1. Email Subscription Box
எல்லா பதிவர்களும் குறிப்பாக தொழில்நுட்ப பதிவர்கள் மற்றும் தகவல்களை பகிரும் வலைப்பூ உள்ளவர்கள் கட்டாயம் வைத்து இருக்க வேண்டிய Widget இது. பிளாக்கரில் இருக்கும் Follower widget வைப்பதை விட இது முக்கியம். கூகுள் போன்ற தேடுதல் தளத்தில் இருந்து வாசகர்கள் வரும் போது தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிக்க அவர்கள் உங்கள் வலைப்பூவை தொடரும் ஒரே வழி இது தான் என்பதை நினைவில் கொள்ளவும்.
சொல்லப்போனால் பதிவர்கள் பலரும் கூட டாஷ்போர்டில் இருந்து வந்து படிக்க முடியாமல் போக முடியும், ஆனால் இது ஈமெயில்க்கு செல்வதால் கட்டாயம் படிக்க இயலும்.
இதற்கு உதவுவது தான் Feedburner - Feedburner என்றால் என்ன? அதன் மூலம் வலைப்பூ வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?
2. Popular Posts
இரண்டாவதாக கட்டாயம் இருக்க வேண்டிய Widget இது. உங்கள் பிரபலமான பதிவுதான் உங்களின் சிறந்த பதிவுகள் எவை என்பதை வாசகர்களுக்கு சொல்லும். பெரும்பாலனோர் தேவை என்ன என்பதை எழுதும் உங்களுக்கும் புரிய வைக்கும்.
இதை நேரடியாக Add Gadget பகுதியில் இருந்து வைக்க முடியும்.
3. திரட்டிகள் அல்லது சோசியல் ஷேரிங்
உங்கள் பதிவுகளை பிரபலமாக்கும் முக்கிய வழியே இது தான். தமிழ் பதிவர்களுக்கு திரட்டிகள் உட்பட பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்றவை கட்டாயம் உங்கள் பதிவுக்கு கீழே அல்லது மேலே இருத்தல் அவசியம். அவற்றை ஒரே வரிசையில் வைத்து இருப்பதும் அவசியம்.
எப்படி ஒரே வரிசையில் அமைக்க என்று அறிய - திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?
4. Search This Blog
இதை நிறைய வலைப்பூக்களில் காண முடியாது. உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கும் ஒருவர், நீங்கள் எழுதிய குறிப்பிட்ட பதிவை தேட விரும்பும் போது Archive பகுதியில் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. இந்த Widget வைப்பதன் மூலம் இதை எளிதாக அவர் செய்யலாம்.
அத்தோடு கூகுள் போன்ற தேடுதல் தளங்கள் சில நேரங்களில் மிகச் சரியான பக்கத்துக்கு கொண்டு செல்வதில்லை மாறாக முகப்பு பக்கம் அல்லது லேபில், Archive போன்றவற்றுக்கு வாசகரை அழைத்து வரும். அந்த நேரங்களில் உங்கள் வலைப்பூவுக்குள் தேட இது கட்டாயம் அவசியம்.
இதை நேரடியாக Add Gadget பகுதியில் இருந்து வைக்க முடியும்.
5. External Links in New Tab
பதிவுகளை எழுதும் போது வேறு தளத்தின் லிங்க்களை பதிவுக்குள் பயன்படுத்த நேரிடலாம். அப்போது படிப்பவர் அதை கிளிக் செய்தால் நம் தளத்தை விட்டு வெளியே சென்று விட வாய்ப்பு அதிகம். அதனால் லிங்க் கொடுக்கும் போது "Open this link in a new window" என்பதை கிளிக் செய்து விடலாம்.
சில கோடிங்ஸ் உங்களின் எல்லா இணைப்புகளையும் புதிய Tab- இல் திறக்கும். உங்கள் வலைப்பூவில் எங்கே கிளிக் செய்தாலும் இது நடக்கும். இது உங்கள் வாசகர்களுக்கு எரிச்சலை தரும். இதை தவிர்த்து External Link மட்டும் புதிய Tab-இல் Open ஆகும் படி தர வேண்டும்.
சில கோடிங்ஸ் உங்களின் எல்லா இணைப்புகளையும் புதிய Tab- இல் திறக்கும். உங்கள் வலைப்பூவில் எங்கே கிளிக் செய்தாலும் இது நடக்கும். இது உங்கள் வாசகர்களுக்கு எரிச்சலை தரும். இதை தவிர்த்து External Link மட்டும் புதிய Tab-இல் Open ஆகும் படி தர வேண்டும்.
Sidebar போன்றவற்றில் External Link தந்தால் இதை பயன்படுத்த முடியாது. எப்போதும் External Link -கள் புதிய Tab-இல் ஓபன் ஆக External Link மட்டும் New Tab இல் ஓபன் ஆக என்ற பதிவின் படி செய்யவும்.
