ஒரு வீடியோவை Upload செய்வது எப்படி ?
உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதும் நீங்கள் நேரடியாக ஒரு வீடியோவை Upload செய்யலாம். www.youtube.com தளத்துக்கு சென்று Upload என்பதை கிளிக் செய்தால் Upload செய்யும் வசதி இருக்கும்.
இதில் நான்கு வகையான முறையில் Upload செய்யலாம்.
Public - இணையத்தில் எவரும் பார்க்கலாம்.
Unlisted - நீங்கள் லிங்க் கொடுத்தால் மட்டுமே பார்க்க முடியும்.
Private - உங்களால் மட்டுமே பார்க்க முடியும்.
Scheduled - நீங்கள் கொடுக்கும் நேரத்தில் Publish ஆகும்.
எப்படி Title, Description, Tags கொடுப்பது ?
என்ன வீடியோ என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. அதற்கு சம்பந்தமான ஆங்கில டைட்டில் வைத்தால் நிறைய Views வர வாய்ப்பு உள்ளது. வீடியோவில் என்ன உள்ளது, யார் உள்ளார்கள் என்பதை Description பகுதியில் தர வேண்டும். எப்படி Tags - கொடுப்பது என்பது இந்த பதிவில் உள்ளது Youtube கொஞ்சம் ரகசியங்கள்
Enhancements என்றால் என்ன ?
உங்கள் வீடியோவை Upload செய்த பின் அதில் சில சிறிய எடிட்டிங் வேலைகளை செய்ய இது உதவுகிறது. உங்கள் வீடியோவை நீங்கள் பார்க்கும் போது டைட்டில்க்கு மேலே Enhancements என்பதை கிளிக் செய்தால் இந்த பக்கத்துக்கு வரலாம். இதில் உங்கள் வீடியோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அதில் இருக்கும் படங்களை கொண்டு தெரிவு செய்யலாம்.
இதைப் பற்றிய விரிவான பதிவு - Youtube தரும் அசத்தலான புதிய வசதி
Video Manager என்றால் என்ன?
Uploads பகுதியில் நீங்கள் Upload செய்த அனைத்து வீடியோக்களும் இருக்கும் பகுதி இது. இதில் ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழே உள்ள Edit என்பதை கிளிக் செய்தால் Info and Settings, Enhancements, Audio, Annotations, Captions, Download as MP4, Promote போன்ற வசதிகள் இருக்கும்.
Playlist - இதில் நீங்கள் உருவாக்கிய Playlist- கள் இருக்கும். இதை உருவாக்க கீழே படிக்கவும்.
History - நீங்கள் பார்த்த வீடியோக்கள் இதில் இருக்கும்.
Search History - நீங்கள் Youtube- தேடிய சொற்கள் இதில் இருக்கும்.
Watch Later - பின்னர் பார்க்கலாம் என்று நீங்கள் கொடுத்த வீடியோக்கள் இதில் இருக்கும்.
Favorite - நீங்கள் Favorite செய்த வீடியோக்கள் இதில் இருக்கும்.
Likes - நீங்கள் லைக் செய்த வீடியோக்கள் இதில் இருக்கும்.
ஒரு Playlist உருவாக்குவது எப்படி?
உங்கள் வீடியோவுக்கு உருவாக்க
Video Manager பகுதியில் எந்த வீடியோக்களை Playlsit - இல் சேர்க்க வேண்டுமோ அவற்றை வீடியோவுக்கு இடது பக்கம் உள்ள Radio Button மீது கிளிக் செய்து மேலே உள்ள Add To என்பதை கிளிக் செய்தால் Add New Playlist என்று வரும் அதில் சேர்த்து விடலாம்.
நீங்கள் பார்க்கும் மற்றவர் வீடியோக்களை Playlist ஆக்க.
பார்க்கும் குறிப்பிட்ட வீடியோவுக்கு கீழே உள்ள Add To என்பதை கிளிக் செய்து புதிய Playlist உருவாக்கி கொடுக்கலாம். அல்லது Favorite என்பதில் கொடுக்கலாம்.
குறிப்பிட்ட Playlist - ஐ நண்பர்களுடன் Share செய்ய Video Manager பகுதியில் Playlist என்பதை கிளிக் செய்து Playlist பெயர் மீது கிளிக் செய்து அந்த Link - ஐ நண்பர்களுடன் பகிரலாம். இதன் மூலம் அவர்கள் அனைத்து வீடியோக்களையும் வரிசையாக காண முடியும்.
நீங்கள் Playlist உருவாக்கும் போதே அது Public அல்லது Private என்று தெரிவு செய்து கொடுக்கும் வசதியும் உள்ளது.
வீடியோவை Delete செய்வது எப்படி ?
Video Manager பகுதியில் குறிப்பிட்ட வீடியோ[க்களை] Radio Button மீது கிளிக் செய்து தெரிவு செய்து Actions என்பதை கிளிக் செய்தால் Delete வசதி வரும். அத்தோடு Video Privacy- ஐ (Public, Private, Unlisted) மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
ஏற்கனவே உள்ள வீடியோ, ஆடியோக்களை பயன்படுத்துவது எப்படி?
Youtube-இல் உள்ள நிறைய வீடியோக்களில் நீங்கள் பலவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். அவை பற்றி அறிய பிளாக்கர் நண்பன் தளத்தின் இந்த பதிவை படிக்கவும் - ரீமிக்ஸ் செய்ய 40 லட்சம் வீடியோக்கள்
Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி ?
இதற்கு நிறைய வழிகள் உள்ளன.
Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?
Youtube - சிறந்த வீடியோ downloader
Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக
Youtube மூலம் சம்பாதிப்பது எப்படி ?
நிறைய வசதிகள் உள்ள இதன் மூலம் நீங்கள் வருமானம் பெறவும் முடியும். எப்படி என்று அறிய - Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி ?
இதற்கு நிறைய வழிகள் உள்ளன.
Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?
Youtube - சிறந்த வீடியோ downloader
Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக
Youtube மூலம் சம்பாதிப்பது எப்படி ?
நிறைய வசதிகள் உள்ள இதன் மூலம் நீங்கள் வருமானம் பெறவும் முடியும். எப்படி என்று அறிய - Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
- பிரபு கிருஷ்ணா
10 comments
பயனுள்ள தகவல் சகோ. பல புதியவர்களுக்கு பயன்படும்.
Replyவிளக்கம் அருமை... நன்றி... (TM 5)
Replyபல புதிய தகவல்கள் இன்று தான் அறிய முடிந்தது நன்றி !!!
Replyசிறப்பான தகவல்கள்! நன்றி!
Replyஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
Thagavalukku nandri
Replyஅறிந்து கொண்டேன்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
Replyநிறைய தகவல், பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyVery useful sharing Prabu, go ahead . thank you.
Replyநண்பரே பேஸ்புக்கில் எனது கருத்தைக் கொடுத்து இருக்கிறேன்.வாழ்க வளமுடன்.
Replyகொச்சி தேவதாஸ்
பல புதிய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்..நன்றி நண்பா..
ReplyPost a Comment