இதில் யாஹூ மின்னஞ்சல் கணக்கு மட்டும் முடக்கப்படவில்லை. Yahoo Voice கணக்கில் உறுப்பினராக உள்ள பெரும்பாலோனோர் கணக்கு ஹாக் செய்யப்பட்டு உள்ளது. இதை Gmail, Yahoo, Hotmail, AOL, comcast போன்றவற்றை பயன்படுத்தியும் நுழைய முடியும். எனவே Yahoo Voice பயனர் ஒவ்வொருவரும் செக் செய்வது நல்லது.
Sucuri Malware Labs என்ற தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து செக் செய்யுங்கள்.
இப்போது கீழே உள்ளது போல வரவேண்டும்.
இப்போது சென்று உங்கள் Password - ஐ மாற்றிக் கொள்ளவும்.
எப்படி Password வைக்க வேண்டும் ?
என்னதான் பல வழிகளை கடைபிடித்தாலும் நம் முக்கிய கடமை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடவுச்சொல் வைப்பது. பிறந்த தேதி,பள்ளி, கல்லூரியின் பெயர், வருடம், பழைய காதலன்/காதலியின் பெயர்(மனைவி அல்லது கணவன் கண்டுபிடிக்காமல் இருக்க,எதை என்பது உங்களுக்கே தெரியணும் ), மனைவி,குழந்தைகள் பெயர், கார் எண். என இவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்றவை ஏதேனும் எழுத்து, எண்,குறியீடுகள் கலந்து வைக்கலாம். உதாரணம்: (qwerty@500$*india)
ஜிமெயில் பயனர்கள் - Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification என்ற பதிவில் உள்ளபடி செய்து ஹாக் செய்யப்படுவதை தடுக்க முடியும்.
- பிரபு கிருஷ்ணா
5 comments
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி!
Replyஅருமை நண்பா.!
Replyநன்றி.
Replyநன்றி சகோ.
Reply""இப்போது சென்று உங்கள் Password - ஐ மாற்றிக் கொள்ளவும்.""
Replyஅதுக்குள்ள அவுங்க மாத்திட்டா...ஹி..ஹி..
தகவலுக்கு நன்றி நண்பா..
Post a Comment