கற்போம் செப்டம்பர் மாத இதழ் (Karpom September 2012) | கற்போம்

கற்போம் செப்டம்பர் மாத இதழ் (Karpom September 2012)


நன்றி நன்றி நன்றி. ஆம் முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லித்தான் இந்தப் பதிவையே நான் ஆரம்பிக்க வேண்டும். கற்போம் இதழ் இதுவரை மொத்தமாக  10219 முறை கற்போம் தளத்தில் பகிர்ந்த இணைப்பில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு உள்ளது. 

கூகுள் தளத்தில் Karpom Magazine என்று தேடினால் நிறைய தளங்கள் வரும். அவைகள் பகிர்ந்த இணைப்புகளில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட எண்ணிக்கையை என்னால் கணக்கிட இயலவில்லை. 

ஆனால் இது நான் கண்டிப்பாக எதிர்பாராத ஒன்று. சும்மா, ஆரம்பிக்கலாமே என்று ஒரு நொடியில் விளையாட்டாக தோன்றிய எண்ணம், இன்று இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

சில நாட்கள் இது நமக்கு தேவையா என்று தோன்றினாலும், மின்னஞ்சல் மூலமும், பதிவின் பின்னூட்டம் மூலமும், நேரிலும், அலைபேசியிலும் கற்போம் இதழ் குறித்து கருத்து சொல்லும் நண்பர்களை நினைக்கும் போது இதை எந்த நிலையிலும் நிறுத்தக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.

கற்போம் இதழுக்கு தங்கள் பதிவுகளை தரும் தொழில்நுட்ப பதிவர்கள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அவர்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டு உள்ளேன். 

தொடர்ந்து சில பதிவர்கள் தங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்து இருப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தவாரம் கடற்கரை விஜயன் அவர்கள் புதியதாக இணைந்து உள்ளார். 

இதுவரை டவுன்லோட் செய்யப்பட்ட இதழ்களின் எண்ணிக்கை

  • ஜனவரி - 1470 
  • பிப்ரவரி - 1014 
  • மார்ச் - 707 
  • ஏப்ரல் - 717
  • மே - 626
  • ஜூன் - 785
  • ஜூலை - 4234
  • ஆகஸ்ட் -  666
இந்த மாத கட்டுரைகள்: 



  1. HTML5 என்றால் என்ன ? - ஒரு அறிமுகம்
  2. BROWSER COOKIES என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன?
  3. இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி ?
  4. உங்கள் கணினி இயங்கவில்லையா எளிய தீர்வு!
  5. கம்ப்யூட்டர் மூலம் கொசு விரட்டலாம்
  6. ஆப்பிள் VS சாம்சங் - 5800 கோடி வழக்கு
  7. YOUTUBE - சில அடிப்படை தகவல்கள்
  8. பயனுள்ள பத்து குறிப்புகள்
  9. WINDOWS 7-இல் GODMODE என்றால் என்ன ? பயன்படுத்துவது எப்படி ?
  10. பேஸ்புக்கில் மொபைல் எண்கள் பத்திரம்
  11. YOUTUBE மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
  12. INSTALL செய்த மென்பொருளை UNINSTALL செய்யாமல் வேறு டிரைவ்க்கு MOVE செய்வது எப்படி ?



தரவிறக்கம் செய்ய

19 comments

Link வேலை செய்யவில்லை பிரபு..!!

Reply

உண்மையிலேயே பெரிய விஷயம் நண்பா, தரமான தகவல்களை மின்னூல் தாங்கி வருவதால் தான் இத்தகைய வெற்றியை அடைய முடிந்திருக்கிறது என்று கருதுகிறேன்! உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்!

BTW, இன்று தளம் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது போல் தெரிகிறது பிரபு, கவனிக்கவும்!

Reply

இப்போது வேலை செய்கிறது அண்ணா. சின்ன தவறு நடந்து விட்டது.

Reply

இதுவே என் கருத்தும்!

மேலும் ஒவ்வொரு மாதமும் அட்டைப்பட வடிவமைப்பும் அழகாக உள்ளது. 10,000+ பதிவிறக்கங்கள் என்பது உண்மையில் சாதனை தான் சகோ.!

Reply

நான் இணையத்தில் கற்போம் இதழை பார்த்து பதிவிறக்கி படித்தேன்.. வேறொரு தளத்தில் இருந்து... அதன் பிறகுதான் கற்போம் தளத்தை அறிந்து கொண்டேன். கணினி பயன்படுத்தும் தமிழ் நண்பர்களுக்கும்.தமிழ் வலைப்பதிவர்களுக்கும் கற்போம் இதழ் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூறுவேன்.. நீங்கள் கூறிய படி எந்தநிலையிலும் இதை நிறுத்த வேண்டாம் நண்பா.. தொடர்க உங்கள் தமிழ்ப்பணி. இந்த மாத இதழுக்கு நன்றிகள்..
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்
(கற்போம் இதழ்கள் அனைத்தையும் ஸ்கைடிரைவில் பதிந்து வைத்துள்ளேன். இணையவசதி இல்லாத நண்பர்களுக்கு பென்டிரைவில் காப்பி செய்தும் கொடுத்துள்ளேன்)

Reply

:) save to link .nandri

Reply

வாழ்த்துக்கள் அண்ணா,என் கட்டுரையை பிரசுரம் செய்தமைக்கு நன்றிகள்.

Reply

மிகப் பெரிய சாதனை... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Reply

அன்பின் பிரபு - தரவிறக்கம் செய்து விட்டேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

கற்போம் குழுவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா...

Reply
This comment has been removed by the author.

thanku very much friend , all news very use full for me, all the best

Reply

i'm doing mca final year next sem i have 6 month project , so please give some idea about projects, and new idea ,please help me friend .

Reply

நண்பரே தமிழுக்கு தங்களைப்போன்ற தொழில்நுட்ப பதிவர்கள் செய்யும் தொண்டு மகத்தானது தொடருட்டும் உங்கள் அரும்பணி. தமிழ் தளங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் தருவதில்லையே தாங்கள் பெற்றது எப்படி ? அதைக்கூறினால் ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்கள் பயனடைய முடியுமே ? கூறுவீர்களா ?

Reply

உங்கள் கருத்துக்கு நன்றி. நான் பயன்படுத்திய அட்சென்ஸ் கணக்கு நான் என் ஆங்கில கணக்குக்கு வாங்கியது.

தமிழ் தளங்களை பயன்படுத்தி அட்சென்ஸ் வாங்க இயலாது.

Reply

Nice work friend... I downloaded it and Shared it to many friends...

Reply

//சும்மா, ஆரம்பிக்கலாமே என்று ஒரு நொடியில்
விளையாட்டாக தோன்றிய எண்ணம்//

மகத்தான சாதனைகள் எல்லாம் இப்படி நொடிப்பொழுதில் தோன்றிய எண்ணம்தான் பிரபு, அது தோன்றுவதல்ல, மாறாக உங்களைப்போல் படைப்பாளிகளுக்கு தோற்றுவிக்கப்படும் எண்ணம், எங்களைப்போல் எதிர்பார்ப்பவர்களுக்கு.

மென்மேலும் கற்ப்போம் இதழ் சிறப்பாக வ(ள)ர கற்போம் இதழ் குழுவினருக்கு வாழ்த்துகள். நன்றி.

Reply

நல்லதொரு பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !by. www.99likes.blogspot.com

Reply

Post a Comment