நம்மில் பெரும்பாலும் இலவச மென்பொருள்களையே பயன்படுத்த விரும்புவோம். முக்கியமாக ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் கட்டணமாக கிடைத்தாலும் அதன் இலவச வெர்சனை தான் பயன்படுத்துவோம். கட்டண மென்பொருள் என்பதை தாண்டி அவற்றின் அதிகபட்ச விலையும் இதற்கு ஒரு காரணம். இந்த நிலையில் ஒரு இலவச ஆண்டி வைரஸ் உங்கள் கணினிக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கினால்?
ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளான "Microsoft Security Essentials" தான் அந்த மென்பொருள். 2009 ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் 3 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டது இந்த மென்பொருள்.
சிறப்பம்சங்கள்:
- இலவச மென்பொருள்
- மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு
- computer viruses, spyware, Trojan horses and rootkits போன்ற பல வகையான மால்வேர்களை நீக்குகிறது.
- கணினி வேகத்தை குறைப்பதில்லை.
இது மட்டும் இன்றி மேலும் பல பயன்களை உள்ளடக்கியது இந்த மென்பொருள்.
இதை தரவிறக்கம் செய்ய என்ன வேண்டும்?
Windows XP - 256 MB RAM & 500MHz Processor.
Windows Vista & Windows 7 - 1GB RAM, 1GHz Processor.
இது மேலே உள்ள மூன்று இயங்கு தளங்களிலும் இயங்கும்.
இதை எல்லாம் விட மிக மிக முக்கியமாக நீங்கள் Genuine Windows Operating System பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
கடைசி வரி நிறைய பேருக்கு வருத்தம் அளிக்கக் கூடியது, ஏன் என்றால் இது எல்லோராலும் முடியாது. ஒரு Operating System வாங்க மட்டும் குறைந்த பட்சம் 5000 ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். இதை தான் Genuine Operating System என்று சொல்வார்கள். [இதன் மூலம் எண்ணிலடங்கா பயன் உள்ளது என்பது வேறு விஷயம்]. ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் தெரிந்தவர், நண்பர்கள் இவர்கள் மூலமே Operating System போட்டு இருப்போம். அப்படி செய்தவர்கள் இதை பயன்படுத்த இயலாது.
ஆனால் தற்போது புதியதாக கணினி மற்றும் மடிக்கணினி வாங்கும் போது உங்களுக்கு இலவசமாக Genuine Operating System ஆனது தரப்படுகிறது. [பெரும்பாலான கணினி நிறுவனங்கள் இதை செய்கின்றன.] எனவே அவர்கள் இதனை தரவிறக்கம் செய்யலாம்.
என்னுடையது Genuine Operating System தானா என்று கண்டுபிடிப்பது எப்படி?
இதற்கு இரண்டு எளிய வழிகள் உள்ளன XP பயனர்கள் இந்த இணைப்பில் சென்று செக் செய்யலாம். ஒரு அப்ளிகேசன் டவுன்லோட் ஆன பின்பு இதை செய்திடலாம். இதில் உறுதியானால் நேரடியாக Microsoft Security Essentials பக்கத்திற்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.
Windows 7 பயனர்களும் மேலே உள்ளதை செய்யலாம். அல்லது My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties பகுதிக்கு சென்று, அதில் கீழே உள்ளது போல வந்தால் உங்களுடையது Genuine OS ஆகும்.
உங்கள் OS Genuine தான் என்றால் இனி நீங்கள் Microsoft Security Essentials- ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அதற்கான இணைப்பு -Microsoft Security Essentials
- பிரபு கிருஷ்ணா
10 comments
நல்ல தகவல் நண்பா.!
Replyஆனால் நான் ஒரு போதும் இலவசங்களை நம்புவதில்லை :)
இவர்கள் பாலிசி விக் வாங்கினா சீப்பு இலவசம்.
Replyபயனுள்ள பாதுகாப்பான தகவல் சகோ.!
Replyநன்றி நண்பரே !
Replyi download it...
Replyபயன்படுத்திவிட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்.
Replynanparee,ithai laptop vaangiyavutan pathivu seithu seyal patuththi paarth thean ,nanraakavum,veegamagavum seithathu.but konja nalil laptop irutaaki vittathu.apparam service centarla kudaththathirkku DOS modela yugala yaar poda sonnathunu kaduppu adikkeraanga.sarinu oru 300/-selavu panni reinstal seithen.
Replylaptop vaankum poothea solliiruntha original os pooda solli iruppean.
anupavam piraku thaan ellam visayam therikirathu.
payanulla pathivu.nandri nanbare....
அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Reply.நல்ல தகவல் . நன்றி
ReplyIt is true by clicking your link, we may know whether what we use is genuine OS or not. But, at the same time, in case the OS is not genuine, the software collects the IP address of the desktop/laptop as well, and periodically sends warnings that the OS being used is not genuine. Finally, it effectively prevents programes like internet explorer and adds-on associated with the same.
ReplyYou R correct 100 per cent in saying the most of the current household users of windows 2000/professional/xp are not using a genuine version and it is pathetic they are not even aware of it. The genuine version allows only three uploads and more than that, it considers a fourth upload as not genuine. vista costs around Rs.5000
subbu rathinam.
Post a Comment