கற்போம் ஆகஸ்ட். வழக்கம் போல பல பயனுள்ள கட்டுரைகளுடன் வந்துள்ளது. அத்தோடு கடந்த ஜூலை மாதம் கற்போம் வரலாற்றில் ஒரு மைல்கல் எனும் அளவுக்கு மிகப் பெரிய அளவு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவை.
- கற்போம் தளம் 5 லட்சம் Page Views தாண்டியது.
- கற்போம் பேஸ்புக் பக்கம் 500 ரசிகர்களை கடந்தது.
- 200 பதிவுகளை தாண்டியது.
- மின்னஞ்சல், RSS Subscriptions ஆயிரத்தை தாண்டியது.
- தமிழ் மணத்தில் வாராவாரம் வரும் Top Blogs பகுதியில் தொடர்ந்து Top 20 க்குள்.
அடுத்தது மிகப் பெரிய செய்தி, கற்போம் இதழ் இதுவரை 8500 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த மாத இதழ் மட்டும் 3500+ முறை.
இந்த கணக்கீடு வெறும் கற்போம் தளத்தில் பகிரப்பட்டுள்ள லிங்க் மூலம் மட்டுமே. இணையத்தில் நிறைய நண்பர்கள் அவர்களின் தளங்களில் இதை upload செய்து பகிர்ந்து வருகிறார்கள், அந்த கணக்கை இதில் சேர்க்கவில்லை.
இத்தனை சாதனைகளுக்கும் காரணம், கற்போம் இதழுக்கு தங்கள் பதிவுகளை தரும் தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் தான். அவர்கள் இல்லாமல் கட்டாயம் இது சாத்தியம் இல்லை. எனவே இதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அத்தோடு கற்போம் தளத்தை படிப்பவர்கள் மற்றும் பேஸ்புக்கில் தொடர்பவர்கள், மின்னஞ்சல் மூலம் தொடர்பவர்கள் ஆகிய அனைத்து வாசகர்களுக்கும் எங்களது நன்றி.
இனி இந்த மாத பதிவுகள்.
- MS Office 2013என்ன புதுசு இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி [Consumer Preview]
- விளையாட்டு காட்டும் Google [Easter Eggs]
- Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த தளங்கள்
- இந்தியா உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்டம்
- இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற
- உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-4
- ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்
- கூகுள் தேடுபொறியில் புதிய SCIENTIFIC CALCULATOR மற்றும் UNIT CONVERTER வசதிகள்
- தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி ?
- கணித்தமிழ் அமுதம் மறைவு
- பிரபு கிருஷ்ணா
20 comments
வாழ்த்துக்கள் நண்பா....!
Replyவாழ்த்துக்கள்
Replyமிகச்சிறப்பான முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்... தங்களின் கற்போம் நாளிதழ் மேலும் சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....
Replyமற்றும் முகப்பு டிசைனிங் யார் செய்யுறது நீங்களா? சூப்பரா இருக்கு... யாராக இருந்தாலும் அவருக்கும் என்னுடைய வாழ்துக்கள்....
வாழ்த்துகள் பிரபு.. நிறைய சாதிச்சிருக்கீங்க...
Replyஎனக்கு மிக மகிழ்ச்சி...
உங்களுடைய யோசனைகளும், உத்திகளும்தான் ஜெயிக்க வைச்சிருக்கு...
கற்போம் மாத இதழ் தாயாரிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்னு எனக்கு நல்லா தெரியும்.. அதுக்கு வேண்டிய பதிவுகளை தேடிப் பிடிச்சு வரிசைப் படுத்தி, அதை மறுபடியும் பி.டி.எப். ஆக மாற்றி.. அதற்கு கவர் இமேஜ் போட்டு.. இப்படி...
எத்தனை வேலைகள் இருக்கும்.. நானாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு மாத இதழ்களிலேயே பின் வாங்கியிருப்பேன்...
இதைத் தவிர மற்ற வலைத்தளங்களையும் கவனிக்கறீங்க.. கூடவே ஆபிஸ் வேலையும், அதுவில்லாம குறும்படம்.. கவிதைன்னு...
என்ன மனுஷன்யா நீ..?
எப்படி இதெல்லாம் முடியுது?
எனக்கு பொறாமையா கூட இருக்கு..
குட்..
கீப் இட் அப்...மை பாய்...
மற்றுமுள்ள கற்போம் வலைத்தள ஆசிரியர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கறேன்.
வாவ்! வாழ்த்துக்கள் சகோ. உங்களுக்கும் கற்போம் குழுவினருக்கும். இந்த சாதனையில் உங்கள் பங்கு தான் அதிகம் உள்ளது. மேலும் பல சாதனைகள் செய்யவும் வாழ்த்துக்கள்!
Replyஅருமை தம்பி.......
Replyகற்போம் தளத்தின் அதீத வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மின்நூல் வெளியிடுவதே தங்கள் வளர்ச்சியின் ஒரு மைல்கல்...
தங்களுக்கும், அனைத்து உதவியாளர், ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அசத்திய சாதனை! மேன்மேலும் வளர இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரபு :)
Replyமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
Replyடவுன்லோட் செய்கிறேன்...
நன்றி...
(த.ம. 3)
வாழ்த்துக்கள் நண்பா...
Replyகற்போம் வலைத்தள ஆசிரியர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்...
நண்பா! எங்கள் கல்லூரியில் மீடியா ஃபயர் தளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தங்களால் ziddu தளத்தில் தரவேற்ற இயலுமா அனைத்து கற்போம் இதழ்களையும்???? ப்ளீஸ்.......
Replyவிரைவில் இன்னொரு தளத்தில் Upload செய்வோம். சில நாட்களில் லிங்க் தருகிறேன்.
Replyமுகப்பு டிசைனிங் செய்தது நான் தான்.
Replyவாழ்த்துக்கள்
Replyஅன்பின் பிரபு - கற்போம் இதழின் முன்னேற்றம் பற்றி மிக்க மகிழ்ச்சி - நிர்வாகத்தினர் - பிரபு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்த்துகள் - நட்புடன் சீனா - அனைத்து இதழ்களூம் தரவிறக்கம் அப்பொழுதே செய்து விடுகிறேன். ஐயம் வரும் பொழுது பார்த்து சரி செய்ய வசதியாய் இருக்கிறது. தகவல்கள் பகிரும் அனைவருக்கும் நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyமிக்க நன்றி பிரபு மற்றும் ஆசிரியர் குழுவிற்க்கும். மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள். நன்றியுடன் ரவி சேவியர்.
Reply@saravana kumar . plz use hidemy ip or hidemyass website . then u can access any site's
Replyவாழ்த்துகள் நண்பர்களே
ReplyEXCELLENT SIR
Replyஎனது கட்டுரையினை வெளியிட்டமைக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
Replyஉளமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyPost a Comment