கடந்த பதிவில் எப்படி நமக்கு தொடர்பில்லாத நண்பர்களை சாட் லிஸ்ட்டில் இருந்து நீக்குவது என்று பார்த்தோம். சில சமயங்களில் நாம் தவறுதலாக சிலரை நீக்க வாய்ப்பு உள்ளது, அல்லது நீக்கியவரை மீண்டும் சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அந்த நிலையில் எப்படி எளிதாக அவர்களை சேர்ப்பது என்று பார்ப்போம்.
எல்லோரும் அறிந்த Gtalk மூலமே இதை செய்ய போகிறோம்.
2. அதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும். பின்னர் உங்கள் ஜிமெயில் தகவல்களை கொடுத்து அதில் நுழையவும்.
3. இப்போது மேலே Settings என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
4. இப்போது வரும் விண்டோவில் Blocked என்பதை தெரிவு செய்யவும்.
5. இதில் நீங்கள் பிளாக் செய்தவர்கள் பெயர் இருக்கும். குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்து Un Block செய்து விடவும்.
6. அவ்வளவே. இனி அவர்கள் உங்கள் சாட் லிஸ்ட்டில் இருப்பார்கள்.
வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
-பிரபு கிருஷ்ணா
3 comments
தேங்க்ஸ் தல ..!
Reply"ரொம்ப நன்றிங்க !"
Replyஅன்பின் பிரபு கிருஷ்ணா - நல்ல நல்ல தகவல்களை அவ்வப்போது பகிர்வது பாராட்டுக்குரிய் செயல். வாழ்க வளமுடன். நட்புடன் சீனா
ReplyPost a Comment