கூகுளின் முகப்பு பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை கொண்டாடுகிறது
கூகுள் இதை எப்படி செய்கிறது ?
நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுன்ட் டில் Log inசெய்யும் போது அது உங்கள் பிறந்தநாளை செக் செய்கிறது.அது அன்றைய தினத்துடன் மேட்ச் ஆகினால் உங்கள் கூகுள் ஒரு புதிய டூடுளை (doodle)(கூகிள் முகப்பு படம்) உங்கள் முகப்பு பக்கத்தில் காட்டி உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.
கேக் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் உங்களுக்கு மட்டும் காட்டப்படும் இந்த பிரத்யேக முகப்பு பக்கத்தின் அருகே நீங்கள் உங்கள் மவுஸின் கர்சரை கொண்டு சென்றால்."Happy birthday..............(உங்கள் பெயர்)" என்று எழுதி காட்டும்.அதை நீங்கள் க்ளிக் செய்தால் உங்கள் கூகிள் பிளஸ் Profile திறக்கப்படும்.
இந்த விசயத்தை கூகிள் எப்போதிருந்து செய்கிறது?
2010 ம் வருடத்திலிருந்து இந்த "பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்' கூகிளின் முகப்பு பக்கம் நடைமுறையில் உள்ளது இது ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் முகப்பு பக்கத்தில் கேக் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்கிறது (பார்க்க படம்).
சில மாதங்களுக்கு முன் கூகுள் இந்த டூடிலை(Doodle) மறு வடிவம் செய்திருக்கிறது.(இதுல 6 கேக் இருக்கு!!!).
கூகிள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல:
1.கூகிளில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கனும்
2.கூகிள் பிளஸ் -ல் உங்கள் பிறந்த நாளை (Date of birth) கொடுத்திருக்க வேண்டும்.
3.உங்க பிறந்த நாள் அன்று நீங்கள் அக்க்வுன்டில் லாக் இன் ஆகியிருக்க வேண்டும்.
இதெல்லாம் நீங்க செய்திருந்தீர்கள் என்றால் கூகுள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.
Google நிறுவனத்தினர் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ???
இணைய உலகின் தல கூகுள் தான்.தல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல.
About The Author:
| |
பதிவை எழுதிய விஜயன் துரைராஜ் கடற்கரை என்னும் வலைப்பூவில் தொழில்நுட்பம், கட்டுரை, கவிதை என பல எழுதி வருகிறார். கற்போம் தளத்திற்கு தன் தொழில்நுட்ப பதிவுகளையும் தருகிறார்.
|
நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா?
12 comments
>>>கூகிளில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கனும்<<<
Replyஅக்கவுன்ட் ஓபன் பண்ண எவ்வளவு டெபாசிட் கட்டணும்னு சொன்னா பணம் எடுத்துட்ட வர தோதா இருக்கும்! :)
//சில மாதங்களுக்கு முன் கூகுள் இந்த டூடிலை(Doodle) மறு வடிவம் செய்திருக்கிறது.//
Replyஒரு வேளை கேக் பழசா ஆயிடுச்சுன்னு மாத்தியிருக்கும். :)
நல்ல தகவல் நண்பா!
வித்தியாசமான பதிவு நன்றி நண்பரே...
Replyஎன் தளத்தில் என் காதல் க(வி)தை...( http://yayathin.blogspot.com/2012/09/01.html )
நல்ல தகவலுக்கு நன்றி...
ReplyUngal Pathivu Arumai nanbare...
Replyhttp://gobletmoon.blogspot.in/
அட.. புதுசா இருக்கே!!
Replyம்ம்ம்
Replyகூகுள்க்கு பணம் எதுவும் தரத்தேவை இல்லை. இத சொன்ன விஜயன்க்கு நீங்க தரலாம் ;-)
Replyகூகிள் இலவசமாக அக்கவுன்ட் ஓபன் செய்து தரும்போது அதற்கு டெபாசிட் எதற்கு நன்பரே,பிரபு அண்ணா சொன்ன மாதிரி செய்தால் நல்லாதான் இருக்கும்.. :)
Replyபதிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா!
Replyஆகா ஆகா - பிரபு நல்லதொரு தகவல் - அக்டோபர் 16 - நெருங்குகிறது - பயன படுத்துகிறேன். தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
Replyஇருக்கலாம் அண்ணா..
ReplyPost a Comment