Android Lost - உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க | கற்போம்

Android Lost - உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க


பெரும்பாலும் நாம் வாங்கும் ஆன்ட்ராய்ட் போன்கள் ரூபாய் 8000 என்ற அளவில் இருந்து தெரிவு செய்வோம். அதற்கும் குறைவாக கூட கிடைக்கிறது. ஆனால் நல்ல Specification என்று பார்க்கும் போது நாம் விலை உயர்ந்த ஒன்றை தான் தெரிவு செய்து வாங்குகிறோம். அவ்வளவு போட்டு வாங்கிய பின் அதை தொலைத்து விட்டால்? உங்கள் போன் போவது மட்டுமின்றி, உங்கள் அனைத்து ரகசியங்களும் திருடியவன் கைக்கு சென்று விடும். 

அப்படி தொலைந்து போனால் அதை எப்படி திரும்ப கண்டுபிடிப்பது, அதை இணையத்தில் இருந்து கண்ட்ரோல் செய்வது என்பதற்கு உதவுகிறது Android Lost. 

முதலில் இதை நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் http://www.androidlost.com/ என்ற அவர்கள் தளத்தில் உங்கள் கூகுள் கணக்கின் மூலம் நுழைந்து தகவல்களை தர வேண்டும். 

அதில் பல தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். பொறுமையாய் படித்து ஒவ்வோட்ரையும் புரிந்து கொண்டு அதை நிரப்பவும். 

  • Basic
  • Status
  • Messages
  • Security
  • MobilePremium
இந்த ஐந்து பகுதிகளும் தான் நீங்கள் நிரப்ப வேண்டியது. 

அடுத்து உங்கள் போனில் 

Settings >> Location & Security >>Select Device Administrator என்பதில் இதை Device Administrator ஆக தெரிவு செய்து விடவும். 

முடிந்தது வேலை. இனி உங்கள் போன் தொலைந்து போனால் இதில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய இயலும். 

நான் அவற்றை இது வரை செய்து பார்த்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை சிம் கார்டு மாற்றும் போதும் நான் தந்துள்ள நண்பரின் அலைபேசிக்கு என்னுடைய புதிய Sim Card நம்பர் மெசேஜ் ஆக சென்று விடும். (balance இருந்தால் மட்டும்) . இது ஒன்றே உங்கள் அலைபேசியை கண்டுபிடிக்க போதும். இதை Activate செய்ய http://www.androidlost.com/ - இல் SMS என்ற மெயின் menu வில் SMS Allow என்ற பகுதியில் நீங்கள் செய்யலாம். இந்தியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வசதி. 


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 


18 comments

பயனுள்ள பதிவு பிரபு அண்ணா

Reply

பயனுள்ள தகவல் நண்பரே... நன்றி...

Reply

பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

Reply

நன்றி சகோ நன்றி...

ஒரு உதவி முடிந்தால் உதவ முடியுமா?

Reply

என்னிடம் galuxy tab p1000 போன் உள்ளது இது 2.2 அண்ரோயிட் வேர்சன் ஆகும். இதில் தமிழ் படிக்கவே முடியாது.

இதை அடுத்த வேர்சனுக்கு மாற்றுவது சம்பந்தமான தகவல்கள் ஏதாவது இருந்தால் பகிர முடியுமா?

Reply

போன் பாதுகாப்பிற்கு இது போன்ற பல Application உள்ளன.. உதாரணம் ( Kaspersky ) (Nortan ) இது போன்று பல application உள்ளன. Play Store இல் சென்றால் இந்த application கள் அனைத்தும் பணம் கட்டி தான் வாங்க வேண்டி வரும். நான் சொல்கின்ற website க்கு செல்லுங்கள் . பணம் கட்டி பெறுகின்ற Android . iphone . ipad . போன்ற அனைத்து Plotform Full Version Application கள் அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். www.approb.com/android
நான் android application டவுன்லோட் செய்யும் link ஐ கொடுத்து இருக்கிறேன். வெப்சைட் உள்ளே சென்றவுடன் iphone. ipad. Software களின் Full Version இலவசமாக கிடைக்கும். உபயோகித்து பாருங்கள். அருமையான வெப்சைட்

