Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி? | கற்போம்

Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி?

சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் Babylon Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும் Firefox - இல் தான் இது add ஆகும். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம். 

முதலில் Firefox Add-ons பகுதியில் இருந்து Babylon Extension - ஐ நீக்கி விடுங்கள். 

வழி 1 : 

Firefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும். 


அவ்வளவு தான் இனி  Babylon Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும். 

வழி 2 : 

1. C:\Program Files\Mozilla Firefox\searchplugins என்பதில் babylon file - ஐ நீக்கி விடுங்கள். 

2. இப்போது Firefox - ஐ ஓபன் செய்து URL Bar- இல் about:config என்பதை தரவும். 

3. அதில் உள்ள Search பகுதியில் babylon என்பதை தரவும். இப்போது வரும் பகுதியில் keyword.url என்பதில் www.google.com என்பதை தரவும். 

மற்ற எதிலும் babylon என்று இருந்தால் "search the web (babylon)" என்பதை "search the web (google)" என்று மாற்றவும். 

அவ்வளவே இப்போது babylon உங்கள் Firefox- இல் இருந்து நீக்கப்பட்டு இருக்கும். 

மற்ற ப்ரௌசெர்களில் (குறிப்பாக Chrome) Extensions பகுதியில் இதை நீக்கி விட்டு, Home Page இல் உங்களுக்கு விருப்பமான பக்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். 

இதை தவிர்க்க மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் போது அனைத்துக்கும் ஓகே தராமல், என்ன? எதற்கு ? என்று பார்த்து தரவும். முக்கியமாக Toolbar ஏதேனும் வந்தால் அதை Unclick செய்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

9 comments

மிக்க நன்றி சகோ, உபயோகமான தகவல்!

Reply

பயன்தரும் தகவல்... மிக்க நன்றி நண்பரே...

தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 5)


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

Reply

உபயோகமான தகவல்!நன்றி நண்பரே...

Reply

fire fox இல் மட்டுமல்ல, google.co.in, google chrome லும் புகுந்துவிடுகிறது.
மென்பொருட்களை uninstall செய்து மீண்டும் install செய்துதான் இதை நீக்கினேன்.[மூன்று முறை இப்படி ஆனது].

எளிமையான வழி சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

Reply

மிக்க நன்றி சகோ, உபயோகமான தகவல்!

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

VERY GOOD POSTING TO ESCAPE FROM "BABYLON" THANK YOU PRABU

Reply

padhivu nandru
surendran

Reply

Post a Comment