பேஸ்புக்கில் மொபைல் எண்கள் பத்திரம் | கற்போம்

பேஸ்புக்கில் மொபைல் எண்கள் பத்திரம்


இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பலரும் அதில் தமது பல தகவல்களை பகிர்ந்து வருகிறோம். குறிப்பாக மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண். இதில் அலைபேசி எண்ணை பகிர்வதில் பல பிரச்சினைகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதை பதிவில் காண்போம். 

எனது Timeline க்கு வந்தால் என் நண்பர் எனது அலைபேசி எண்ணை பார்க்க முடியும். 

இதே போல நீங்களும் பகிர்ந்து இருக்கலாம். கடந்த வாரத்தில் ஒரு நாள் நண்பர் Bladepedia கார்த்திக் அவர்களின் சாட் செய்யும் போது அவரது அலைபேசி எண் கேட்டேன், அவர் தந்த உடன் SMS அனுப்ப அவரது எண்ணில் முதல் நான்கை Type செய்யும் போதே அவரது முழு பெயருடன் அவரது எண் அலைபேசியில் வந்து விட்டது. ஆனால் அவரது அலைபேசி எண்ணை அதுவரை நான் Save செய்யவில்லை.

நான் பயன்படுத்துவது Android Mobile. எனது பேஸ்புக், ஜிமெயில் நண்பர்களின் கணக்குகளை இதில் நான் Sync செய்துள்ளேன். இதன் மூலம் எனது தொடர்பில் இருக்கும் அனைவரின் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண்(கொடுத்து இருந்தால்) எனக்கு வந்து விடும்.   

பின்னர் இதன் காரணத்தை தேடிய போது அவரது கூகுள் கணக்கில் அவரது அலைபேசி எண் இல்லை. ஆனால் பேஸ்புக் பக்கத்தில் இருந்தது. இதை உறுதி செய்ய இன்னும் சிலரின் Profile சென்று எனது அலைபேசியில் சோதித்து பார்த்தேன். 



இதே போல பலர் எண்களை காண முடிந்தது. இதில் சிலர் எண்கள் என்னிடம் உள்ளபோதும் பலரின் எண்கள் எனக்கு புதியவை. 

இதே போல நீங்கள் கொடுத்து இருந்து உங்கள் நண்பர் Android மூலம் Sync செய்தால் உங்கள் அலைபேசி எண்ணை அவர் காண முடியும். 

நம்மில் பலர் முகம் தெரியாத பலரையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறோம்.  இது நமக்கு பல பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். குறிப்பாக பெண்கள்.  

எனவே இதில் Privacy வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல் வேலையாக உங்கள் Time Line க்கு சென்று உங்கள் Profile படத்திற்கு கீழே உள்ள About என்பதை கிளிக் செய்து Contact Info பகுதியில் இருந்து உங்கள் அலைபேசி எண்ணை நீக்கி விடுங்கள், அல்லது only Me என்று தெரிவு செய்து விடுங்கள். 



- பிரபு கிருஷ்ணா

12 comments

நன்றி நண்பா

Reply

நல்ல தகவல் சகோ.! நான் மொபைலில் Sync வசதியையே நிறுத்தி வைத்துள்ளேன்.

Reply

நல்ல தகவல் நண்பரே... மிக்க நன்றி... (TM 3)

Reply

தகவலுக்கு நன்றி பிரபு! :) facebook-இல் என் மொபைல் எண் Visibility-யை "Only Me" என மாற்றி விட்டேன்! ;) இப்போது என் 'எண்' மறைந்து விட்டதா என சோதித்துப் பாருங்கள்! :D

Reply

நான் எனது தொலைபேசி என்னை public என்று தான் ஆறு மாதமாக வைத்துள்ளேன்! யாரும் கூப்பிட மாட்றாங்க்களே, அப்ப நாம அந்த அளவுக்கு வொர்த் இல்லையோ? :( :(

Reply

Naan sync pannuvadhe illai. sarch pannumpodhu Tevai illamal niraya peyar varum

Reply

இதுக்குதான் நான் மொபைல் நம்பர் கொடுக்கவே இல்லை..எப்புடி...

நன்றி நண்பா..பகிர்வுக்கு..

Reply

Thank you for your warning post. surely this is Very useful.

Reply

அன்பின் பிரபு - எச்சரிக்கைக்கு நன்றி - நல்வாட்ழ்ஹ்துகள் - நட்புடன்சீனா

Reply

நல்லதொரு விழிப்புணர்வு..
நன்றி!

Reply

Post a Comment