Reply

(ம.தி.சுதா) Samsung mobile And Tablet இரண்டிலுமே Android Software Update செய்யும் வசதியை தர மறுக்கிறார்கள். samsung இல் 3,0000 குடுத்து mobile அல்லது Tablet வாங்கினாலும் Software Update வராது. Sony And HTC இல் மட்டும் தான் அப்டேட் செய்யும் வசதி இருக்கிறது. நான் sony xperia mini 8 மாதம் முன்பு வாங்கினேன். அப்பொழுது Android 2.3 gingerbread version தான் இருந்தது. 2 மாதம் முன்பு Android 4.0 ice cream sandwich version update செய்து கொண்டேன். முக்கியமான விஷயம் நான் மொபைல் வாங்கும் போதே update செய்யும் வசதி இருக்கின்றதா என்று கேட்டு தான் வாங்கினேன். வாரம் ஒரு முறை sony customer care ஐ தொடர்பு கொண்டு எப்பொழுது என் மொபைலுக்கு 4.0 update வரும் என்று கேட்டு கொண்டே இருந்தேன் அதனால் தான் எனக்கு update வந்த வுடன் தெரிந்தது. Android Mobile வாங்கினால் sony அல்லது HTC தான் வாங்க வேண்டும். மத்ததெல்லாம் வேஸ்ட்

Reply

பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி சகோ!

Reply

2.3 க்கு Update செய்ய முடியும் அண்ணா. கீழே உள்ள இணைப்பில் கூறி இருப்பது போல செய்யுங்கள்.

http://www.samsung.com/hk_en/galaxytab_upgrade/gingerbread/

Reply

HTC & Sony best Android mobiles

Reply

பயனுள்ள பதிவு..நன்றி நண்பா

Reply

iphone country code unlock செய்வது முடிந்தால் அடுத்த பதிவில் விளக்கவும்

Reply

நயனுள்ள பதிவு நண்பா iphone country code எவ்வாறு unlock செய்வது முடிந்தால் அடுத்த பதிவில் விளக்கவும்

Reply

Mr.ARAFATH AJIRAN. iphone மற்றும் ipod full Version softwares இலவசமாக கிடைக்கும் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். நான் iphone உபயோகித்தது இல்லை. country code unlock செய்வது பற்றி எனக்கு தெரியவில்லை. என் நண்பர்களிடத்தில் கேட்டு சொல்கிறேன். Sorry

Reply

NANBA SAMSUNG MOBILE LAIYUM UPDATE PANNALAM. CONTACT SPEEDSAMS786@GMAIL.COM

Reply

என்னோட ஆன்ட்ராய்ட் போன்லா ட்ரை பன்னுறேன் நன்றி நண்பரே...

என் தளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பதிவு செய்து உள்ளேன்..
http://yayathin.blogspot.in/2012/09/blog-post_1647.html

Reply

மிக்க நன்றி சகோ வெற்றிகரமாக எந்தவித சிரமமுமின்றி எனது போனை 2.3 ற்கு மாற்றி விட்டேன்...

மிக்க மிக்க நன்றி

ஆனால் முன்னர் இருந்ததை விட சற்று வேகம் கூடியுள்ளதே தவிர இப்போதும் அதில் தமிழ் யுனிக்கோட் எழுத்துருவை அதனுடைய இணைய உலாவியில் படிக்க முடியவில்லை பெட்டி பெட்டியாகவே வருகிறது... (ஒபேரா தான் இப்போ பாவிக்கிறேன்)

fontimizer தரவிறக்கியும் போட்டுப் பார்த்தேன் அதில் இதற்கான எழுத்துருவைக் காணவில்லை என்ன செய்யலாம்...

Reply

Opera Mini Browser, dolphin browser போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

Opera Mini-யில் தமிழ் தெளிவாக தெரிய

http://gnutamil.blogspot.in/2012/02/opera-mini-browser.html

Reply

Post a Comment