பேஸ்புக்கில் ஒரு Page உருவாக்குவது எப்படி? | கற்போம்

பேஸ்புக்கில் ஒரு Page உருவாக்குவது எப்படி?


மிக பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை பகிர, உங்கள் திறமைகளை ரசிக்கும் நபர்களை ஒருங்கிணைக்க உதவும் ஒரு வசதி தான் Page. இதன் மூலம் உங்களை,உங்கள் படைப்புகளை, உங்கள் தொழிலை பிரபலப்படுத்த முடியும். அதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். 

1. முதலில் இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் - Create a Page

இதில் உங்கள் பேஜ் என்ன மாதிரியான ஒன்று என்று நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். எது என்று தெரியாவிடில் ஏதேனும் ஒன்றை 'இங்கி பிங்கி பாங்கி' போட்டு தெரிவு செய்யுங்கள். பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.

2. ஒன்றை தெரிவு செய்த பின் அதற்கு தலைப்பு கொடுங்கள். அடுத்த பக்கத்தில் உங்கள் Page க்கு Profile Picture ஒன்றை Uplaod செய்யுங்கள். [இப்போது இல்லை என்றால் Skip கொடுத்து விடலாம்], அடுத்து About பகுதியில், இந்த பக்கம் குறித்த விவரமும், உங்கள் website முகவரியும் தரவும். 

3. அவ்வளவு தான் உங்கள் Page Ready ஆகி விட்டது. இப்போது முதல் ஆளாக நீங்கள் Like செய்து விடுங்கள். அடுத்து Invite Friends மூலம் உங்கள் நண்பர்களை இந்த Page- ஐ லைக் செய்யும்படி அழைக்கலாம். 

4. இனி போஸ்ட் செய்ய ஆரம்பிக்கலாம். 

5. Edit Page என்ற பக்கத்தில் சில வேலைகள் செய்ய முடியும், அவற்றை பற்றி பார்ப்போம், 


அதில் கிளிக் செய்து Manage Permissions என்பதை கிளிக் செய்யுங்கள். 


Manage Permissions:

Posting Ability - இதில் கீழே படத்தில் உள்ளது போல செய்து Save Changes என்று கொடுத்து விடுங்கள். 


இப்போது இடது பக்கம் மெனு போல உள்ளத்தில் Your Settings என்பதை கிளிக் செய்யவும். அதில்  "Send notifications to yourname@mail.com when people post to, comment on, or message your page." என்பதை Unclick செய்து விடவும். 

Basic Information: 

இதில் நீங்கள் உங்கள் Page Category மாற்றம் செய்யலாம், பெயர் மாற்றம் என பல செய்யலாம். 

இதிலேயே User Name Change செய்யும் வசதியும் இருக்கும். அதில் சில வகையான Page - களுக்கு 25 Likes வந்த பிறகு தான் user Name Set செய்ய முடியும் என்று வரும். அப்படி வந்தால் அதற்கு பின் மாற்றம் செய்யவும். இதனால் உங்கள் page முகவரியை எளிதாக நண்பர்களுடன் பகிரலாம். இல்லை என்றால் நம்பர் எல்லாம் வரும். (உதாரணம் - கற்போம் பேஸ்புக் பேஜ் - கற்போம் ) 

Profile Picture:

இங்கே Profile Picture மாற்ற முடியும். 

Resources: 

இதில் எல்லாம் பயன்படும் என்றாலும் இரண்டு முக்கியம், Use social plugins - Like Box வைக்க, Link your Page to Twitter என்பது இங்கே இந்த பக்கத்தில் பகிர்வதை உங்கள் ட்விட்டர் கணக்கில் தானாய் பகிர. 

Admin Roles: 

உங்கள் பேஜ்க்கு இன்னும் நபர்களை சேர்க்க வேண்டும் என்றால் இதில் சேர்க்கலாம். இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உங்கள் பக்கத்தை நிர்வகிக்க முடியும். 

இதில் அவரது வேலையையும் நீங்கள் குறிப்பிட முடியும், குறிப்பிட ஒன்றை தெரிவு செய்யும் போதே அதன் தகவல்கள் கீழே வருவதை கவனிக்கலாம். 


உங்கள் பேஸ்புக் Like Box - ஐ உங்கள் வலைப்பூவில் வைக்க [வலது புறம் கற்போம்க்கு உள்ளது போல]



இவை தான் ஒரு Page குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள். வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

இது குறித்து பிளாக்கர் நண்பன் அவர்களின் வீடியோ : 


- பிரபு கிருஷ்ணா

18 comments

பயனுள்ள தகவல் சகோ.! என் பதிவையும் பரிந்துரைத்ததற்கு நன்றி!

மேனேஜருக்கு பணம் அனுப்பிட்டீன்களா?

:D :D :D

Reply

பயனுள்ள பதிவு..

Reply

பயனுள்ள பதிவு

Reply

பயனுள்ள பகிர்வு சகோ!

Reply

தெளிவான விளக்கம் நண்பா..

Reply

பயனுள்ள பகிர்வு

Reply

Thank you Prabhu for your useful post.

Reply

என் வீடியோவை இணைத்ததற்கும் நன்றி சகோ.!

Reply

மேனேஜருக்கு பணம் அனுப்பிட்டீன்களா? // அனுப்பி ஆறு மாசம் ஆச்சே.

என் வீடியோவை இணைத்ததற்கும் நன்றி சகோ.!// பதிவுக்கு வீடியோ கொடுத்த உங்களுக்கும் நன்றி :-)))

Reply

பயனுள்ள பதிவு..நன்றி நண்பா

Reply

விளக்கம் அருமை... நன்றி… (TM 5)

Reply

உதவியாக இருந்தது...நன்றி...

Reply

அன்பு நண்பரே நானும் நண்பர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னை என்ற பக்கத்தை ஆரம்பித்தோம் அதில் என்னுடைய பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள் மட்டுமே இணைய முடிகிறது உதாரணமாக invite friends கொடுக்கும் போது என்னை சேர்ந்த நண்பர்கள் மட்டுமே தானே இணைய முடியும்,மற்றும் அன்னை என பெயரிட்டு அந்த பக்கத்தை தேடும்போது அந்த பக்கம் வருவதில்லை அது ஏன்?
அப்புறம் பக்கம் உருவாக்குவதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா எனவும் கூறவும்.

Reply

உங்கள் பேஸ்புக் பக்க முகவரியை இங்கே பகிரவும். லைக் எல்லோராலும் செய்ய முடியும். அதோடு பெயர் கொஞ்சம் பிரபலமாக இருந்தால் தான் தேடும் போது வரும், அத்தோடு அதை உருவாக்க கட்டணம் ஏதும் கிடையாது.

Reply

பெயர் இல்லை URL வேண்டும்.

உதாரணம் - https://www.facebook.com/pages/Gurkeerat-Singh/171896439604062

Reply

great.where r u working prabu

Reply

Post a Comment