Google search
கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.co.in என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது.
வெறும் சர்ச் என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான் இதன் சிறப்பு.
- Accessible Search - பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு
- Google Alerts - நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை தேட விரும்பினால், அதன் தற்போதைய தேடுதல் முடிவுகளை மின்னஞ்சலில் பெற.
- Blog search - வலைப்பூக்களில் தேடி தரும்.
- Google Books - புத்தகங்களை தேட.
- Google Custom Search - குறிப்பிட்ட தளங்களில் இருந்து தேடுதல் செய்ய.
- Google Image Search - படங்களை தேட
- Google News - செய்திகளை தேட/ அறிந்து கொள்ள.
- Knowledge Graph - பல தேடுதல்களில் முக்கிய தகவல்களை முகப்பிலேயே காட்டும் வசதி.
- Google Doodle - பலரை, பல விசயங்களை நினைவு கூறும் கூகுள் நினைவகம்.
இது மட்டும் இன்றி Experimental Search, Google Finance, Google Groups, Hotpot, Language Tools, Movies, Google News archive, Google Patent Search , Google Schemer, Google Scholar, Google Shopping, SMS, Suggest, Google Video (Closed), Voice Local Search , Web History போன்ற அனைத்தும் இதன் சர்ச் டூல்ஸ்.
Advertising
விளம்பரங்கள் தான் கூகுள்க்கு பிரியமான ஒன்று. அதற்காக நிறைய உழைக்கிறது. ;-)
- AdMob - மொபைல் வழி விளம்பரங்கள்.
- Google AdSense - தளத்துக்கு சம்பந்தமான விளம்பரங்களினை காட்டும் தயாரிப்பு.
- Google AdWords - கூகுள் மூலம் விளம்பரம் செய்ய.
- Adwords Express - லோக்கல் AdWords என்று சொல்லப்படும் இது பெரும்பாலும் இடம் சார்ந்த விளம்பரங்களுக்கு. (ஹோட்டல், தியேட்டர் போன்று)
- DoubleClick - Publisher, Advertiser, User என எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வசதி.
இதில் DoubleClick for Publishers by Google, Google Grants, TV Ads, Google Website Optimizer, Meebo போன்றவையும் அடக்கம்.
Communication and Publishing
இங்கே தான் நாம பயன்படுத்தும் நிறைய வரும்.
- Gmail - கூகுள் வழங்கும் மின்னஞ்சல் சேவை.
- FeedBurner - News Feed உருவாக்க உதவும் வசதி.
- YouTube - காணொளிகளை காண.
- Blogger - கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை.
- Google Docs - Word, Excel, Presentation போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்ய.
- Google Drive - ஆன்லைன் storage வசதி.
- Google+ - கூகுளின் சமூக வலைத்தளம்.
- Orkut - காணாமல் போன சமூக வலைத்தளம்.
- Google Buzz - தமிழர்களின் விருப்பான இடமாக இருந்தது. இப்போது இல்லை
- Picasa Web Albums - படங்களை பகிர உதவும் தளம்.
- Google Sites - குருந்தளம் என்று சொல்லலாம்.
- SMS Channels -பல வகைகளில் குறுஞ்செய்திகளை பெற உதவும் தளம்.
- Google Apps - சொந்த டொமைன் மூலம் கூகுளின் பல வசதிகளை பயன்படுத்தும் வசதி.
Development
- Webmaster Tools - உங்கள் Website கூகுளில் எப்படி உள்ளது என்பது பற்றிய தகவல்களுக்கு.
- Google Page speed - உங்கள் தளம் லோட் ஆகும் நேரம், மார்க், மற்றும் பல தகவல்களை தரும்.
இதில் AngularJS, Google App Engine, Google Closure Tools, Google Code, Dart, Google Go, OpenSocial, Google Swiffy, Google Web Toolkit போன்றவையும் உள்ளன.
Map
கீழே உள்ள அனைத்தும் Map என்ற ஒன்றுக்காக உள்ளவை.
- Google Maps - இடங்களை தேட.
- Google Maps Coordinate
- Google Mars
- Google Moon
- Google Sky
- Google Transit
- Google BodyG
- Google Map Maker
- Google Building Maker
Statistics
புள்ளியியல் என்று சொல்வோமா, தகவல்களை திரட்டி, அதை அலசி தருவது. அந்த வசதிகள் தான் கீழே உள்ளவை.
- Google Analytics - தளங்களின் Traffic தகவல்களை சில உபரிகளுடன் சேர்த்து தரும்.
