Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய | கற்போம்

Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய


தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். 



இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. 

இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். 

Cha - ச
sa - ஸ 
sha - ஷ
A - ஆ
a- அ
ro - ரொ
roo - ரோ
Roo -றோ
Luu - ளூ
luu - லூ
za - ழ
ZE - ழே
nj- ஞ்
nja - ஞ
q- ஃ

இதே போல தான் மற்ற அனைத்துக்கும். நான் என் அலைபேசியில் தட்டச்சு செய்ததை கீழே படத்தில் காணலாம். ஏதேனும் கேள்வி இருப்பின் admin[at]karpom.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஈமெயில் செய்யவும். 



REQUIRES ANDROID: 1.6 and up

PRICE:Free



அல்லது 

இந்த QR கோடை Scan செய்யவும்.


17 comments

மிக்க நன்றி நண்பரே... டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறேன்...

Reply

அட சூப்பர் மச்சி ட்ரை பண்ணிடுவம்.. ஆனா நண்பா ANDROID மூலம் QUICK OFFICE (SAMSUNG) பற்றி நேரம் இருந்தால் எழுதுங்க.. ஒன்னுமே புரியல.. ஆனா WORD, PDF எல்லாம் அதன் மூலம் ஓபன் ஆகுது.. அதன் மூலம் டைப் work பண்ணலாமா

Reply

மிக்க நன்றி நண்பரே.. சாம்சுங்கில் எப்படி தமிழ் டைப்பண்ணுவது
என்று விளக்கமா சொல்லமுடியுமா

Reply

உபயோகமான பகிர்வு, நன்றி!

Reply

'Tamil Unicode Keyboard' ஐ விட 'Panini keypad tamil ime' என்கிற இந்த application தமிழில் டைப் செய்ய மிக நன்றாக உள்ளது. Play store இல் download செய்து இதை உபயோகித்து பாருங்கள்.

Reply

Android mobile il tamil padhivughalai eppadi padippadhu endu sollungale pls..

Reply

ஆன்ட்ராய்ட் மொபைலில் உள்ளதா?

Reply

ஆன்ட்ராய்ட் மொபைல் என்றால் இதன் மூலமே செய்து விடலாம் நீங்கள்.

Reply

பயன்படுத்திப் பார்க்கிறேன் நண்பரே.

Reply

Thakavalukku nandri

Reply

தகவலுக்கு நன்றி..நண்பா

Reply

ஆண்ட்ராயட் 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விட்ச் இல் தமிழ் மொழி அனைத்து browser களிலும் சப்போர்ட் செய்கிரது. எனது சோனி எக்ஸ்பீரியா மினி மொபைலில் ஆண்ட்ராயட் 4.0 அப்டேட் செய்து விட்டேன். சோனி நிறுவனம் தனது அனைத்து ஆண்ட்ராயட் மொபைலிலும் அப்டேட் செய்யும் வசதியை தருகிறது. .அது போல் மற்ற நிறுவனங்களும் அப்டேட் வசதியை. தறுகிறதா என்று அதன் வாடிக்கையாளர் மையத்தை தொடர்ப்பு கொண்டு அப்டேட் செய்து கொள்ளவும்.

Reply

sms type பண்ணிணால் ஆங்கிலம் தான் வருகிறது.தமிழ் வரவில்லை அதுதான்.எப்படி தமிழுக்கு மாத்துறது.

Reply

இதே போல தமிழ்99 முறையில் தட்டச்ச ஏதும் வசதிகள் உள்ளனவா?

Reply

நண்பர்களே, ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் டைப் செய்ய, TamilVisai யை Play Store-இல் இருந்து இறக்கி உபயோகிக்கலாம். தமிழ் வலைத்தளங்களைப் படிக்க SETT எனும் ப்ரௌசரை உபயோகியுங்கள்.

Reply

Post a Comment