Cookies என்றால் என்ன?
பொதுவாக Cookies என்பது குறிப்பிட்ட தளத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்க்கு ஒரு சிறிய டெக்ஸ்ட் பைலை அனுப்பும். அது தான் Cookie.
தினமும் இணையத்தில் இயங்கும் நாம் நிறைய தளங்களை பார்ப்போம், படிப்போம். அதில் நம் தகவல்களை தருவோம். சில செட்டிங்க்ஸ் மாற்றுவோம், குறிப்பாக மொழி, ஒரு வீடியோ எப்படி தெரிய வேண்டும்? என்பது போன்றவை. ஒரு தளத்தில் நமக்கு விருப்பமான ஒன்றை தேடி இருப்போம், அடுத்த முறை மீண்டும் அந்த தளத்துக்கு செல்லும் போது நம்முடைய முந்தைய வருகையை நினைவில் வைத்து அது தொடர்பான செய்திகளை அடுத்த முறை நமக்கு காட்டும். இதன் மூலம் நம் வேலை எளிதாகும்.
எப்படி செயல்படுகிறது?
இதற்கு உதாரணம் Youtube. தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட வகையான வீடியோவை பார்த்தால் அது தொடர்பான வீடியோக்களை தான் அடுத்த முறை நீங்கள் செல்லும் போதும் காட்டும்.
ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போதும் இதே நினைவூட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
எந்த வெப்சைட்க்கு நீங்கள் சென்றாலும் அதில் வைரஸ் போன்ற உங்கள் கணினிக்கு பாதிப்பு தரும் எந்த ஒரு விசயத்தையும் இது சேமிக்காது, நினைவூட்டாது. இது தான் இதன் மிகப்பெரிய நன்மை.
அத்தோடு இணையத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் கூட இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முக்கியமாக Google Adsense. நீங்கள் இணையத்தில் எதை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்தே இந்த விளம்பரங்கள் அமையும். இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மைதான்.
இப்போது இதன் அவசியம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு. இதை Allow செய்யாமல் விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய கணினியில் இணையத்தை பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் முக்கியமாக உங்கள் நேரம் விரயம் ஆகும்.
பல வகையான Cookies கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று Third-party cookie. இதை மிக எளிதாக சொல்லி விடுகிறேன். நீங்கள் இப்போது கற்போம் தளத்தை படிக்கிறீர்கள் பதிவின் மேலே ஒரு விளம்பரம் தெரிகிறது அது ad.123ad.com என்று சேமிக்கப்படும். அடுத்து பிளாக்கர் நண்பன் தளத்துக்கு செல்லும் போது ஒரு விளம்பரம் வரலாம். இப்போது அதுவும் ad.123ad.com என்று சேமிக்கப்படும். இது தொடர் சங்கிலி போல தொடரும். இதை தான் நாம் Third-party cookie என்று நாம் சொல்கிறோம்.
மற்ற சில Cookies
- Session cookie - குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்.
- Persistent cookie - பல நாட்களுக்கு. கிட்டத்தட்ட எப்போதும்.
- Secure cookie - பாதுகாப்பானது என்று சொல்லலாம்.[https என்று உள்ள URL களில் இது Save ஆகும்]
- HttpOnly cookie - இப்போதைய ப்ரௌசெர்களில் இருப்பது.
- Supercookie - Suffix டொமைன்கள் உடைய Cookie உதாரணம் - .co.uk, co.in
- Zombie cookie - விடாக்கண்டன். Delete செய்தாலும் அழியாது. ஆனால் இதனால் தீமை எதுவும் இல்லை.
- குறிப்பிட்ட தளங்களுக்குள் நுழைய நீங்கள் ஜிமெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம்.
- சொந்தக் கணினி அல்லாத இடங்களில் பயன்படுத்தும் போது Cookies save ஆனால், உங்கள் தரவுகள் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம். இதிலும் செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம்.
- நீங்கள் அல்லாது வேறு யாரேனும் உங்கள் கணினியை பயன்படுத்தினால் உங்கள் தரவுகளை அவரும் அறிவார்.
- அவசியமற்ற தளங்களில் Cookies Save ஆனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.
இது போன்ற தீமைகளை நீங்கள் தவிர்க்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது. Cookies என்பது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் தரும் தகவல்கள் தான். நீங்கள் கொடுக்காமல் குறிப்பிட்ட தளத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே இவற்றில் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில் தான் உள்ளது.
Cookies களை கையாளுவது எப்படி?
நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் தான் Cookies உள்ளது என்றேன். அதை கட்டுப்படுத்தும், கையாளும் செயல்கள் நமக்கு எட்டும்படி தான் உள்ளன. கையாளுவது என்றால் குறிப்பிட்ட தளத்தின் Cookies Save ஆவதை தடுக்கலாம், Third Party Cookies களை தடுக்கலாம். இதை செய்ய Opt-out என்ற ஒரு முறையும் உள்ளது.
Chrome - Settings >> Show advanced settings... >> Content Settings >> Cookies
Firefox - Tools >> Options >> Privacy >> Remove Individual Cookies
Internet Explorer - Tools >> Internet Option >> Privacy
Opera - Settings > Preferences > Advanced > Cookies
இவைகளில் சென்று Cookies-களை நீக்குவது, சேர்ப்பது, மாற்றம் செய்வது போன்றவற்றை செய்யலாம். இது குறித்து இன்னொரு பதிவில் விரிவாக காண்போம்.
Cookies நம் வேலையை எப்படி எளிதாக்குகிறது என வீடியோ ஆக காண :
Cookies நம் வேலையை எப்படி எளிதாக்குகிறது என வீடியோ ஆக காண :
- பிரபு கிருஷ்ணா
Cookies or Browser cookies are playing major role in internet browsing. The website in which you are browsing will send a simple text file to the browsers, that is called as cookies. It will remember your search's in internet. Such as email id, password,Language Settings, Online ads and more.Cookies will never send any viruses. They are always safe. If you want to stop cookies of some specific site you can do using the above steps.
13 comments
விரிவான தகவல்... நன்றி நண்பரே...
Replyதொடர வாழ்த்துக்கள்... (TM 3)
cookies பற்றி நிறைய தெரியாத தகவல்! அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
Replyகுக்கீஸ் பற்றி அனைவருக்கும் புரியும்படி உள்ளது. பகிர்வுக்கு நன்றி சகோ.!
Replyகுக்கீஸ் பற்றித் தங்களின் இந்தப் பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.
Replyமிக்க நன்றி.
எனக்கும் இப்போதுதான்குக்கீஸ் பற்றி அறிமுகம் கிடைத்தது! சிறப்பான விளக்கம்! நன்றி!
Replyஇன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
சாப்பிடும் குக்கீஸ் பற்றி மட்டுமே அறிந்திருந்த நான் ப்ரௌசர் குக்கீஸ் பற்றி அறிந்து கொண்டேன்.நன்றி
Replyதெரியாத பல தகவல்கள் அன்பரே
Replyபயனுள்ள தகவல்
Replyபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
what is ப்ரௌசெர்க்கு
ReplyThanks
Replyபயனுள்ள தகவல்கள். நன்றி நண்பரே.
Replyபயனுள்ள தகவல். நன்றி நண்பரே.
Replyஅருமையான தகவல்கள்,,,
ReplyPost a Comment