இதில் Correlate, Google Fusion Tables, Google Insights for Search, Google Refine, Trendalyzer, Google Trends, Zeitgeist.
Operating systems
ஆம் இயங்கு தளங்களிலும் கால் பதித்துள்ளது கூகுள்.
- Android - Samrtphone Operating System
- Google Chrome OS - லினக்சை அடிப்படையாக கொண்டது. முழுக்க முழுக்க இணையம் சார்ந்து இயங்கும்.
இதில் Google TV யும் உள்ளடக்கம்.
Software / Appications
இவை கணினிகளில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டவை.
- AdWords Editor
- Google Chrome
- Google Earth
- Gmail Notifier
- IME
- Google Japanese Input
- Picasa
- Picasa Web Albums Uploader
- Google Pinyin
- Quick Search Box
- Wireless access
- SketchUp
- Google Toolbar
- Visigami
Mobile applications
மேலே உள்ள பல வசதிகளை மொபைல் மூலமும் பயன்ப்டுத்தம் முடியும். Youtube, Gmail, Calender, என பல.
Hardware
இவை கூகுள் உருவாக்கி இருக்கும் சாதனங்கள்
- Motorola Mobility - Motorola நிறுவனம்.
- Nexus One - கூகுள் போன்
- Nexus S - கூகுள் போன்
- Galaxy Nexus - கூகுள் போன்
- Project Glass - ஒரு கண்ணாடி இணையத்தோடு நம்மை ஒருங்கிணைக்க
- Nexus 7 - Tablet Computer
Google Mini, Google Search Appliance, Nexus Q போன்றவையும் இதில் உள்ளடக்கம்.
Services
இதில் Google Crisis Response, Google Fiber, Google Public DNS போன்றவை இருக்கின்றன.
இதில் பலவற்றில் கூகுள் தோல்வி அடைந்து அவற்றின் சேவைகளை நிறுத்தி இருக்கிறது. Google Buzz, Friend connect போன்றவை போல பல. அவற்றை இன்னொரு பதிவில் காண்போம்.
ஆனால் கூகுளிடம் இருந்து நான் கற்றுகொண்ட ஒன்று, தோல்வி தான் வெற்றிக்கு புதிய பாதையை தரும்.
- பிரபு கிருஷ்ணா
12 comments
படிக்கும் போதே தலை சுற்றுகிறது.. :D :D :D
Reply//Orkut - காணாமல் போன சமூக வலைத்தளம். //
இன்று உலக காணாமல் போனோர் தினமாம்... ஹிஹிஹிஹி
//கூகுளிடம் இருந்து நான் கற்றுகொண்ட ஒன்று, தோல்வி தான் வெற்றிக்கு புதிய பாதையை தரும். //
உண்மை தான் சகோ.!
நிறைய தகவல்களை உள்ளடக்கிய பதிவு!
Reply//
Replyஆனால் கூகுளிடம் இருந்து நான் கற்றுகொண்ட ஒன்று, தோல்வி தான் வெற்றிக்கு புதிய பாதையை தரும்.
//
செம!
buzz, orkut சேவைகளை நிறுத்தியதில் எனக்கு வருத்தம் இல்லை.., friend connect சேவையை நிறுத்தியிருக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்!
Replyகூடிய விரைவில் இன்டர்நெட் சேவைக்கு வரபோகுது
ReplyDoubleClick - பற்றி மேலும் விளக்கங்கள் தரவும் ..
Replyஇதில் பல விசயங்கள் எனக்கு புதிது !,அறிய தந்தமைக்கு நன்றிகள்..
Reply:-)
Replyஇவ்வளவு இருக்கா... நல்லதொரு தொகுப்பு நண்பரே... மிக்க நன்றி...
Reply//ஆனால் கூகுளிடம் இருந்து நான் கற்றுகொண்ட ஒன்று, தோல்வி தான் வெற்றிக்கு புதிய பாதையை தரும்//
Replyஉண்மைதான் பிரபு தோல்வி இல்லையென்றால் எதுவும் முயற்சி இல்லை என்றுதான் அர்த்தம் ஒவொரு தோல்வியும் ஒரு முழுமையை கொடுத்து நம்மை முதன்மை படுத்துகிறது. பட்டியலில் உள்ளவற்றில் ஒரு 10 கூட எனக்கு தெரியுமா என்று கேள்விதான். மிக்க நன்றி.
சில நாடுகளில் வந்துவிட்டதாக கேள்விபட்டேன். தகவல் கிடைத்தால் பதிவிடுகிறேன் அண்ணா.
Replyகூகிளின் பல்வேறு சேவைகளையும் ஒரே இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி!
ReplyPost a Comment