய அவசியம் இல்லை நண்பரே. அத்தோடு தருவதால் எந்த பிரச்சினையும் இல்லை. இது பாதுகாப்பானதும் கூட.
Replyநன்றி அன்பரே PAYPAL ACCOUNT NO என்று ஒன்றும் வர வில்லையே .எவ்வாறு மற்ற தளங்களில் அளிப்பது ?
Replyநீங்கள் Register செய்துள்ள மின்னஞ்சல் முகவரி தான் Account Number போன்றது. அதையே எல்லா தளங்களிலும் பயன்படுத்தலாம்.
ReplyThank you very much Krishna
Replyதங்களின் சேவை தொடர மனதார வாழ்த்துகள்
ReplyHow to change a name in paypal account . first of all i give my nick name
Replyநன்றி ப்ரதர்
Replyநன்றி ப்ரதர்
Replyநன்றி அன்பரே
Replyநல்ல பகிர்வு சகோ!!!
Replyno you cant change your name. delete your account and create it again.
Replyபலருக்கும் பயன் தரும் பகிர்வு... நன்றி...
Replyஉபயோகமான தகவல் சகோ!
ReplyPAY PAL ACCOUNT ல இந்திய பயனர்கள் purchase செய்ய முடியுமா ?
Replyமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் முயற்சித்தது இல்லை.
ReplyPaypal கணக்கில் இருந்து இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு பணத்தை Transfer செய்யலாமா?
Replyஇலங்கைக்கு தெரியவில்லை. நீங்கள் வங்கிக் கணக்கை Add செய்து முயற்சி செய்து பாருங்கள்.
Replyநல்ல பயனுள்ள பதிவு நன்றி .. by. 99likes
Replypaypal accountirkku creditcard thevaiya ? thevayillaya
Replyenbadhai kurippidavum
padhivittamaikku nandri
surendran
surendranath1973@gmail.com
கிரெடிட் கார்டு தேவை இல்லை.
Replyeapadi bank la erunthu paypal ku amt konduvarathu? avunga email ku send pana kudutha debit or credit card keakuthu, enkita State Bank of India Visa Debit card than eruku, atha kudutha sorry you card not accpet nu varuthu,
Replyஇந்தியாவில் வங்கியில் இருந்து நேரடியாக அனுப்ப முடியாது. Credit Card மூலம் மட்டுமே அனுப்ப முடியும். நீங்கள் பயன்படுத்தும் Debit Card-ம் பயன்படாது.
Replyஎன் sbi அக்கௌண்டில் இருந்து paypalக்கு சிறிது பணத்தை transfer செய்ய வேண்டும் எவ்வாறு செய்வது ?
ReplyPost a Comment