IOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய | கற்போம்

IOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய

சில நேரங்களில்  ஏதேனும் மென்பொருளை Uninstall செய்யும் போது ஏதேனும் பிரச்சினை வந்து அவை Uninstall ஆகமால் தகராறு செய்யும். அப்படி இடைஞ்சல் கொடுப்பவற்றை சாதாரண முறையில் Uninstall செய்ய இயலாது. எப்படி அவற்றை Uninstall செய்வது என்று பாப்போம். 


முதலில் IObit Uninstaller 2.2 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து  கொள்ளவும். இதனை கிளிக் செய்து RUN கொடுக்கவும், இப்போது இது ஓபன் ஆகும். 



இதில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்கள் இருக்கும். குறிப்பிட்ட மென்பொருளை செலக்ட் செய்து Uninstall/Forced Uninstall என்பதை கிளிக் செய்யவும். இதில் Uninstall சாதரணமாக Uninstall செய்யும், Forced Uninstall குறிப்பிட்ட மென்பொருளின் அனைத்து தகவல்களையும் நீக்கி விடும். எனவே இதையே தெரிவு செய்யவும். 

இதை செய்ய எந்த மென்பொருளை Uninstall செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து Forced Uninstall -ஐ கிளிக் செய்து வரும் புதிய குட்டி விண்டோவில் குறிப்பிட்ட மென்பொருளின் பெயரை கொடுத்து தேட வேண்டும். மென்பொருள் வந்தவுடன், அதை தெரிவு செய்து Next கொடுத்து Uninstall பக்கத்திற்கு வரவும். 

இப்போது Uninstall ஆகி விடும். இதில் உள்ள "Powerful Scan" என்ற வசதி, Uninstall மென்பொருளின் Registry பகுதி தகவல்களை நீக்கி விடும். 


விருப்பம் இருந்தால் அதை செய்து விடுங்கள். அவ்வளவு தான், இனி பிரச்சினை தீர்ந்தது.

இந்த மென்பொருள் இன்ஸ்டால் ஆகாத காரணத்தால், இதை Uninstall செய்யவேண்டிய தேவை ஏதும் இல்லை. 

6 comments

உபயோகமான தகவல் நண்பரே .., பகிர்வுக்கு நன்றி ..!

Reply

ஆஹா பயனுள்ள மென்பொருள் thanks prabu

Reply

உபயோகமான தகவல் நண்பரே .., பகிர்வுக்கு நன்றி ..!

Reply

Hi there, Just needed to mention your website is particularly excellent and I genuinely like the blog style and design. Is it a customized design or some theme I can down load also?

Reply

@ racing games


Template Name - Newspaper



Source -http://www.ourblogtemplates.com/

Reply

Post a Comment