1. Temporary Password - கொண்டு Sign in செய்யும் வசதி
Browsing Centre போன்ற போது இடங்களில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தவே நம்மில் பலர் பயப்படும் நிலையில் இது மிகப் பெரிய வசதி. Sign in செய்யும் போது உங்கள் அலைபேசி எண்ணை கொடுத்து Temporary Password உருவாக்கி, அப்போது மட்டும் sign in செய்து கொள்ளலாம். இதற்கு Outlook தளத்தில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை Register செய்து இருக்க வேண்டும்.
Gmail - லில் இது போல உள்ள ஒரு வசதி - two-step verification
2. 7GB Storage வசதி
ஜிமெயில் சமீபத்தில் 10GB ஆக Storage வசதியை மாற்றியது. Outlook அறிமுகத்திலேயே 7GB தந்து உள்ளது.
3. Delete செய்யப்பட்ட மெயில்களை Recover செய்யும் வசதி.
சில நேரங்களில் Inbox மற்றும் Trash இரண்டில் இருந்தும் நமக்கு தேவையான மின்னஞ்சல் ஒன்று Delete ஆகி இருக்கலாம். அதை எளிதாக மீட்கும் வசதியும் உள்ளது. Deleted என்ற Folder-ஐ ஓபன் செய்து “recover deleted messages.” என்பதில் இதை செய்யலாம்.
4. Temporary மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும் வசதி
நிறைய தளங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் Spam மெயில்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். இதை தவிர்க்க தற்காலிகமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கலாம். இதை வேண்டும் என்ற போது Delete செய்து கொள்ளலாம். [இதைப் பற்றி தனியாக ஒரு பதிவில் காண்போம்]
5. HTML, CSS Coding-களை பயன்படுத்தும் வசதி
Gmail, Outlook இரண்டும் இவற்றை தருகின்றன. Outlook ஒரு மெயில் கம்போஸ் செய்யும் போது Options என்பதை கிளிக் செய்து இவற்றை பயன்படுத்தும் வசதியை தெரிவு செய்யலாம்.
6. மின்னஞ்சல்களை பிளாக் செய்யும் வசதி.
தேவை இல்லாத மின்னஞ்சல்கள் நமக்கு அடிக்கடி வரலாம். சில சமயங்களில் ஒரே முகவரியில் இருந்து வரக்கூடும். குறிப்பிட்ட முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களை மட்டும் கூட நாம் பிளாக் செய்ய முடியும்.
Inbox-இல் இருந்து குறிப்பிட்ட மெயிலை திறந்து “Sweep” -> Delete -> Block all future messages என்றும் கொடுத்து விடலாம். நிறைய மெயில் ID-களை இதில் சேர்க்க Settings >> More Mail Settings >> Safe and blocked senders என்பதில் செல்லவும்.
7. 25MB க்கு மேல் Attach செய்து அனுப்பும் வசதி.
outlook - இல் 25MB க்கு File Attach செய்ய முடியும் என்ற போதிலும் அதற்கு மேல் அனுப்ப முயன்றால் அவை Skydrive கணக்கிற்கு சென்று விடும். மின்னஞ்சலை பெறுபவர் அங்கே சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
8. மெயில்களை வரிசைப் படுத்தும் வசதி
உங்கள் மின்னஞ்சல்களை கீழே படத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி வரிசைப் படுத்திக் கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட மெயில்களை எளிதாக தேடலாம்.
9. சமூக வலைத்தள நண்பர்களை தொடர்பு கொள்ளும் வசதி
Outlook-இல் Twitter, Facebook and LinkedIn போன்றவற்றில் உள்ள நண்பர்களை Integrate செய்ய இயலும்.
10. மிக அதிக வேகம்
ஜிமெயில் போன்று இல்லாமல் outlook மிக வேகமாக இருக்கிறது. இணைய இணைப்பு எவ்வளவு குறைவாக இருந்தாலும் வேகமாக திறக்கிறது, செயல்படுகிறது.
இன்னும் பல வசதிகள் உள்ளன. வரும் பதிவுகளில் அவற்றை காண்போம்.
முகவரி - Outlook.com
- பிரபு கிருஷ்ணா
12 comments
அப்படியென்றால் அவுட்லுக் ஜிமெயிலுக்கு நல்ல போட்டியைக் கொடுக்கும் என்று சொல்லுங்கள். இதனால் ஜிமெயிலில் பல புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்.
Replyநல்ல விளக்கம்...
Replyபயன்படுத்தினால் தான் தெரியும்...
பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி...(TM 3)
I love outlook...
ReplyReally it looks outstanding
தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.
Replyஏற்கனவே வைத்து இருதாலும் மைக்ரோசாப்ட் சேவைகளுக்காக மட்டும்மே வைத்து இருந்தேன் பயன்படுத்தவில்லை.தற்போது outlook மாறிய போது பார்க்க நன்றாக இருந்தது.இதை இவன் ஆரம்பத்திலேயே செய்து இருந்தால் ஜிமெயில் அவ்வளவு தான்... Temporary Password - கொண்டு Sign in செய்யும் வசதி உண்மையில் அருமை இதை ஜிமெயில் இருதால் நன்றாக இருந்து இருக்கும்...நீங்க பாட்டுக்கு உங்க மொபைல் நம்பர் அப்படியே போட்டு இருக்கீங்க யாரவது உள்ளே நுழைத்து விட போறாங்க முதலில் நான் ட்ரை பண்ணி பார்கிறேன்......
Replyஉங்கள் எண்ணுக்கு code ஒன்று அனுப்புவார்கள் அதை என்டர் செய்தால் தான் இது வேலை செய்யும். :-)
Replyமிக்க நன்றி நண்பா பகிர்வுக்கு!
Replyஜி மெயிலுக்கு சவால் ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள்.
Replyநல்ல பகிர்வு..நன்றி நண்பா..
Replyநண்பா ,
Replyஉங்கள் தகவலுக்கு நன்றி! நானும் இதில் account open பண்ணியிருக்கிறேன். மிக நன்றாக உள்ளது. இதில், ஜிமெயில் account டை configure செய்யும் வசதியும் உள்ளது.
அருமையான தகவல் உடனே அக்கவுண்ட் உருவாக்கி விட்டேன். மிக்க நன்றி பிரபு.
Replyபுது புது தகவல்கள்,, அருமை சகோ,,
Replyதொடருங்கள்,,,
Post a Comment