6. Related Posts
உங்கள் பதிவை படித்து முடித்த உடன் அது தொடர்பான பதிவுகளை படிக்க உங்கள் வாசகர் விரும்பலாம், அது போன்ற சமயத்தில் அவரால் தொடர்புடைய பதிவுகளை தேடிக் கொண்டிருக்க இயலாது. பதிவுக்கு கீழே இதை சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய பதிவுகளை எளிதாக காட்டலாம்.
7. Comment Box & Comments
கமெண்ட்களுக்கு Word Verification உள்ளது என்பது நிறைய புதிய பதிவர்களுக்கு தெரியாது. பின்னூட்டம் இடவரும் வாசகர் இதை விரும்ப மாட்டார். இதை நீக்க Settings >> Post and Comments >> Show word verification இதற்கு No என்று தர வேண்டும். [நன்றி - ராம்ஜி யாஹூ]
பின்னூட்டங்களை மட்டறுத்தல் (Comment Moderation) என்பது இதில் மிக முக்கியம். இதை வைப்பதை கட்டாயம் என்று தான் நான் சொல்வேன். இதை இரண்டு வகையாக வைக்கலாம். ஒன்று "Always", இதனால் எப்போது கமெண்ட் போட்டாலும் நீங்கள் அனுமதித்த பின்தான் Publish ஆகும். இன்னொன்று "Sometimes", இதில் இரண்டு என்று கொடுத்தால், பதிவு எழுதி இரண்டு நாளுக்கு பின் அதில் பின்னூட்டம் இட்டால் அவை பப்ளிஷ் ஆகாமல் மட்டறுத்தலுக்கு வந்து விடும். இதில் உங்கள் வசதியை பொறுத்து தரவும். இதன் மூலம் ஸ்பாம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
பின்னூட்டங்களை மட்டறுத்தல் (Comment Moderation) என்பது இதில் மிக முக்கியம். இதை வைப்பதை கட்டாயம் என்று தான் நான் சொல்வேன். இதை இரண்டு வகையாக வைக்கலாம். ஒன்று "Always", இதனால் எப்போது கமெண்ட் போட்டாலும் நீங்கள் அனுமதித்த பின்தான் Publish ஆகும். இன்னொன்று "Sometimes", இதில் இரண்டு என்று கொடுத்தால், பதிவு எழுதி இரண்டு நாளுக்கு பின் அதில் பின்னூட்டம் இட்டால் அவை பப்ளிஷ் ஆகாமல் மட்டறுத்தலுக்கு வந்து விடும். இதில் உங்கள் வசதியை பொறுத்து தரவும். இதன் மூலம் ஸ்பாம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
அத்தோடு Comment Box-ஐ எல்லோரும் வைத்து இருந்தாலும் எங்கே வைப்பது என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் உள்ளது. மூன்று வகையான இடங்களில் இதை வைக்கலாம் என்ற போதும் இரண்டை மட்டும் தெரிவு செய்வது நலம். Embedded, Pop-up Window என்ற இரண்டும் தான் அது. இதனால் கமெண்ட் செய்த பின்னும் படிப்பவர் உங்கள் தளத்திலேயே இருப்பார்.
அத்தோடு யாரேனும் சந்தேகம் அல்லது வேறு கேள்விகள் போன்றவற்றை கேட்கும் போது அவற்றை கவனித்து பதில் அளித்தல் அவசியம். புதிய பதிவுகளுக்கு இவை எளிதென்றாலும் பழையதுக்கு இதை செய்ய Moderation அவசியம்.
8. Mobile View
நிறைய வாசகர்கள் இப்போது அலைபேசியில் இருந்து படிக்க தொடங்கி விட்டதால் அதில் உங்கள் வலைப்பூ எப்படி தோன்றுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். பிளாக்கரில் Template பகுதில் Mobile என்பதில் இதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
இது குறித்த விரிவான பதிவு இங்கே - Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம்
இது குறித்த விரிவான பதிவு இங்கே - Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம்
9. Post Editing
பதிவு எழுதும் போது சில விசயங்களை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். மிக முக்கியமாக Alignment என்னும் வசதி. பதிவு எழுதும் போது நேர்த்தியாக மாற்ற இது உதவுகிறது. அதே போல Bold, Italic, Underline, List, Quote போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
10. செய்யகூடாத விஷயங்கள்
செய்ய வேண்டும் என்ற பதிவில் கட்டாயம் நான் சொல்ல வேண்டியது இது. இதை ஒரு தனிபதிவாக சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். ஒரு வலைப்பூ படிப்பவருக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று அதில் எழுதி உள்ளேன் - பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்
இவை தவிர வேறு ஏதேனும் உங்கள் பார்வையில் கட்டாயம் என்று நினைத்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
தமிழ்மணத்தில் இந்த வாரம் நான் நட்சத்திர பதிவர். பல பதிவுலக ஜாம்பவான்கள் எழுதிய ஒன்றை நானும் எழுதுகிறேன் என்று நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கற்போம் தளத்தின் வாசகர்கள் அனைவரின் ஆதரவு தான் இதற்கு காரணம். அனைவருக்கும் மிக்க நன்றி.
