வைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format செய்வது எப்படி? | கற்போம்

வைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format செய்வது எப்படி?


நிறைய நேரங்களில் வைரஸ் வந்த நம் பென் டிரைவை நம்மால் Format இயலாமல் போய் விடும். என்ன தான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காது. இதனால் புதிய பென் டிரைவ் வாங்கக் கூடிய நிலை கூட வரலாம். அது போன்ற சமயத்தில் Command Prompt மூலம் Format செய்ய முயற்சிக்கலாம். எப்படி என்று பதிவில் காணலாம். 

1. முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் சொருகவும்


2. Start >> Run சென்று cmd என்று டைப் செய்து Command Prompt வரவும். 

3. இதில் format<space>Drive Letter: கொடுத்து விட்டு, இரண்டு முறை Enter  கொடுக்கவும். 

உதாரணம்: format g:

[மேலே படத்தில் Benny என்பது என் பென் டிரைவ் பெயர், பக்கத்தில் உள்ள G தான் Drive Letter. உங்களுக்கும் இது போலவே. ]

4.  இப்போது கீழே உள்ளது போல, ஒரு விண்டோ வரும், 



5. இதில் கேள்விக் குறிக்கு அடுத்து உங்கள் பென் டிரைவ்க்கு ஒரு பெயர் தர சொல்லும். உங்களுக்கு விருப்பமான பெயர் தந்து Enter கொடுங்கள். 

6. இப்போது பின் வரும் விண்டோ வரும். 



7.அவ்வளவு தான் இப்போது உங்கள் பென் டிரைவை செக் செய்து பாருங்கள், அது Format ஆகி இருக்கும். 

11 comments

தகவலுக்கு நன்றி தல ..!

Reply

பயனுள்ள தகவல் சகோ.!

Reply

அனைவருக்கும் பயன்படும் பதிவுகள் கொடுக்கும் நண்பரே வணக்கம்... எனது கணினியில் pen drive is not recognized என்று காட்டுகிறது உள்ளிருக்கும் file ஐ எடுக்கவும் முடியவில்லை..இதை எப்படி சரி செய்வது நண்பரே...

Reply

ப்யனுள்ள தகவல் பிரபு - பகிர்வினிற்கு நன்றி - ஆமாம் டிரைவ் H எனப் பதிவில் வருகிறது - அது G தானே !

நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

Reply

@ Ranjithkumar.D

அது Driver problem ஆக இருக்கக்கூடும்.

கடந்த பதிவில் "Device பிரச்சினைகள்" என்ற தலைப்பில் உள்ள தீர்வை படிக்கவும்.

இணைப்பு:

http://www.karpom.com/2012/05/why-my-computer-is-running-slow.html

Reply

@ cheena (சீனா)

நன்றி ஐயா, இப்போது மாற்றி விட்டேன்.

Reply

hii.. Niceeeeeee....... Post

Reply

usefull one tks fd

Reply

பயனுள்ள தகவல்............எனது கணனியில் pen drive வை போட்டதும் அதை எனது கணனி காட்ட மாட்டேங்கிறது.இதை எப்படி சரி செய்வது நண்பரே...

Reply

transcend pen drive என்றால் அவர்கள் தளத்தில் தீர்வை கேட்கலாம். வேறு கணினியில் வேலை செய்கிறதா?

http://www.karpom.com/2012/05/format-transcend-pen-drivememory-card.html

Reply

இல்லை எந்த கணினியிலும் வேலை செய்யவில்லை.............இதற்கு என்ன தான் வழி

Reply

Post a Comment