பேஸ்புக் நிறுவனம் செய்யும் பல மாற்றங்களை பயனர்களுக்கு தெரிவிப்பதே இல்லை. அதில் இப்போது செய்துள்ள ஒன்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைத்து, தனது தள மின்னஞ்சல் முகவரியை மட்டும் உங்கள் நண்பர்களுக்கு காட்டுகிறது பேஸ்புக். என்ன அது?
உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் பேஸ்புக் நண்பர் அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தேடினால் இனி எடுக்க முடியாது. உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைத்து விட்டு அதற்கு பதில், உங்கள் பயனர் பெயருக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கி உள்ளது. அதாவது நீங்கள் Yahoo, Gmail என்று வைத்து இருந்தால் உங்கள் நண்பருக்கு அது தெரியாது மாறாக myname@facebook.com என்று தான் தெரியும். கீழே உள்ளது போல.
இப்போது நான் நண்பர் வரலாற்று சுவடுகள் அவர்களை தொடர்பு கொள்ள நினைத்தால் அவரது பேஸ்புக் ஐடி க்கு மின்னஞ்சல் செய்ய வேண்டி வரும். அவர் பார்ப்பாரா இல்லையா என்று வேறு எனக்கு தெரியாது.
இது சில பேருக்கு நல்லது தானே என்று தோன்றினாலும், நீங்கள் பேஸ்புக் பக்கம் வரவிட்டால் உங்கள் நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்ததும் தெரியாது. இன்னும் பலர் பேஸ்புக்கில் மெயில்களை படிக்கவே மாட்டார்கள். அவசரத்துக்கு ஆகாத இதை மாற்றி விட்டு பழையபடி உங்கள் மின்னஞ்சலை கொண்டுவருவதே நல்லது.
முதலில் உங்கள் Profile/Timeline சென்று அதில் "About" என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே படத்தில் உள்ளது போல "Contact Info" பகுதியில் Edit என்பதை கிளிக் செய்யவும். இப்போது கீழே படத்தில் 1-இல் உள்ளதை 2-ல் உள்ளது போல மாற்றவும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட மேற்ப்பட்ட முகவரிகள் கொடுத்து இருந்தால் அதிகம் பயன்படுத்துவதை மட்டும் படத்தில் உள்ளது போல் Show Time ஆக கொடுத்து விடலாம்.
Show Timeline/Hide Timeline
யார் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பார்க்க முடியும்?
மேலே நான் என் நண்பர்கள் மட்டும் எனது மின்னஞ்சலை பார்க்கும் படி தெரிவு செய்துள்ளேன். மற்றவர்கள் அதை பார்க்க முடியாது. நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு மட்டும் செய்யலாம். அல்லது Custom மூலம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம்.
அவ்வளவே, இனி உங்களை உங்கள் நண்பர்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் ஈமெயில் ஐடியை உங்கள் நண்பர்கள் பார்ப்பது பிடிக்கவில்லை என்றால், நீங்கள் இதை செய்யத் தேவையில்லை.
- பிரபு கிருஷ்ணா
16 comments
பேஸ்புக் பயனாளர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
Reply175-வது பதிவுக்கு தங்களுக்கும், கற்போம் குழுவிற்கும் வாழ்த்துக்கள் சகோ!
பேஸ்புக் ஓனருக்கு குளிர்விட்டு போச்சுன்னு நினைக்கிறேன்., நம்மகிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கானுகளா..,
Replyஇருக்கட்டும் இருக்கட்டும் இந்த புஷ்சுக்கு போன போட்டு தொலைத்தொடர்பு மந்திரியையெல்லாம் [ஆமா இது அதுக்கு கீழ தான் வருதா? கண்பியூசன்:)]ஒரு ஆட்டு ஆட்டுனாத்தான் இந்த சுனா பானான்ன யாருன்னு தெரியும் :) :)
உபயோகமான தகவல்! :)
Replyபயனுள்ள தகவல்.
Replyபயனுள்ள தகவல் ! மிக்க நன்றி நண்பரே !
Replyபயனுள்ள பதிவை பகிர்ந்த அன்பு நண்பனுக்கு நன்றி
Replyநன்றி சகோ.
Replyஹி ஹி ஹி. அவிங்க நிறைய மேட்டர் சொல்லாம கொள்ளாமத்தான் பண்றாய்ங்க. கல்யாணமே அப்படித்தானே நடந்தது.
Replyநன்றி.
Replyநன்றி.
Replyநன்றி நண்பா.
Replyஅன்பின் பிரபு - ஏற்கனவே பயன்படுத்தும் தகவல் தான் - இரூபினும் மற்றவர்களுக்குப் பயன் படும் விதமாக பகிர்ந்தமைக்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyகடைசி 25 பதிவு தோராயமா 1 மணிநேரத்திற்கு முன்னாலா என் dashboard-ல Update ஆகிருக்கு என்ன பிரச்சனை நண்பா.?
Replyமிகவும் பயனுள்ள தகவல்! நன்றி!
Replyமிகவும் பயனுள்ள தகவல்! நன்றி!
Replyமிகவும் பயனுள்ள தகவல்! நன்றி!
ReplyPost a Comment