- பிரபு கிருஷ்ணா
35 comments
///தமிழ்மணத்தில் இந்த வாரம் நான் நட்சத்திர பதிவர்.///
Replyஎன்ன பிரபு இந்த விஷயத்தை இவ்வளவு சாதாரணமா கடைசில இரண்டு வரில சொல்லி முடிச்சிட்ட...?!
ஒரு சவுண்டு விட்டு ஒரு பந்தா பண்ண வேண்டாமா ? :))
வாழ்த்துக்கள் !! இந்த வாரம் முழுவதும் நட்சத்திரமா ஜொலிக்க போற...கலக்கு !!
வாழ்த்துகள். கௌசல்யா சொன்னது போலத் தான் எனக்கும் தோன்றியது.
Reply///
Reply8. Mobile View
நிறைய வாசகர்கள் இப்போது அலைபேசியில் இருந்து படிக்க தொடங்கி விட்டதால் அதில் உங்கள் வலைப்பூ எப்படி தோன்றுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். பிளாக்கரில் Template பகுதில் Mobile என்பதில் இதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
///
இதுபற்றி கொஞ்சம் அதிகமாக எழுதுங்கள் நண்பரே! தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்!
வாழ்த்துக்கள் நண்பா
Replyஎன்னாது தமிழ்மண நட்சத்திரமா ..........
Replyஎன்னைய்யா இது ஒரு வெடி.. கிடி போட்டு அமர்க்கள படுத்த வேண்டமா? சத்தமில்லாம சிம்பிலா பதிவின் இறுதியின் மூணு வரியில் சொல்லி முடிச்சீடீங்க!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா, கற்போம் மென்மேலும் வளர்ந்து புதிய பரிணாமத்தை அடைய வாழ்த்துக்கள் :)
Reply:)
Reply:)
:)
vazhthukkal....
அவசியமான பதிவு சகோ. அதிலும் ஐந்தாவது உள்ளதை அதிகம் பேர் செய்ய வேண்டிய ஒன்று.
Replyதமிழ்மண நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள் சகோ.! எங்களின் ஆதரவை விட உங்களது திறமைக்கு தான் இதில் அதிக பங்கு உண்டு. மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நண்பா...
Replyபிரபு தமிழ் மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.
Replyதமிழ்மண அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே! :) அதி பிரபல பதிவர்! :D
Replyதாங்கள் நட்சத்திரப் பதிவாளராகச் சிறப்பிக்கப் பட்டதற்குப் பாராட்டுகள். ‘பத்து விஷயங்கள்’ சொன்னதற்கு நன்றி.
Replyvaazththukkal maapla..
Replyவாழ்த்துக்கள்.. நண்பா
Replyஎன்றும் அன்புடன்
தமிழ்நேசன்
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்!
Replyநிறைய தகவல் தெரிந்துகொண்டேன்..நன்றி நண்பா..
Replyதமிழ்மண நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்..நண்பா..
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்...
Replyநன்றி…(TM.8)
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
அன்பின் பிரபு - தமிழ் மண நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - மேன் மேலும் பல சிறப்புகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyநட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்...வாரம் முழுவதும் கலக்குங்கள்...
Replyநன்றி! நண்பா! தெரியாதை தெரிந்து கொள்ள உதவியதற்கு....
Replyநட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்! சிறப்பான பத்து தகவல்கள்! அவசியமான ஒன்று! மொபைல் டெம்ப்ளேட் பற்றி விரிவாக எழுதினால் நானும் பயனடைவேன்! நன்றி!
Replyஇன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html
main thing, dont keep word verification on comment box. most of the readers wont post commments if one has word verification
Replyஅனைவருக்கும் பயன்படும்
Replyஅருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொட்ர வாழ்த்துக்கள்
tha.ma 10
ReplyCongrats Prabhu..
Replyவாழ்த்துக்கள் நண்பரே, என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவலாகும். நன்றி நண்பரே
Replyநட்சத்திரப் பதிவாளராகச் சிறப்பிக்கப் பட்டதற்குப் பாராட்டுகள் ...வாழ்த்துக்கள்.
Replyநட்சத்திர வாழ்த்து(க்)கள் பிரபு!
Replyதிரை உலக முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
'நட்சத்திர' வாழ்த்துகள்.
Replynagu
www.tngovernmentjobs.in
தாங்கள் நட்சத்திரப் பதிவாளராகச் சிறப்பிக்கப் பட்டதற்குப் பாராட்டுகள். ‘பத்து விஷயங்கள்’ சொன்னதற்கு நன்றி.
Replyதமிழ்மண(த்த) நட்சத்திர பதிவருக்கு தமிழார்ந்த வாழ்த்துக்கள்.
Replyமென்மேலும் மேன்மையாய், செம்மையாய் வளர வாழ்த்துக்கள்.
கற்போம் தளத்தின் வாசகர்கள் அனைவரின் ஆதரவும் ஆசியும்
எண்ணிலடங்கா வாழ்த்தும் என்றென்றும் உமக்கு உண்டு.
மிகவும் பயனுள்ள பதிவு...!!
Replyநல் முயற்சிகளுக்கும்..
தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துக்கள்!!
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
Replyவாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021
thanks for all
ReplyUseful article thanks
ReplyPost a Comment