உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை | கற்போம்

உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை


சில முக்கியமான பதிவுகளை எழுதி முடித்து விட்டு, நாம் திரட்டிகளில் இணைப்பதற்குள் நம்மவர்கள் அதை சுட்டு, சுட சுட தங்கள் தளத்தில் பகிர்ந்து விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? பல சமயம் அவர்கள் நமக்கு இணைப்பு தருவதே இல்லை, அப்படி இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் நம் தளத்துக்கு ஒரு இணைப்பு தர முடிந்தால்? எப்படி செய்வது அதை?



*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது வைரை சதீஷ் 

1. முதலில் http://id.tynt.com என்ற இந்தத் தளத்திற்கு செல்லவும். 

2. இதில் publisher Sign Up என்ற பகுதியில் உங்கள் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல், தள முகவரி தரவும். 

3. இப்போது அடுத்த பக்கத்தில் Next தரவும். இதில் சில மாற்றங்கள் செய்யும் வசதி உள்ளது, அதை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை, விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம். 

4. இப்போது வரும் Coding ஐ உங்கள் Edit Template பகுதியில் சேர்க்க வேண்டும். 


Javascript நிரலை உங்கள் தளத்தில் நிறுவும் முறை:

• Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

•அதில் </head> என்ற Code-ஐ தேடவும்.

• தேடிய Code-க்கு முன்னால் நீங்கள் Copy செய்து வைத்திருக்கும் நிரலை PASTE செய்யவும்.

• SAVE TEMPLATE கொடுக்கவும் அவ்வளவு தான். 

5. இப்போது Tynt தளத்தில் Next கொடுத்து அடுத்த பக்கத்தில் Test My Script என்பதை கொடுத்து Verify செய்யவும். இது Success ஆனவுடன் Next தரவும். 

6. இப்போது SEO Report, Keyword Report, Social Share Report போன்றவற்றை நீங்கள் உங்கள் மின்னஞ்சல் மூலம் பேர வேண்டுமா என்று கேட்கும். இதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து விடுங்கள். 

இப்போது ஒருவர் உங்கள் பதிவை Copy/Paste செய்யும் போது உங்கள் பதிவின் இணைப்பு அதில் சேர்ந்து விடும். ஒருவர் உங்கள் பதிவை காபி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பும் போதும் இது நிகழும், இதனால் மின்னஞ்சலை படிப்பவர்கள், மற்ற பதிவுகளை படிக்க விரும்பினால், அதில் உள்ள பின் இணைப்பின் வழியே உங்கள் தளத்திற்கு வர முடியும்.

அத்தோடு Keyword Report என்ற வசதி மிகப் பெரிய பலனை தருகிறது. இதன் மூலம் உங்கள் வாசகர் உங்கள் தளத்தில் எதை தேடுகிறார்?, அதை எப்படி அடுத்த தளத்தில் பெறுகிறார்?, அதை உங்கள் தளத்தில் பகிர்ந்தால் உங்கள் வாசகர் உங்கள் தளத்திலேயே இருப்பார் என்று சொல்லுகிறது.

இது எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோ மூலம் காணலாம். 



முக்கியமாக தேடுபொறிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும், Alexa Rank போன்றவை இதன் மூலம் உயரும். 

Author Details:
வைரை சதீஷ் - பதிவுலகின் மிக இளையவரான இவர் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு தகவல்களை தனது தளத்தில் பகிர்கிறார். 

9 comments

தேவையான பதிவு வைரை சதீஷ்க்கு நன்றிகள்......

Reply

காப்பியடிப்பதை தடுக்க இதுவும் நல்ல வழிதான். சதீஸ் சகோவுக்கு நன்றி!

Reply

தம்பி சதீஷ் ....கலக்குரியப்பூ !

Reply

பயனுள்ள பதிவு ! நன்றி உங்களுக்கும், தம்பி வைரை சதீஷ்க்கும் .....

Reply

நன்றி அண்ணே

Reply

தேவையான தகவல்..
தகவலுக்கு நன்றி நண்பரே!

Reply

அந்த அளவுக்கு நான் பெரிய பதிவர் இல்லைங்கோ................

Reply

உபயோகமான பதிவு.

Reply

அன்பின் வைரை சதீஷ் - அரிதொரு தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment